பிரசவ வேதனைக்கு நடுவே டிவிட்டர் செய்ய தோன்றுவதும் முடிவதும் வியப்பானது தான்.சாரா வில்லியம்ஸ் தன்னுடைய பிரசவ அனுபவங்களை டிவிட்டர் செய்திருக்கிறார்.
யார் இந்த சாரா என்று கேட்கபவர்கள் கவனிக்க , மற்ற எவரையும் விட டிவிட்டர் செய்ய அதிக உரிமை படைத்தவர் சாரா. டிவிட்டரின் முதல் பெண்மணி.அதாவது டிவிட்டர் துணை நிறுவனர் இவான் வில்லிமஸின் மனைவி.
இவானுக்கும் டிவிட்டர் பக்கம் இருக்கிறது.அவர் மனைவி சாராவுக்கும் டிவிட்டர் பக்கம் உள்ளது.சாரா டிவிட்டரில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் இதுவரை பெரிதாக பேசப்பட்டதில்லை. ஆனால் சமிபத்தில் டிவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இணைய உலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
நிறைமாத கர்பிணியாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரா பிரசவ வலிக்கு மத்தியில் தன்னுடைய உணர்வுகளை டிவிட்டரில் பகிர்ந்துகொண்டார்.
டிவிட்டர் அண்பர்களே என் பணிக்குடம் உடைந்துவிட்டது,என்று குறிப்பிட்டவர் பரசவ வலி தொடர்பான ஐபோன் செயலியை பயன்படுத்துவது பற்றியும் தெரிவித்திருந்தார்.
பிரசவ வேதனை பற்றிய நேரடி வர்ணனைப்போல அவரது பதிவுகள் அமையாவிட்டாலும் அப்போதிய அவரது மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அவை இருந்தன.
மருத்துவமணை அறைக்குள் செலவதற்கு முன் அவர் அது பற்றி டிவிட்டரில் தெரிவித்தார். அதன்பிறகு அவரது கணவர் சாராவுக்கு ஆண்குழந்தை பிறந்ததை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் இந்த தம்பதிக்கு பிறந்துள்ள முதல் குழந்தை இது.

0 Comments on “டிவிட்டரில் குவா குவா”
chollukireen
குழந்தைக்கு டிவிட்டர் சம்பந்தமான பெயர் ஒன்றை வைக்கலாம்..