Tagged by: internet

இருத்தலியல் தத்துவம் சொல்லும் வலை 2.0 கார்ட்டூன்

இணையத்தின் பங்கேற்பு தன்மையை குறிக்கும் வலை 2.0 கருத்தாக்கத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கின்றன. தட்டையான தன்மை கொண்ட முதல் தலைமுறை இணையதளங்களில் இருந்து வேறுபட்ட துடிப்பான தன்மை கொண்ட இரண்டாம் தலைமுறை இணையதளங்களை வலை 2.0 உணர்த்துவதாக கருதப்படுகிறது. வலை 2.0 சமூக ஊடகங்களின் எழுச்சியையும் உள்ளடக்கியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக வலை 2.0 சர்ச்சைக்குறியது இல்லை என்றாலும் தீவிர விவாதத்திற்கு உரியது. இப்போது மூன்றாம் தலைமுறை தளங்களின் காலம் என சொல்லப்படும் நிலையில், […]

இணையத்தின் பங்கேற்பு தன்மையை குறிக்கும் வலை 2.0 கருத்தாக்கத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கின்றன. தட்டையான தன்மை கொண்...

Read More »

இணையத்தில் பின்பற்ற வேண்டிய பொன் விதிகளை விளக்கும் வீடியோ

இணையம் பரவலாக பயன்பாட்டிற்கு வரத்துவங்கிய காலத்தில், நெடிக்கட் (Netiquette ) எனும் பெயரில் இணைய பயன்பாட்டிற்கான பொன் விதிகள் முன் வைக்கப்பட்டன. எடிக்கட் என குறிப்பிடப்படும், சமூகத்தில் நடந்து கொள்வதற்கான நெறிமுறைகளை ஒட்டி, இணையம் எனும் வலைப்பின்னல் பயன்பாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டும் வகையில் முன் வைக்கப்பட்ட நடத்தை நன்னெறிகள் நெடிக்கட் என குறிப்பிடப்பட்டன. மனிதர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனத்துவங்கும் இந்த நெறிமுறைகளை இணைய பயன்பாட்டிற்கான பொன்விதிகளாக கருதலாம். விர்ஜினியா ஷியா […]

இணையம் பரவலாக பயன்பாட்டிற்கு வரத்துவங்கிய காலத்தில், நெடிக்கட் (Netiquette ) எனும் பெயரில் இணைய பயன்பாட்டிற்கான பொன் வித...

Read More »

உலகின் முதல் சர்ச் இஞ்சின் எது தெரியுமா?

ஆர்ச்சி தான் இணைய உலகின் முதல் தேடியந்திரமாக கருதப்படுகிறது. ஆலன் எம்டேஜ் இந்த தேடியந்திரத்தை உருவாக்கினார். 1990 அறிமுகமான ஆர்ச்சி, தேடியந்திரம் என்றால் அறியப்படும் கூகுளுக்கு முன் உருவானது என்பது மட்டும் அல்ல, வெப் என அறியப்படும் வலைக்கு முன் உருவான தேடியந்திரம். ஆர்ச்சி, எப்டிபி கோப்புகளை மட்டுமே தேடித்தரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. நவீன தேடியந்திரங்களோடு ஒப்பிடும் போது ஆர்ச்சி தேடிய கோப்புகள் எண்ணிக்கை அற்ப சொற்பம் என்றாலும்,கோப்புகளை தானியங்கி முறையில் திரட்டி, பட்டியலிட்டு அவற்றிலிருந்து பொருத்தமானதை […]

ஆர்ச்சி தான் இணைய உலகின் முதல் தேடியந்திரமாக கருதப்படுகிறது. ஆலன் எம்டேஜ் இந்த தேடியந்திரத்தை உருவாக்கினார். 1990 அறிமுக...

Read More »

யூடியூப்பில் புதிய பயணம்

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக யூட்யூப் பயணத்தை துவங்கியிருக்கிறேன். முதல் வீடியோ தமிழர் திருநாளான பொங்கல் அன்று வெளியாகியுள்ளது. இணைய வரலாற்றில் இருந்து துவங்கும் வகையில், புகழ் பெற்ற இணைய கார்ட்டூன் தொடர்பான விளக்கத்தில் இருந்து துவங்கியுள்ளேன்.1993ல் வெளியான இந்த கார்ட்டூன் இன்னமும் பொருத்தமாக இருப்பது தான் வியப்பானது. நண்பர்கள் வீடியோவை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். சானலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்கவும் வேண்டுகிறேன். […]

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக...

Read More »

பேஸ்புக், ஸ்னேப்சாட் கணக்கு வைத்திருக்கும் இணைய நாய்

எவர் ஒருவரையும் நோக்கி ‘நீங்கள் நாயா?’ என கேட்பது அநாகரீகம் மட்டும் அல்ல அநியாயமும் தான். ஆனால், இணையத்தில் இதே கேள்வி கேட்பது பொருத்தமானது என்பது மட்டும் அல்ல, மிகவும் பொருள் பொதிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? இணைய நாய் உணர்த்தும் இந்த அர்த்தத்தை உணர வேண்டும் என்றால், இணைய நாய் கார்ட்டூன் தொடர்பான விக்கிபீடியா கட்டுரை வழிகாட்டும். இந்த கார்ட்டூன் தொடர்புடைய ரெட்டிட் விவாத சரடு இதை இன்னும் அழகாக உணர்த்துகிறது. நிற்க, இணைய நாய் […]

எவர் ஒருவரையும் நோக்கி ‘நீங்கள் நாயா?’ என கேட்பது அநாகரீகம் மட்டும் அல்ல அநியாயமும் தான். ஆனால், இணையத்தில் இதே கேள்வி க...

Read More »