Tagged by: click

தமிழில் ஆட்சென்ஸ் சேவை – என்ன எதிர்பார்க்கலாம்!

தமிழில் உள்ளட்டகத்தை உருவாக்குபவர்களும், வலைப்பதிவு செய்பவர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அறிவிப்பை கூகுள் அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆட்சென்ஸ் விளம்பர சேவையின் ஆதரவு பெற்ற மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adsense.googleblog.com/2018/02/AdSense-now-supports-Tamil.html  இந்த செய்தி தமிழ் இணைய உலகில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக வலைப்பதிவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியும், நிம்மதி பெருமூச்சும் வெளிப்பட்டிருக்கிறது. ஏனெனில் இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் வருவாய் ஈட்டுவதற்கான வழியாக இது அமைந்திருப்பது தான். இணைய உலகில் புழங்குபவர்களுக்கு கூகுளின் […]

தமிழில் உள்ளட்டகத்தை உருவாக்குபவர்களும், வலைப்பதிவு செய்பவர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அறிவிப்பை கூகுள் அண்மை...

Read More »

கற்றலில் உதவும் வீடியோக்கள்

இணையத்தில் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டும் அல்ல, பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் கல்வி வீடியோக்களும் அநேகம் இருப்பது தெரிந்த விஷயம் தான். இத்தகைய கல்வி சார்ந்த வீடியோக்களை தேடித்தரும் இணையதளங்களும் இருக்கின்றன. கிளாஸ்ஹுக் தளமும், கல்வி சார்ந்த வீடியோக்களை தேடித்தருகிறது என்றாலும், முற்றிலும் புதுமையான முறையில் இதை நிறைவேற்றுகிறது. இந்த தளம், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும் திரைப்பட கிளிப்களை அடையாளம் காட்டுகிறது. திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சியில், கணிதம், அறிவியல் மற்றும் உலக நடப்புகள் சார்ந்த உரையாடல்கள் […]

இணையத்தில் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டும் அல்ல, பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் கல்வி வீடியோக்களும் அநேகம் இருப்பது தெரிந...

Read More »

இசை கேட்கும் இணையதளம்

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கேட்டக்கொண்டே இருப்பது இனிமையான அனுபவம் தான். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், ஃபோகஸ்மியூசிக்.எப்.எம் இணையதளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஏனெனில் இது இசை கேட்கும் இணைதளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள மியூசிக் பிளேயரை கிளிக் செய்தால் போதும் மேற்கத்திய இசை பாடல் ஒலிக்கத்துவங்கும். வரிசையாக பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டு ரசித்தபடி நமது வேலையில் […]

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கே...

Read More »

டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா?

தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கூகுளை தான் தேடலுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என பலரும் கூறலாம் ஆனால்,கூகுளைத்தவிரவும் பல தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?எல்லாம் தெரியும்,ஆனால் எந்த தேடியந்திரமும் கூகுளுக்கு நிகராக முடியாது என பதில் சொல்வதற்கு முன் டக்டக்கோ தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும். கொஞ்சம் விநோதமான பெயர் கொண்ட டக்டக்கோ மாற்று தேடியந்திரங்களின் வரிசையில் முதலில் வருகிறது.கூகுளுக்கு […]

தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந...

Read More »

ஆன் –லைன் விற்பனையில் வீடு வாங்கலாமா?

இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் இந்தியாவில் பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் அறிமுகமாகி இருக்கிறது. மின் வணிகம் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்திருப்பதோடு,மின் வணிகம் மூலம் வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலில் விரிவடைந்திருக்கிறது. இந்த பட்டியலில் இப்போது ரியல் எஸ்டேட்டும் சேர்ந்திருக்கிறது. ஆம், லட்சக்கணக்கில் மதிப்பு உள்ள வீடுகளையும் இப்போது மவுஸ் கிளிக்கில் வாங்கும் நிலை வந்திருக்கிறது.ஸ்மார்ட்போன்களுக்கும் ,ஆடைகளுக்கும் ஆன் –லைனில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுவது போல வீடுகளும் ஆன் –லைன் மூலம் அதிரடியாக விற்கப்படுகிறது. கடந்த […]

இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் இந்தியாவில் பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் அறிமுகமாகி இருக்கிறது. மின் வணிகம்...

Read More »