Tagged by: animation

பனிக்கட்டி மிதக்கும் அறிவியலை விளக்கும் இணையதளம்  

மிதக்கும் பனிப்பாறை வடிவங்களை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். இப்போது உங்கள் நினைவாற்றலை கொண்டு கடலில் மிதக்கும் பனிப்பாறை ஒன்றை வரையுங்கள் பார்க்கலாம். அநேகமாக நீங்கள் வரைந்ததில் ஒரு பிழை இருக்கலாம். காட்சி பிழை அல்ல- அறிவியல் பிழை! அப்படி என்ன பிழை என்பதை தெரிந்து கொள்ள ஐஸ்பர்ஜர் (https://joshdata.me/iceberger.html ) இணையத்தில் சென்று மீண்டும் ஒரு முறை பனிப்பாறை அல்லது பனிக்கட்டி உருவத்தை வரைந்து பார்க்கவும். இப்போது சின்னதாக ஒரு மாயம் நிகழ்வதை நீங்கள் பார்க்கலாம். […]

மிதக்கும் பனிப்பாறை வடிவங்களை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். இப்போது உங்கள் நினைவாற்றலை கொண்டு கடலில் மிதக்கும்...

Read More »

ஒரு அனிமேஷன் குறும்படமும், இணைய கண்டறிதல் ரகசியமும்!

அலைக் (http://alike.es/ ) என்றொரு அனிமேஷன் குறும்படம் இருக்கிறது. இந்த படம் பற்றி மட்டுமே தனியே எழுதலாம். பார்த்தவுடன், அட அற்புதமாக இருக்கிறதே என பாராட்டுவதோடு மற்றவர்களுக்கும் பரிந்துரை வைக்கும் படமாக இது அமைகிறது. அலைக் படம் அளிக்கும் ஆச்சர்யத்திற்கு நிகராக இந்த படம் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களில் தான் என் மனம் லயிக்கிறது. விமியோ தளத்தில் அறிமுகம் செய்து கொண்ட இந்த படம் தொடர்பான மேலதிக தேடலில் தான் எத்தனை அருமையான தளங்களை அறிந்து […]

அலைக் (http://alike.es/ ) என்றொரு அனிமேஷன் குறும்படம் இருக்கிறது. இந்த படம் பற்றி மட்டுமே தனியே எழுதலாம். பார்த்தவுடன்,...

Read More »

உலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்

அலையும் ஆல்பட்ராஸ் பறவை, கடலோர செம்மரம், பேடோபைரன் தவளை, அமேசான் அல்லி பற்றி எல்லாம் உங்களுக்குத்தெரியுமா? இவை எல்லாம், இன்றைய கூகுள் டுடூலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள். உலக பூமி தினத்தை ( ஏப்ரல் 22 ) கொண்டாடும் வகையில் கூகுள் இந்த பிரத்யேக டூடுலை உருவாக்கியுள்ளது. பூமி தினத்தின் மைய செய்தியான உலகின் இயற்கை வளத்தின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், தனிச்சிறப்பு மிக்க உயிரினங்களை தேர்வு செய்து அவற்றை தனது முகப்பு பக்க டுடூல் சித்திரத்தில் இடம்பெற […]

அலையும் ஆல்பட்ராஸ் பறவை, கடலோர செம்மரம், பேடோபைரன் தவளை, அமேசான் அல்லி பற்றி எல்லாம் உங்களுக்குத்தெரியுமா? இவை எல்லாம்,...

Read More »

டெக் டிக்‌ஷனரி- 9 ; ஜிப் (GIF) – கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்

ஜிப் என்பது அடிப்படையில் ஒரு கோப்பு வடிவம். ஆங்கிலத்தில் கிராபிக்ஸ் இண்டர்சேஞ்ச் பார்மெட் என்கின்றனர். தமிழில் கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம். இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட வடிவம். தொழிநுட்ப நோக்கில் சொல்வது என்றால் ஒரு வகையான பிட்மேப் இமேஜ் வடிவம். 1987 ல் கம்ப்யூசர்வ் எனும் நிறுவனம் தனது செய்தி பலகை சேவைக்காக இந்த வடிவத்தை அறிமுகம் செய்தது. அதன் பிறகு வலை (Web ) உலகில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல்மயமாக்கலின் தேவையாக உருவான […]

ஜிப் என்பது அடிப்படையில் ஒரு கோப்பு வடிவம். ஆங்கிலத்தில் கிராபிக்ஸ் இண்டர்சேஞ்ச் பார்மெட் என்கின்றனர். தமிழில் கிராபிக்ஸ...

Read More »

பிளேஷ் மூடுவிழா அறிவிப்பும், இணைய வரலாறு கவலையும்!

பழையன கழிதல் என்பது மென்பொருள் சேவைகளுக்கும் பொருந்தும் தான். அதிலும் இணைய தொழில்நுட்பம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பழைய மென்பொருள் சேவைகள் காலாவதியாகி கைவிடப்படும் நிலை ஏற்படுவது இயற்கையானது தான். இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் அடோப் பிளேஷ் மென்பொருளுக்கும் இது தான் நிகழ இருக்கிறது. பிளேஷ் மென்பொருளுக்கு விடை கொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் அண்மையில் அறிவித்ததை நீங்களும் கவனித்திருக்கலாம். இது தொடர்பாக அடோப் வெளியிட்ட அறிவிப்பில், பிளேஷ் மென்பொருள் வாழ்க்கையை முடிக்க இருப்பதாக […]

பழையன கழிதல் என்பது மென்பொருள் சேவைகளுக்கும் பொருந்தும் தான். அதிலும் இணைய தொழில்நுட்பம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கும...

Read More »