Tagged by: internet

இணையத்தின் ஆகச்சிறந்த 25 இணையதளங்கள்

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் சில தளங்கள் வடிவமைப்பில் முன்னுதாரணங்களாக இருக்கும். இவற்றுக்கு நடுவே அலங்கார அம்சங்கள் எதுவும் இல்லாமல் நோக்கத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் தளங்களும் இருக்கின்றன. உள்ளடக்கம், நோக்கம், வடிவமைப்பு என எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்கும் தளங்களும் இருக்கின்றன. இன்னும் சில இணையதளங்கள், குறிப்பிட்ட துறை அல்லது பிரிவில் மட்டும் சிறந்துவிளங்குபவையாக இருக்கலாம். இவைத்தவிர இணைய பதர்கள் என அலட்சியம் […]

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் ச...

Read More »

அமேசான் செய்த படுகொலை- அலெக்சா நினைவு குறிப்புகள்!

அலெக்சா சேவை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் வெளியிட்ட போது, இணையத்தில் சின்னதாக கூட ஒரு போராட்டம் இல்லாமல் போனது கொஞ்சம் வேதனையானது தான். பழைய இணையம் என்றால், அலெக்சாவை மீட்டெடுப்போம் என்று போராட்டம் நடத்தியிருப்பார்கள். அல்லது, யாரேனும் சில டெவலப்பர்கள் அலெக்சா சேவையை அமேசான் உதவியின்றி தொடர்வதற்கான திட்டத்தை அறிவித்திருப்பார்கள். ஆனால், அதிக சளசளப்பு இல்லாமல், அலெக்சா இணைய கண்காணிப்பு தகவல் சேவை மூடப்பட்டு இப்போது மறக்கப்பட்டு விட்டது. இணையத்தின் ஆரம்ப கால […]

அலெக்சா சேவை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் வெளியிட்ட போது, இணையத்தில் சின்னதாக கூட ஒரு ப...

Read More »

பெண்ணியம் பேசும் சாட்பாட்!

சாட்பாட்களில் சமூகபாட்கள் என ஒரு ரகம் இருக்கிறது. வர்த்தக நோக்கில் அல்லது பிரச்சார நோக்கில் உருவாக்கப்படும் சாட்பாட்களுக்கு பதிலாக மக்களோடு சமூக நோக்கில் உரையாடுவதற்காக உருவாக்கப்படும் சாட்பாட்களை இவ்வாறு குறிப்பிடலாம். வணிக அல்லது பிரச்சார பாட்களில் இருந்து சமூக பாட்கள் மற்றொரு முக்கிய விதத்திலும் வேறுபடுகின்றன. இந்த பாட்கள் தங்கள் அடையாளத்தை அல்லது நோக்கத்தை மறைத்துக்கொண்டு பின்னணியில் இயங்காமல், இவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, இவற்றின் செயல்பாடுகளும் திறந்த தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சமூகபாட்களுக்கான அருமையான […]

சாட்பாட்களில் சமூகபாட்கள் என ஒரு ரகம் இருக்கிறது. வர்த்தக நோக்கில் அல்லது பிரச்சார நோக்கில் உருவாக்கப்படும் சாட்பாட்களுக...

Read More »

’பிங்’கில் இருந்து விடுதலை பெற்ற ’பிரேவ்’ தேடியந்திரம்: கூகுளுக்கு சொல்லுங்கள் குட்பை

’பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா !’ என்பதை போல, மாற்று தேடியந்திரமான பிரேவ், பிங்கின் தளைகளில் இருந்து விடுபட்டு முழுமுதல் தேடியந்திரமாகி இருப்பதாக அறிவித்துள்ளது. நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய அறிவிப்பு தான். ஏனெனில், பிங்கின் தேடல் பட்டியலை சார்ந்திராமல் இனி பிரேவ் முழு சுதந்திரமாக இயங்கும். பிரேவின் இந்த அறிவிப்பு ஏன் முக்கியமானது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், பிரேவ் தேடியந்திரத்தை அறியாதவர்களுக்கும், அறிந்தும் அலட்சியம் செய்தவர்களுக்கும் பிரேவ் பற்றிய சுருக்கமான அறிமுகம் அவசியம். மாற்று […]

’பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா !’ என்பதை போல, மாற்று தேடியந்திரமான பிரேவ், பிங்கின் தளைகளில் இருந்து விடுபட்டு முழு...

Read More »

ஏஐ மூலம் இசை அமைக்க ஒரு இணையதளம்

வலைப்பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்கள் எல்லோரையும் உள்ளட்ட உருவாக்குனர்களாக மாற்றியுள்ள நிலையில் இப்போது ஏஐ வீசும் ஏஐ அலை எல்லோரையும், எல்லாவற்றையும் உருவாக்கி கொள்ள வழி செய்வதாக அமைந்துள்ளது. அண்மை உதாரணம், கேஸெட்.ஏஐ (https://cassetteai.com/ ). இந்த தளம், உங்களுக்கான கனவு இசையை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள் என்கிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படுவதாக சொல்லப்படும் இந்த தளத்தில் பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ற இசையை உருவாக்கி கொண்டு காப்புரிமை கவலை இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். உருவாக்கப்படும் இசை, எந்த […]

வலைப்பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்கள் எல்லோரையும் உள்ளட்ட உருவாக்குனர்களாக மாற்றியுள்ள நிலையில் இப்போது ஏஐ வீசும் ஏஐ அலை எல்...

Read More »