டிவிட்டரில் சிக்கிய திருடன்

1-twitமுன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்க‌ம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்கலாம்.இல்லை காவல் துறை உதவியை நாடலாம்.

ஆனால் நிச்சயமாக அமெரிக்காவின் டேவிட் பிரேகர் செய்ததை போல நீங்கள் செய்ய வாய்ப்பில்லை.

அமெரிக்காவின் சாப்ட்வேர் தலைநகரமான சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகாரியாக பணியாற்றும் பிரேகர் வீட்டில் சமீபத்தில் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆசாமி நுழைந்த போது அவர் பரபரப்படையவும் இல்லை பதட்டமடையவும் இல்லை.

நீ யார், எதற்கு என் வீட்டிற்குள் வருகிறாய் என்றும் கேட்கவில்லை. அதற்கு மாறாக தன்னுடைய டிவிட்டர் கண‌க்கு மூலம் இந்த தகவலை தன்னை பின் தொடர்பவர்களுக்கு தெரிவித்தார் .

அப்போது நள்ளிரவு 3 மணியிருக்கும்.20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், (அவ‌ர் வீடில்லாதவர்களாக இருக்கலாம்,குடித்து விட்டு இருக்கலாம். அல்லது தூக்கத்தில் நடந்து வந்திருக்கலாம்), என் வீட்டு குளியலைறைக்குள் நுழைந்துவிட்டார் என்று அவர் எழுதினார்.

உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம், டிவிட்டர் இணையம் மற்றும் செல்போன் வழியே குறுஞ்செய்தியாக தகவல்களை பகிர்ந்துக்கொள்ள உதவும் சேவை.

இப்போது பிரபலங்கள் மத்தியில் எதையும் டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. டிவிட்டரில் பகிரப்படும் தகவல்களை ஆர்வத்தோடு படிப்பதெற்கென்று அவரவற்கு வாசகர்களும் இருக்கின்றனர். பின்தொடர்பவர்கள் என இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

பிரேகரும் இப்படி டிவிட்டரில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் கொண்டவர் தான்.

எனவே தான் வீட்டுக்குள் யாரோ நுழைந்ததும் அவர் அதனை முதலில் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

அடுத்ததாக அந்த ஆசாமி என்ன செய்து கொண்டிருக்கிறான் போன்ற விவர‌ங்களையும் தெரிவித்தார்.

இதற்குள் அவரது பின்தொடர்பாளர்களில் பலர் இந்த செய்தியை படித்து விட்டு ,மேற்கொண்டு என்ன நடக்கிற‌து என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.

ஒரு சிலர், நிலைமையை சமாளிக்க ஆலோசனைகளையும் வழங்கினர். முத்லில் போலிசுக்கு தகவல் சொல்லுங்கள் என்று சிலர் தெரிவித்தனர்.இன்னும் சிலரோ இதுவரை போலிசுக்கு போகாமல் இருப்பதே முட்டாள்த்தனம் என்று கடிந்து கொண்டனர்.

பிரேகரும் இது பற்றியேல்லாம் யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர‌து உள்ளுணர்வு அந்த ஆசாமியால் ஆபத்தில்லை என கூறியதால் ,தொடர்ந்து ந‌டப்பவற்றை டிவிட்டர் மூலம் தெரிவித்தவண்ணம் இருந்தார்.

கிட்டத்தட்ட 15 டிவிட்டர் செய்திகளை பகிர்ந்துகொண்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவ‌ர் குளியலறைக்கு சென்று அந்த நபரை விரட்ட முற்பட்டிருக்கிறார். ஒரு சிறு போராட்டத்திற்கு பிறகு அந்த நபரை இழுத்து வந்தார்.அப்போது அந்த ஆசாமி படுக்கையறையில் சுருண்டு விழுந்தார்.பத்து நிமிட போராட்டத்திற்கு பின் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதனிடையே யூசட்ஸ்டிரிம்.டிவி சேவையின் மூலம் அதனது வீட்டில் ந‌டக்கும் காட்சிகளையும் அவர் பகிர்ந்துகொன்டார்.

ஒரு திரைப்படத்தை பார்ப்பது போல பலரும் டிவிட்டர் மூலம் இந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த நாடகம் முடிந்த பின் யூடியூபிலும் இதனை பிரேகர் பகிர்ந்துகொண்டார்.

இண்டெர்நெட் உலகில் இந்த சம்பவம் லேசான பரபர‌ப்பை ஏற்படுத்திவிட்டது.டிவிட்டர் ஏற்படுத்தியுள்ள‌ தாக்கத்தின் அடையாளாமாக இது கருதப்படுகிறது. சுவையான சம்பவம் என்றாலும் எதையும் டிவிட்டர் செய்யும் பழக்கம் எங்கே போய் முடியுமோ என்ற விவத்த்தையும் உண்டாக்கியுள்ளது.

திருடன் வந்தால் உடனே அதற்கேற்ப செயல்படுவதை விட்டு இப்படி டிவிட்டர் மூலம் உலகிற்கு தெரிவிக்க முற்படுவது சரியா என்றும் கேட்கப்படுகிறது.

இன்னும் சிலரோ இந்த சம்பவம் முழுவதுமே ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாமா என்னும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். ஆனால் அவ்வாறு இல்லை என பிரேபர் மறுத்துள்ளார்.

இணைய கலாச்சாரம் எனபது எத்தனை நூதனமானது என்பதை இந்த சம்பவம் உனத்துவதாகவும் கருதபடுகிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரில் சிக்கிய திருடன்

  1. hahaha.

    ஆமாம். இங்கேயும் தமிழ் பதிவர்கள் இந்த மாதிரி கண்றாவியெல்லாம் பதிவு என்று போட்டு கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு பதிவரின் அக்கா அவரது பதிவுகளை படிக்கவில்லையாம். பல நாட்களுக்கு பிறகு படித்து பாராட்டினார்களாம்.

    இதுக்கு 475 கமெண்ட்ஸ்.

    பத்திரிகை தொல்லை தாங்க முடியலைனா பதிவுகளிலும் மொக்கையும்,. ஜொள்ளுதான் பெருக்கெடுத்து ஒடுது..

    அமைதியான தங்கள் பணி சிறந்தது..

    வாழ்த்துகள்.

    Reply
  2. எங்கதான் உங்களுக்கு இப்படிப்பட்ட செய்திகள் கிடைக்குதோ? சுவையான இண்டர்நெட் செய்திகள்

    தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

    Reply
    1. cybersimman

      thanks. its all in the net my freind.

      Reply
  3. சுவையான செய்தி :))

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *