டிவிட்டர் போன்ற சேவை புகழ்பெறும்போது முற்றிலும் புதுமையான வழிகளில் எல்லாம் அது பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.
அவை மற்றபடி நினைத்துப்பார்க்க முடியாத்தாக இருக்கும். உண்மையில் இத்தகைய பயன்பாடுகளே மேலும் டிவிட்டருக்கு புகழ் சேர்க்கின்றன.
அந்த வகையில் நியூசிலாந்து வாலிபர் ஒருவர் காதல் தோல்விக்குப்பின் மற்றவர்களை டிவிட்டர் தேடலில் ஈடுபட வைத்திருக்கிறார். அதாவது தனது காதல் மோதிரத்தை பரிசாக தருவதாக அறிவித்து அதறகான டிவிட்டர் தேடலை ஆரம்பித்து வைக்கிறார்.
அந்தானி கார்டினர் என்னும் பெயர் கொண்ட அந்த வலிபர் தான காதலித்து வந்த பெண்ணுக்ககாக ஒரு மோதிரத்தை வாங்கி வைத்திருந்தார். மோதிரத்தோடு போய் அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் கேட்ட போது அவர் மறுத்துவிட்டாராம
இது போன்ற காதல் நிராகரிப்பிற்கு பின் ஒருவர் என்ன செய்யக்கூடும். சோகமயமாகலாம். இல்லை ஆவேசப்படலாம்.இல்லை டேக் இட் இஸி என அடுத்த காதலியை தேடி போகலாம்.
கார்டினர் நிராகரிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அவளுக்கு என்ன்னை பிடிக்கவில்லை போலும்,என இஸியாகம் எடுத்துக்கொண்டு விட்டர்.
ஆனால் பாவம் கல்யாண மோதிரத்தை தான் என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை.அதை விறபதற்கும் மனம் வரவில்லை. வைத்திருக்கவும் விரும்பவில்லை. பார்த்தார். யாருக்காவது பரிசாக தர தீர்மானித்தார்.
யாருக்கு தருவது?
இதற்காக தான் டிவிட்டரை தேர்ந்தெடுத்தார்.மோதிரத்தை பெற விரும்புகிறவர்கள் தலைநகர் வெலிங்டன்னுக்கு வர வேணும் .அதன்பிறகு மோதிர தேடலில் ஈடுபட வேண்டும்.மோதிரத்தை தேடிச்செல்வதற்கான குறிப்புகளை அவர் தனது டிவிட்டர் கணக்கு மூலம் தெரிவித்து வருவாராம்.
இந்த தேடல் நாளை துவங்க உள்ளது. மாலைக்குள் மோதிரம் கண்டுபிடிக்கப்படா விட்டால் குறிப்புகளை மேலும் விரிவாக வழங்க திட்டமிட்டுள்ளார்.
டிவிட்டருக்கு இது புதுமையான பயன்பாடு மட்டுமல்ல. காதல் தோல்வியை ஒருவர் எதிர்கொள்ளக்கூடிய வழியிலும் கூட இது புதுமையானது.
தனிப்பட்ட ஏமாற்றத்தை அல்லது சோகத்தை இப்படி ஒரு நிகழ்வாக மாற்றிக்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் புதிய சுவையை பெற முடியும் தானே.