டிவீட் என்னும் பெயரில் ஒரு பாடகி இருப்பது உங்களுக்கு தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸ் போலவோ ஷகிரா போலாவோ அவர் பிரபலாமானவர் இல்லை. ஆனால் அமெரிக்காவில் அவருக்கென நிறைய ரசிகர்கள் உள்ளனர்.அமெரிக்காவின் பெண்கள் மட்டும் இசக்குழுவில் அங்கம் வகிக்கும் அவரது பாடல்களும் பிரபலமாக உள்ளன.
டிவீட் பாடல்களை கேட்டால் உங்களுக்கு கூட அவரை பிடித்துப்போகலாம். நிற்க டிவீட் பற்றிய இந்த பதிவு எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாக தொழில்நுட்பம் அல்லாத விஷயங்கள் பற்றி நான் இங்கு எழுதுவதிலலை. அப்படியே பாடகிகள்,நட்சத்திரங்கள் குறித்து எழுதினால் அவர்கள் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் விதம் தொடர்பாகவே இருக்கும்.
டிவீட் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறாரே தவிர இணைய பயன்பாட்டில் அவரை முன்னோடி என்றெல்லாம் கூற முடியாது. ஆனால் அவரைப்பற்றி தற்செயலாக தெரிந்துகொள்ள் நேர்ந்த்தால் இந்த பதிவு.
இண்டெர்நெட்டில் தகவல்களை தேடும் போது நாம் எதிர்பார்க்காத தகவல்களை சந்திக்க நேரலாம். இப்படிதான் பாடகி டிவீட் பற்றி அறிய நேர்ந்தது.
இந்த பதிவில் டிவிட்டர் சேவை குறித்தும் அதன் பயப்பாடு குறீத்தும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.தினமும் டிவிட்டர் தொடர்பான புதிய செய்திகள் இருக்கிறதா என பார்த்துவிட்டு , அவற்றில் சுவையானவை குறித்து மேற்கொண்டு தஅக்வல்களுக்கு வலை வீசுவேன்.
இவ்வாறு டிவிட்டர் வறுமையை விரட்ட பயன்படும் செய்தியை பார்த்து விட்டு ,ட்வீட் பாவர்ட்டி என்னும் அந்த தளம் தொடர்பாக தகவல்களை தேடியபோது டிவீட்னியுஸ் என்னும் தளம் தேடல் பட்டியலில் இருந்தது.
உடனே டிவிட்டர் செய்திகள் தொடர்பான தளமாக இருக்கும் என்று நினைத்து உள்ளேபோனால் தான் அது டிவீட் என்னும் பெயரிலான படகிக்கான தளம் என்று தெரிய வந்தது.
பொதுவாக டிவிட்டர் செய்திகள் டிவீட் என சொல்லப்படுகின்றன. மேலும் டிவிட்டர் தொடர்பாகவே பல தலங்கள் உள்ளன. எனவே தான் இந்த தளமும் டிவிட்டர் தொடர்பாக இருக்கும் என தோன்றியது.
ஆனால் டிவீட் என்னும் பாடகி அறிமுகமாகியிருக்கிறார்.
இசைப்பிரியர் என்றால் புதிய பாடகியை அறிமுகம் செய்துகொண்டதாக மகிழலாம்.டிவிட்டர் பிரியர் என்றால் கொஞ்சம் ஏமார்றமாக இருக்கும்.
எப்படியோ இண்டெர்நெட் தேடலில் ஈடுபடும் போது இது போன்ற சுவரஸ்யமான அனுபவங்கள் நிறைய ஏற்படலாம் என்பத்ற்கான உதாரணம் இது. இதில் எதிர்பாரா முத்துக்களும் கிடைக்கலாம். முற்றிலும் பயனில்லா தகவல்களும் கிடைக்கலாம்.
————–

0 Comments on “இண்டெர்நெட் ஆச்சர்யங்கள்”
சுபாஷ்
அம்மணி பாடலகளை கேட்டுவிட்டு சொல்றேன்
நல்ல தேடல்தான்