Tagged by: twitter

எல்லையிலாமல் டிவிட்டர் செய்ய!

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள டிவிஷார்ட் தளம் உதவுகிறது. இதே போல இன்னொரு சேவையும் இருக்கிறது.இசிடிவீட்ட்ஸ் என்னும் அந்த தளம் 140 எழுத்துக்களுக்கும் மேல் கொண்ட செய்திகளை டிவிட்டரில் வெளியிட உதவுகிறது. சில நேரங்களில் 140 எழுத்துக்கள் போதாது என்னும் வாசக‌த்தை முன் வைக்கும் இந்த தளம் அத்தகைய தருணங்களில் எந்த வரம்பும் இல்லாத செய்திகளை வெளியிட கைகொடுக்கிறது. […]

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்க...

Read More »

டிவிட்டர் தேடியந்திரம்

டிவிட்டர் பிரபலமாக துவங்கிய காலத்தில் டிவிட்டர் சார்ந்த தேடியந்திரங்கள் போட்டி போட்டுக்கொண்டி அறிமுகமாயின.டிவிட்டரின் உடனடி தன்மையை கருத்தில் கொண்டு இப்போதைய தகவல்களை தேடித்தருவதில் கவனம் செலுத்தும் வகையில் டிவிட்டர் தேடியந்திரங்கள் அறிமுகமாயின.இவற்றோடு ரியல் டைம் சர்ச் என்னும் கருத்தாக்கமும் பிறந்தது. ரியல் டைம் சர்ச் கருத்தாக்கம் இன்னமும் இருக்கிறது.ஆனால் பல ரியல் டைம் தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்டன. இன்னமும் தொடரும் டிவிட்டர் தேடியந்திரங்களில் டிவீட் ஸ்கேன் தேடியந்திரமும் ஒன்று.வடிவமைப்பை பொருத்தவரை கூகுல் போலவே இருக்கும் இந்த தேடியந்திரத்தில் […]

டிவிட்டர் பிரபலமாக துவங்கிய காலத்தில் டிவிட்டர் சார்ந்த தேடியந்திரங்கள் போட்டி போட்டுக்கொண்டி அறிமுகமாயின.டிவிட்டரின் உட...

Read More »

பின்ட்ரெஸ்ட்;ஒரு அறிமுகம்.

பின்ட்ரெஸ்ட் செய்திகளில் அடிபடும் வேகத்தை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது.இணையத்தில் எங்கு பார்த்தாலும் இப்போது பின்ட்ரெஸ்ட் பற்றி தான் பேச்சாக இருக்கிறது. பின்ட்ரெஸ்ட்டை பயன்படுத்தும் விதம்,பின்ட்ரெஸ்ட்டின் செல்வாக்கு,பின்ட்ரெஸ்ட்டின் மார்க்கெட்டிங் தாக்கம் என்று பின்ட்ரெஸ்ட் பற்றி பலவிதமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஒரு விஷயம் உறுதி பின்ட்ரெஸ்ட் இண்டெர்நெட்டின் புதிய சென்சேஷனாக உருவாகியிருக்கிறது. பேஸ்புக்.டிவிட்டருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் வருகை தரும் சமூக வலைப்பின்னல் தளமாக வளர்ச்சி பெற்றுள்ள பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார். சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்றனர்.குறிப்பாக […]

பின்ட்ரெஸ்ட் செய்திகளில் அடிபடும் வேகத்தை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது.இணையத்தில் எங்கு பார்த்தாலும் இப்போது பின்ட...

Read More »

கடத்தப்பட்ட கலெக்டரின் வலைப்பதிவு.

அலெக்ஸ் பால் மேனன் இந்தியாவின் இளம் கலெக்டர் என்ற அடைமொழியுடனோ அல்லது மக்கள் நண்பன் என்றோ தான் வர்ணிக்கப்பட வேண்டும்.ஆனால் துரதிஷ்டவசமாக மாவோயிஸ்ட்களாக கடத்தப்பட்டதை அடுத்து அவர் கடத்தப்பட்ட கலெக்டர் என்றே அறியப்படுகிறார். ஆனால் அலெக்ஸ் மேனன் பற்றி வரும் செய்திகள் அவர் மக்கள் நலனில் எத்தனை அக்கரை கொண்டிருந்தார் என்பதையும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய எப்படி துடிப்போடு செயல்பட்டு வந்தார் என்பதையும் உணர்த்துகின்றன.அலெக்ஸ் மேனனின் தனிப்பட்ட குணாதிசயங்கள் பற்றி அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பத்திரிகைகளில் […]

அலெக்ஸ் பால் மேனன் இந்தியாவின் இளம் கலெக்டர் என்ற அடைமொழியுடனோ அல்லது மக்கள் நண்பன் என்றோ தான் வர்ணிக்கப்பட வேண்டும்.ஆனா...

Read More »

வாசிப்புக்கான வலைப்பின்னல் தளம்.

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்டுவதை குறிக்கும்.மேற்கோள் மூலம் நல்ல கட்டுரைகளை பகிர்ந்து கொள்ளவும் நல்ல கட்டுரைகளை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.வாசிப்புக்கான வலைப்பின்னல் என்றும் வைத்து கொள்ளலாம். வலைப்பின்னல் சேவை என்றவுடன் இன்னொரு வலைப்பின்னலா என்ற அலுப்பு ஏற்படகூடியது இயல்பானது தான்!.ஏற்கனவே இருக்கும் வலைப்பின்னல் தளங்கள் போதாதா என்ற கேள்வியும் எழலாம்! ஆனால் ஆச்சர்யப்படக்கூடிய வகையில் இந்த கேள்விகளை கோட்.எப்எம் தளமே தனது அறிமுக பகுதியில் எழுப்பியிருக்கிறது.பேஸ்புக்,டிவிட்டர் போன்றவற்றைல் […]

சுவாரஸ்யமான இணையதள‌மாகவே அறிமுகமாகியிருக்கிறது ‘கோட்.எப்எம்’ . இங்கு ‘கோட்’ என்பது மேற்கோள் காட்...

Read More »