செல்லுக்கு நான் அடிமை

அந்த 16 வயது கொரிய மாணவியின் கைகள் நடுங்க தொடங்கிவிட்டது. அவரால் அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.தனது ஆசிரியரிடம் கெஞ்சுகிறார். ஆசிரியரோ முடியவே முடியாது என்று தீர்மானமாக மறுத்து விடுகிறார். அந்த மாணவி செய்வது அறியாமல் கண்ணீர் விட்டு அழுது புலம்புகிறார்.
.
இப்படி பரிதாபத்துக்கு ஆளான மாணவி, ஏதோ போதை பழக்கத்திற்கு இலக்காணவர் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. போதை பழக்கத்தால்தான் அந்த மாணவி இப்படி கண்ணீர் விட்டு கலங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். என்றாலும் அவர் மதுவுக்கோ அல்லது வேறு எந்த போதை மருந்துக்கோ அடிமையானவர் அல்ல. அவர் செல்போனுக்கு அடிமையானவர்.

செல்போனுக்கு யாராவது அடிமையாக முடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம். இப்படி செல்போனுக்கு அடிமை யாவது சாத்தியமே. தென்கொரியாவில் ஆயிரக்கணக் கான செல்போன் அடிமைகள் இருக்கின்றனர். அந்நாட்டில் உள்ள 75 சதவிகிதம் பேர் செல்போன் கையில் இல்லை என்றால், ஏதோ குறைந்தது போல உணர்வு ஏற்பட்டு விடுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

செல்போன் இல்லாமல் நானில்லை என்று சொல்லும் நிலையிலேயே பல தென்கொரியர்கள் இருக்கின்றனர். தென்கொரியா உலகிலேயே மிகவும் ஹைடெக் தேசம் என்பதால் இதில் எந்த வியப்பும் இல்லை. அந்நாடு இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கிறது. அதே போல செல்போன் பயன்பாட்டிலும் முன்னணியில் இருக்கிறது. செல்போன் இல்லாமல் அந்நாட்டில் இருப்பவர்கள் எதையுமே செய்ய முடியாத நிலைக்கு வந்து விட்டனர்.

அத்தகைய ஒரு மாணவியின் நிலையைத்தான் மேலே நீங்கள் பார்த்தீர்கள். அந்த மாணவி பள்ளியில் செல்போன் பயன்படுத்திய போது ஆசிரியரிடம் பிடிபட்டார். வகுப்பின் நடுவே பாடத்தை கவனிக்காமல் செல்போனில் பேசி கொண்டிருந்ததால் கோபமடைந்த அந்த ஆசிரியை, மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து விட்டார்.

அதன் பிறகு அந்த மாணவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிது நேரம் திகைத்து நின்ற அவர், வகுப்பு முடிந்ததும் ஆசிரியையிடம் சென்று செல்போனை தருமாறு கேட்டு கொண்டார். இனி வகுப்பில் செல்போன் பேச மாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்திருக்கிறார். ஆனாலும் ஆசிரியர் இதனை ஏற்க மறுத்து விட்டார். மறுநாள் போன் கிடைக்காததால் அந்த மாணவியின் கைகள் எல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது.

கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்தது. இந்த நிலையை பார்த்து மனமிறங்கிய ஆசிரியர், அவரிடம் செல்போனை ஒப்படைத்து விட்டார். பல தென்கொரிய இளைஞர்கள் இத்தகைய நிலைக்குத்தான் ஆளாகி வருகின்றனர். அவர்களை பொறுத்தவரை செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை தான்.

இளைய தலைமுறையினர் செல்போனுக்கு அடிமையாவதும், அதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுவதும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் செல்போன்கள், தவறான விஷயங் களுக்கு பயன்படுத்தப்படுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு என்ன என்று யோசிப்பவர்கள் செல்போனுக்கு தடை விதிப்பதையே சரியான நடவடிக்கையாக சொல்கின்றனர்.

அதன்படி பல நகரங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும் என்றுதான் தோன்றுகிறது. இந்த பிரச்சனையால் தென் கொரியா தீவிரமாக பாதிக்கப்பட்டாலும் இத்தகைய தடையை அந்நாடு பிறப்பிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அதற்கு மாறாக செல்போனுக்கு அடிமையாவ திலிருந்து மாணவர்களை மீட்பதற் கான நடவடிக்கையில் அந்நாடு இறங்கியுள்ளது.

இந்த நோக்கத்தோடு அந்நாட்டைச் சேர்ந்த ஸ்கூல் பியூட்டிபுல் மூவ்மென்ட் என்னும் அமைப்பு மாணவர்களுக்கான செல்போன் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி முகாமின் நோக்கம் என்னவென்றால் சரியான முறையில் செல்போன் பயன்படுத் துவது எப்படி என்று மாணவர்களுக்கு கற்றுத்தருவதே ஆகும்.

இதில் 12 பள்ளிகள் விரும்பி சேர்ந்திருக்கின்றனர். அடுத்த 2 மாதங்களுக்கு இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமின் போது மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு தொடர்பான விவாதமும் நடத்தப்பட உள்ளது. செல்போனால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர், அதற்கான தீர்வு என்ன என்பது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது.

மாணவர்களின் பிரச்சனையை, மாணவர்களை கொண்டே தீர்க்கும் நோக்கத்தோடு இந்த முகாம் நடைபெறுகிறது. செல்போன் சார்ந்த நாகரிக நடவடிக்கைகளை பின்பற்றுவது பற்றி அந்த முகாமில் வலியுறுத்தப்பட உள்ளது. உதாரணத்திற்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரும்போது, வகுப்பு தொடங்கும் முன்பாக அதனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட உள்ளன.

இப்படி செய்வதன் மூலமாக செல்போன்கள் மூலமாக ஏற்படும் விரும்பத்தகாத செயல்களை தவிர்க்கலாம். அதே நேரத்தில் செல்போன்களால் ஏற்படக் கூடிய நன்மையையும் இழக்காமல் இருக்கலாம். இந்த விஷயத்தில் தென் கொரியா மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒரு முன்மாதிரி என்றுதான் சொல்ல வேண்டும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “செல்லுக்கு நான் அடிமை

  1. //தென்கொரியா உலகிலேயே மிகவும் ஹைடெக் தேசம் என்பதால்//

    அப்படியா!!!!

    எங்க இருந்துங்க இந்த மாதிரி செய்திகளை பிடிக்கறீங்க!!

    நம்ம ஊர்ல கூட பலருக்கு செல் போனில் கடலை போடவில்லை என்றால் கை நடுங்குகிறதாம் :-)))))))))

    Reply
  2. கூடிய சீக்கிரம் எல்லா இடத்திலும் இந்தப் பிரச்சினை வரப் போகிறது….
    அன்புடன் அருணா

    Reply
  3. நல்லா எழுதிறீங்கள் எழுதுங்க எழுதுங்க எழுதிக்கொண்டே இருங்க

    Reply
  4. butterflysurya

    இந்தியாவிலும் இது போன்று வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *