Tagged by: google

இணையத்தில், கொரோனா தகவல்களை தேடுவது எப்படி?

மாற்று தேடியந்திரமான டக்டக்கோ பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகிறேன். கூகுள் போல விளம்பர வலை விரிக்காமல், பயனாளிகளின் தனியுரிமையை (பிரைவசி) மதிக்கும் தேடியந்திரமாக டக்டக்கோ இருப்பதே இதற்கு காரணம். இப்போது, கொரோனா அலைக்கு நடுவே, டக்டகோ செயல்பாடு எப்படி இருக்கிறது என பார்க்கலாம். டக்டகோவுக்குள் நுழைந்து, கொரோனா தொடர்பான தகவல்களை தேடலாம் என்று பார்த்தால், முகப்பு பக்கத்திலேயே, கோவிட்-19 தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள், குறிப்புகளை நாடுங்கள் என தானாக வழிகாட்டுகிறது. கோவிட்-19 பக்கத்திற்கான இணைப்பில் […]

மாற்று தேடியந்திரமான டக்டக்கோ பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகிறேன். கூகுள் போல விளம்பர வலை விரிக்காமல்,...

Read More »

கைகழுவும் பழக்கத்தை அறிமுகம் செய்த முன்னோடி மருத்துவரை கவுரவிக்கும் கூகுள் டூடுல்

உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான சிறந்த தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கைகளை கழுவுவது வலியுறுத்தப்படும் நிலையில், கை கழுவும் செயலை மருத்துவ நோக்கில் முதன் முதலில் பரிந்துரைத்த முன்னோடி மருத்துவர் இக்னாஸ் செமல்வெய்சை கவுரவிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. கூகுள் தேடியந்திரத்தின் முகப்பு பகத்தில் அதன் லோகோவில் இடம்பெற்றுள்ள இந்த அனிமேஷன் டூடுலில், சரியாக கை கழுவுவது எப்படி என்பதற்கான காட்சி விளக்கம் இடம் பெற்றுள்ளது. அனிமேஷனில், மீசையுடன் […]

உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான சிறந்த தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கை...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்- 12 கூகுள் வரைபடத்தை ஏமாற்றிய டிஜிட்டல் கலைஞர் செய்தியின் நிஜ பின்னணி தெரியுமா?

99 போன்கள் ( 99 phones ) என்பது கூகுளில் தேடப்படும் பதமாகி இருக்கிறது. 99 என டைப் செய்யும் போதே கூகுள் 99 போன்கள் என்பதையும் தனது பரிந்துரையில் சேர்த்திருப்பதில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம். அதற்கேற்பவே, இந்த பதத்திற்கான தேடல் பட்டியலில், கலைஞர் ஒருவர் 99 போன்களை கொண்டு கூகுள் வரைபட சேவையை ஏமாற்றி இல்லாத போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி காட்டிய தொழில்நுட்ப விளையாட்டு தொடர்பான செய்திகள் முன்னிலை பெறுவதையும் பார்க்கலாம். விதவிதமான தலைப்புகளில் இந்த செய்தி […]

99 போன்கள் ( 99 phones ) என்பது கூகுளில் தேடப்படும் பதமாகி இருக்கிறது. 99 என டைப் செய்யும் போதே கூகுள் 99 போன்கள் என்பதை...

Read More »

டக்டக்கோவுக்கு போட்டியாக புதிய தேடியந்திரம்

இந்தியர்கள் கூகுளுக்கும், பேஸ்புக்கிற்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டவர்கள் போல மாற்று தேடியந்திரங்களையோ அல்லது மாற்று சமூக வலைப்பின்னல் சேவைகளையோ கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது என தெரிவிப்பதில் எந்த பயனும் இல்லை. ஆனால் தமிழர்கள் காட்டக்கூடிய அலட்சியத்தை மீறி, ஒன்சர்ச் தேடியந்திரம் பற்றி அறிமுகம் செய்வது அவசியம் என்றே நினைக்கிறேன். ஏனெனில், வழக்கமாக புதிய தேடியந்திரங்கள் வர்ணிக்கப்படுவது போல, கூகுளுடன் ஒப்பிடப்படாமல் டக்டக்கோவுடன் இணைத்து ஒன்சர்ச் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது கவனிக்க […]

இந்தியர்கள் கூகுளுக்கும், பேஸ்புக்கிற்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டவர்கள் போல மாற்று தேடியந்திரங்களையோ அல்லது ம...

Read More »

நான் ஏன் கூகுளின், இந்த ஆண்டு அதிகம் தேடிய பட்டியலை நிராகரிக்கிறேன்?

இணையத்தில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை கூகுள் அண்மையில் வெளியிட்டது. இதே பட்டியலை இந்திய அளவிலும் வெளியிட்டுள்ளது. இது ஒரு வருடாந்திர நிகழ்வு தான். ஒவ்வொரு ஆண்டும் கூகுள், இதே போல அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கூகுளின் இந்த தேடல் பட்டியல், ஊடகங்களிலும் சரி, பொதுவாக மக்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. இந்த ஆண்டு இந்தியர்கள் தேடியது எதை எல்லாம் தெரியுமா? என்பது போன்ற தலைப்புடன் ஊடகங்கள் […]

இணையத்தில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியலை கூகுள் அண்மையில் வெளியிட்டது. இதே பட்டியலை இந்திய அளவிலும் வ...

Read More »