பிளாஸ்டிக் பாட்டில் தடை: டிவிட்டர் மூலம் வந்த ஆலோசனையை ஏற்ற ஆனந்த் மகிந்திரா

D_mMsLlUcAAVHohபிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடு பரவலாக அறியப்பட்டிருந்தாலும், சமூகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா அழகாக உணர்த்தியிருக்கிறார். டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்ட ஆலோசனையை ஏற்று அவர் தனது நிறுவன இயக்குனர் குழும கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என அறிவித்து வழிகாட்டியுள்ளார்.

மகிந்திரா குழும தலைவரான ஆனந்த் மகிந்திரா, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார். குறிப்பாக டிவிட்டரில் அவர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த சுறுசுறுப்பின் பயனாக அவருக்கு டிவிட்டரில் 7 மில்லியனுக்கும் மேல் பாலோயர்கள் உள்ளனர்.

ஆனந்த் மகிந்திரா (@anandmahindra), டிவிட்டரை தீவிரமாக பயன்படுத்துபவர் மட்டும் அல்ல, அதை உரையாடலுக்கான இரு வழி பாதையாகவும் பயன்படுத்துபவர். அதனால் தான், தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டுவதை பார்க்கலாம்.

அந்த வகையில் தான், அண்மையில் டிவிட்டரில் பயனாளி ஒருவர் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த ஆனந்த் மகிந்திரா, நிறுவன இயக்குனர் குழும கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டிகள் தடை செய்யப்படும் என அறிவித்து சபாஷ் வாங்கியுள்ளார்.

மகிந்திரா குழுமத்தால் நடத்தப்படும் கல்வி அறக்கட்டளை திட்டத்திற்கான ஸ்காலர்ஷிப் தேர்வு தொடர்பான புகைப்படத்தை ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

மிதாலி (@filmibaaz) எனும் டிவிட்டர் பயனாளி, தெரிவித்திருந்த கருத்தில் “ இயக்குனர் குழும கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில், ஸ்டீல் பாட்டில்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என நினைக்கிறேன். ஒரு பார்வை தான்” என ஆலோசனையும் கூறியிருந்தார்.

ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து கொண்ட இயக்குனர் குழும புகைப்படத்தில், மேஜையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இடம்பெற்றிருந்ததை சுட்டிக்காட்டும் வகையில், இந்த கருத்தும், ஆலோசனையும் அமைந்திருந்தது. இத்தகைய காட்சி பெரும்பாலான இயக்குனர் குழும கூட்டங்களிலும் பார்க்க கூடியது தான். இயக்குனர் குழும கூட்டங்கள் மற்றும் அல்ல, பொதுவாக பெரும்பாலான விழாக்கள், கூட்டங்கள், மாநாடு நிகழ்வுகளுக்கான படங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை தவறாமல் பார்க்கலாம்.

இந்த பின்னணியில், இயக்குனர் குழும கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு சுட்டிக்காட்டப்பட்டதும், ஆனந்த் மகிந்திரா ஆவேசம் கொள்ளவோ, அலட்சியம் காட்டவோ இல்லை. மாறாக, அவர் இந்த பழக்கம் மாற வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டவராக பொறுப்பான முறையில் பதில் அளித்திருந்தார்.

’ ஆம், பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்பட வேண்டியவை தான். அன்றைய தினம் அவற்றை பார்த்து நாங்களும் வெட்கப்படுகிறோம்” என அவர் மிதாலி கருத்திற்கு பதில் கூறினார்.

மிகப்பெரியர் தொழில் குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, டிவிட்டரில் அளிக்கப்பட்ட ஆலோசனையை ஏற்று, தங்கள் நிறுவன இயக்குனர் குழும கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து பயனாளிகள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பலரும், பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை பற்றிய யோசனையை குறிப்பிட்டு, இது தொடர்பான கருத்துகள் மற்றும் மாற்றும் யோசனைகளையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

ஆனந்த் மகிந்திரா அளித்த பதிலையும், அது தொடர்பான கருத்துகளையும் இங்கே காணலாம்:https://twitter.com/anandmahindra/status/1151114935813885953

பி.கு: இந்த உரையாடல் நடைபெற்ற சில நாட்கள் கழித்து, ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில், இன்னும் ஒரு சுவாரஸ்யமான கருத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தார். அண்மையில், எங்கள் நிறுவன அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில் தடை பற்றி தெரிவித்திருந்தேன். இன்னும் பல இடங்களில் பிளாஸ்டிக் இருக்கிறது. ஆனால் சிலர் பிளாஸ்டிக்கை சிறந்த முறையில் மறுசுழற்சி செய்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக, பழைய பிளாஸ்டிக் நீர்த்தொட்டி ஒன்று, பைக் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டிருக்கும் படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *