டிவிட்ட‌ரில் ஆட்டோ டிரைவ‌ர்க‌ள்

இன்று செல்போன் வைத்திராத‌ ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளே இல்லை என்ப‌தால் எங்கே போவ‌தாக‌ இருந்தாலும் ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளை தொட‌ர்பு கொள்வ‌து எளிதான‌து.ஒரே ஒரு போன் செய்தால் ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளை வீட்டிற்கே வ‌ர‌வைத்து விடலாம்.

செல்போனில் ஆட்டோ ஒட்டுன‌ர்க‌ளை அழைப்ப‌து இனியும் புதுமையான‌த‌ல்ல‌. ஆனால் டிவிட்ட‌ரில் ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளை அழைப்ப‌து புதுமையான‌து தானே.

இத்த‌கைய புதுமையான‌ சேவைவை ல‌ண்ட‌ன் டாக்ஸி ஒட்டுன‌ர்க‌ள் அறிமுக‌ம் செய்துள்ள‌ன‌ர்.அதாவ‌து டாக்ஸி தேவை என்றால் டிவிட்ட‌ர் மூல‌ம் தொட‌ர்பு கொண்டால் போதுமான‌து.

எல்லாம் டிவிட்டர்மயமாகி எல்லோரும் டிவிட்டர் பக்கம் வந்துகொண்டிருக்கும் போது டாக்ஸி ஓட்டுனர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள முற்ப்ட்டுள்ளதில் வியப்பில்லை.ல‌ன்ட‌னைச்சேர்ந்த‌ புக‌ழ்பெற்ற‌ வலைப்பதிவாள‌ டாக்ஸீ ஓட்டுன‌ருமான‌ ரிச்ச‌ர்டு க‌ட்லிப் ம‌ற்றும் மேலும் சில‌ டாக்ஸீ ஓட்டுன‌ர்க‌ள் இணைந்து இந்த‌ சேவையை துவ‌க்கியுள்ள‌ன‌ர்.

இதற்காக‌ டிவீட்ஏண்ட‌ன்கேப் என்னும் இணையதளத்தையும் துவக்கியுள்ளனர்.டாக்ஸி ஓட்டுன‌ர்க‌ளின் டிவிட்ட‌ர் த‌க‌வ‌ல்க‌ளை ப‌டிப்ப‌தோடு டாக்ஸி தேவை என்றால் எப்போது எங்கே தேவை என்று செய்தி அனுப்பி வைக்க‌லாம்.

டாக்ஸி ஓட்டுன‌ர்க‌ள் டீவிட்ட‌ர் செய்வ‌து மூல‌ம் ப‌ய‌ணிக‌ளோடு தொட‌ர்பு கொள்ள‌ முடிவ‌தோடு போக்குவ‌ர‌த்து நெரிச‌ல் போன்ற‌ த‌க‌வ‌ல்க‌ளையும் ப‌ரஸ்ப‌ர‌ம் ப‌கிர்ந்துகொள்ள‌லாம்.

—–
link;
http://tweetalondoncab.wordpress.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்ட‌ரில் ஆட்டோ டிரைவ‌ர்க‌ள்

  1. dey dubukku.. londa auto illada….

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *