Tagged by: internet

வர்த்தக பேரரசாக கனவு கண்ட இணையதளம்!

பிஸ்னஸ்.காம் இணையதளத்தால் நீங்கள் கவரப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அந்த தளத்தில் நுழைந்தால், நவீன கால வடிவமைப்பை மீறி, அதன் தோற்றமும், உள்ளடக்க அமைப்பும் அலுப்பூட்டலாம். வர்த்தக நிறுவனங்களை இலக்காக கொண்ட எண்ணற்ற இணையதளங்களில் இன்னொரு இணையதளம் இது என்ற எண்ண, ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், பிஸ்னஸ்.காம் இணையத்தின் இன்னொரு இணையதளம் அல்ல. அது, இணைய வரலாற்றின் மைல்கற்களில் ஒன்று. அதன் கடந்த காலம் இணைய வரலாற்றின் பொற்கால பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, […]

பிஸ்னஸ்.காம் இணையதளத்தால் நீங்கள் கவரப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அந்த தளத்தில் நுழைந்தால், நவீன கால வடிவமைப்பை மீறி, அ...

Read More »

வலையின் முதல் ஆசிரியர்

இன்று இணைய வடிவமைப்பு தொடர்பான புத்தகங்களை தேடினால், நூற்றுக்கணக்கான புத்தகங்களை கூகுள் அடையாளம் காட்டுகிறது. புத்தக கடைகளில் தேடினாலும், இந்த தலைப்பிலான புத்தகங்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால், இணையத்தை அணுகுவதற்கான புதிய வசதியாக ‘வலை’ எனப்படும் வெப் அறிமுகமான போது, இணையதளங்கள் என்பதே புதிய கருத்தாக்கமாக இருந்தது. எனவே, இணையதள வடிவமைப்பு குறித்து எந்த வழிகாட்டி புத்தகமும் இருக்கவில்லை. இந்த குறையை லிண்டா வெயின்மேன் (Lynda Weinman ) நன்கு உணர்ந்திருந்தார். அதுவே அவரது வாழ்க்கையை […]

இன்று இணைய வடிவமைப்பு தொடர்பான புத்தகங்களை தேடினால், நூற்றுக்கணக்கான புத்தகங்களை கூகுள் அடையாளம் காட்டுகிறது. புத்தக கடை...

Read More »

இணைய கண்டறிதலை துவக்கி வைத்த, ’கூல் சைட் ஆப் த டே’ தளம்

இன்றைய குளிர்ச்சியான இணையதளம் என்பது அத்தனை ஈர்ப்புடைய வாசகமாக இல்லை. ஆனால், இணையம் பிரபலமாகத்துவங்கிய காலத்தில், இந்த பொருள்பட அமைக்கப்பட்ட இணையதளம் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போது நினைத்துப்பார்ப்பது கடினம் தான். ’கூல் சைட் ஆப் த டே’ தான் அந்த இணையதளம். 1994 ம் ஆண்டு அறிமுகமான போது, இந்த தளம், உடனடியாக வரவேற்பை பெற்று செல்வாக்கு மிக்க தளமாக மாறியது. இந்த தளத்தை இணையவாசிகளும் ஆர்வத்தோடு அணுகின்றர். அதே நேரத்தில் இணையதள உருவாக்குனர்களும், ( வெப் […]

இன்றைய குளிர்ச்சியான இணையதளம் என்பது அத்தனை ஈர்ப்புடைய வாசகமாக இல்லை. ஆனால், இணையம் பிரபலமாகத்துவங்கிய காலத்தில், இந்த ப...

Read More »

எழுத்தாளர் சுஜாதா உண்மையில் ஒரு ஜீனியசா?

எழுத்தாளர் சுஜாதா, இணையம் பற்றி தமிழில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். சுஜாதாவின் பல தொழில்நுட்பக்கட்டுரைகள் வியக்க வைக்க கூடியவை. ஆனால் பல நேரங்களில் சுஜாதாவின் அறிவு கீற்றாக வெளிப்படுவதை நினைத்து வியப்பதா அல்லது மேலதிக தகவல்களை சொல்லாமல் விட்டுச்செல்லும் தன்மையை நினைத்து நொந்துக்கொள்வதா? என்று தடுமாறத்தோன்றும். இண்டோநெட் பற்றி சுஜாதாவின் ஒற்றை குறிப்பும் இத்தகையை நிலை தான் உண்டாக்குகிறது. இண்டோநெட் எனும் வார்த்தையை முதல் முறையாக கேள்விபடுவதாக இருந்தால், சுஜாதாவுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். மனிதர் 1992 […]

எழுத்தாளர் சுஜாதா, இணையம் பற்றி தமிழில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். சுஜாதாவின் பல தொழில்நுட்பக்கட்டுரைகள் வியக்க வைக்க...

Read More »

டெக் டிக்ஷனரி- 22 சர்ஃபிங் (surfing )- இணைய உலாவுதல்

இணையமும், வலையும் பல புதிய வார்த்தைகளை வாரி வழங்கியிருக்கின்றன.. அதே நேரத்தில், பல தொன்மையான வார்த்தைகளின் அர்த்தத்தையும் மாற்றியிருக்கின்றன அல்லது இணைய மொழியில் சொல்வது எனில் அப்டேட் செய்திருக்கின்றன. இப்படி, இணையம்+ வலையால் புதுப்பிக்கப்பட்ட வார்த்தைகளின் வரிசையில் தான் சர்ஃபிங் எனும் ஆங்கில சொல் வருகிறது. பாரம்பரிய பொருள் படி பார்த்தால் சர்ஃபிங் என்றால், கடல் அலை மீது சறுக்குதல் என அர்த்தம். ஆனால், 1990 களுக்குப்பிறகு, இந்த சொல்லுக்கு இணையத்தில் உலாவுதல் என பொருள் கொள்ளப்படுகிறது. […]

இணையமும், வலையும் பல புதிய வார்த்தைகளை வாரி வழங்கியிருக்கின்றன.. அதே நேரத்தில், பல தொன்மையான வார்த்தைகளின் அர்த்தத்தையும...

Read More »