டிவிட்டர் பயன்பாட்டில் புதிய மைல்கல்லாக பாப் பாடகர் கநான் டிவிட்டர் மூலம் பாடல் ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
கனான் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தந்தை ஒரு கவிஞர் . அத்தை ஒரு பாடகி. சோமாலியாவில் உள்நாட்டுப்போர் தீவரமடைந்த நிலையில் அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது.
சிறிது காலம் நியுயார்க்கின் ஹார்லம் பகுதியில் வசித்த கநான் பின்னர் கனடா சென்றார். கனடாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளத்துவங்கியதோடு ஹிப் ஹாப் இசையையும் பயில துவங்கினார்.
இது அவரை பாடகராக்கியது. பின்னர் சல் கய் என்பவரின் நட்பு கிடைத்து ஐ நா சபை அகதிகள் அரங்கில் பாடினார். அப்போது சோமாலிய பிரச்சனையில் ஐ நா நிலைப்பாட்டை விமர்சித்தார்.
தொடர்ந்து ஐ நா நிகழ்ச்சிகளில் பாடிய அவர் , டியுரபேட்டர் என்னும் ஆல்பத்தை வெளியிட்டார்.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கநான் தனியே இணையதளமும் வைத்திருக்கிறார். டிவிட்டர் மூலமும் அவர் ரசிகர்களை தொடர்பு கொண்டு வருகிறார்.
இப்போது டிவிட்டர் மூலம் ஒரு பாடலை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ரசிகர்கள் டிவிட்டர் மூலமே பாடல் வரிகளை சமர்பிக்கலாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வரிகளை கொண்டு ஏற்கனவே வெளியான ஆல்பத்தில் உள்ள ‘மக்கள் என்னை நேசிக்கின்றனர்’ என்னும் பாடலை மீண்டும் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
டிவிட்டர் மூலம் பாடலை உருவாக்கும் முதல் பாடகர் என அவர் வர்ணிக்கப்படுகிறார்.
டிவிட்டரின் பயன்பாட்டு எல்லை விரிவடைந்து வருவதன் அடையாளமாக இதனை கொள்ளலாம்.

0 Comments on “பாட்டு டிவிட்டர் பாட்டு”
Nytryk
WoW!