வலை 3.0: உருவானது விக்கிபீடியா !

இணையத்தின் அங்கமான வலை, வளர்ச்சி அடையத்துவங்கிய காலத்தில் மென்பொருள் உலகில் ஓபன் சோர்ஸ் எனப்படும் திறவு மூல இயக்கமும் வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. மென்பொருளின் ஆதார அம்சங்கள் ரகசியமாக காக்கப்படுவதற்கு பதில் பகிரங்கமாக பகிரப்பட வேண்டும் எனும், ஓபன்சோர்சின் மைய கோட்பாடு, மென்பொருள் உலகில் பகிர்தல் சார்ந்த கூட்டு முயற்சிக்கு வித்திட்டிருந்தது. ஓபன்சோர்ஸ் மென்பொருள் வலை வளர்ச்சிக்கு பலவிதங்களில் உதவியதோடு, அதன் கோட்பாடும் பெரும் தாக்கம் செலுத்தியது. இப்படி ஓபன்சோர்ஸ் இயக்கத்தின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் ஜிம்மி […]

இணையத்தின் அங்கமான வலை, வளர்ச்சி அடையத்துவங்கிய காலத்தில் மென்பொருள் உலகில் ஓபன் சோர்ஸ் எனப்படும் திறவு மூல இயக்கமும் வே...

Read More »

விஞ்ஞான உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக ஐன்ஸ்டீன் உருவானது எப்படி?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிவியல் உலகின் ராக்ஸ்டராக திகழும் நட்சத்திர விஞ்ஞானி அவர். ஐன்ஸ்டீனுக்கு முன் எண்ணற்ற விஞ்ஞானிகளை உலகம் கண்டிருந்தாலும், ஒரு திரை நட்சத்திற்கு ஈடான புகழையும், ஈர்ப்பையும் வெகுமக்கள் மத்தியில் கொண்டிருந்த முதல் சூப்பர் ஸ்டார் விஞ்ஞானியாக ஐன்ஸ்டீன் விளங்குகிறார். ஐன்ஸ்டீன் பெயரை கேட்டதுமே, நவீன அறிவியலுக்கு அடிப்படையாக விளங்கும் அவரது கோட்பாடுகளை அறிந்தவர்கள் மட்டும் அல்ல, அவரது அறிவியலின் அடிப்படையை அறியாதவர்கள் கூட, வியப்பும், மதிப்பும் கொள்கின்றனர். விஞ்ஞான உலகில், ஐன்ஸ்டீனுக்கு […]

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிவியல் உலகின் ராக்ஸ்டராக திகழும் நட்சத்திர விஞ்ஞானி அவர். ஐன்ஸ்டீனுக்கு மு...

Read More »

வாட்ஸ் அப் உளவு மென்பொருள் விககாரத்தில் நடந்தது என்ன?

வாட்ஸ் அப் மூலம் அனுமதி இல்லாமல் நிறுவப்பட்ட உளவு மென்பொருளால், 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாட்ஸ் அப் பயனாளிகளின் தனிப்பட்ட நடவடிக்கைகள் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையையும், பயனாளிகள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த உளவு விவகாரத்தில், இந்தியாவைச்சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வாட்ஸ் அப் பயனாளிகள், உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்டது எப்படி, இந்த தாக்குதலுக்கு காரணம் என்ன, இதன் எதிர்கால […]

வாட்ஸ் அப் மூலம் அனுமதி இல்லாமல் நிறுவப்பட்ட உளவு மென்பொருளால், 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாட்ஸ் அப் பயனாளிகளின்...

Read More »

செல்பேசி இதழியலின் தோற்றம்

இதழியல் துறை தான் எத்தனை வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. செல்பேசி அறிமுகமான காலத்தில், அந்த சாதனம் பெரும்பாலும் இடைஞ்சலாக கருதப்பட்டது. தகவல் தொடர்பிற்கு செல்பேசி பயனுள்ளதாக அமைந்தாலும், நிகழ்ச்சிகள், மாநாடுகள் போன்றவற்றில் அது குறுக்கீட்டிற்கான சாதனமாகவே கருதப்பட்டது. அந்த கால கட்டத்தில் நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும், செய்தியாளர்கள் சந்திப்புகளிலும், உங்கள் செல்போனை அனைத்து வைக்கவும் அல்லது மவுனமாக வைத்திருக்கவும் என துவக்கத்தில் வேண்டுகோள் விடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. முக்கிய மாநாடுகள் எனில் ஜாமர் சாதனங்கள் மூலம் செல்பேசி […]

இதழியல் துறை தான் எத்தனை வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. செல்பேசி அறிமுகமான காலத்தில், அந்த சாதனம் பெரும்பாலும் இட...

Read More »

வலை 3.0: தீபாவளியும், முதல் இந்திய இணையதளமும்!

இந்தியாவேர்ல்டு இணையதளத்தை நினைவில் இருக்கிறதா? இணையம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்தியர்கள் மத்தியில் உண்டாக்கிய ஆரம்ப கால இணையதளங்களில் இதுவும் ஒன்று. பல விதங்களில் முன்னோடி இந்திய தளம்! இந்தியாவேர்ல்டு அறிமுகமான கால கட்டத்தில், இந்திய இணைய பரப்பில் செய்தி தளங்கள் இல்லை. இந்திய இணையதளங்களே இல்லை என்றும் கூட சொல்லிவிடலாம். தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட இந்தியர்கள் மத்தியில் மட்டுமே இணைய பயன்பாடு இருந்தது. அவர்கள் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருந்தது. இந்த பின்னணியில், […]

இந்தியாவேர்ல்டு இணையதளத்தை நினைவில் இருக்கிறதா? இணையம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்தியர்கள் மத்தியி...

Read More »