நீளமான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் விவாதித்தால் எப்படியிருக்கும்.
ஆர்லான் ஸ்பெக்டர் மற்றும் சக் கிராஸ்லே விவாதித்தது போல அருமையாக இருக்கும்.
இருவரும் அமெரிக்க எம் பி க்கள் .ஸ்பெக்டர் ஜனநாயக கட்சியைச்சேர்ந்தவர் .கிராஸ்லே குடியரசுக்கட்சியை சேர்ந்தவர்.
அமெரிக்க அரசு உத்தேசித்துள்ள சுகாதரத்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு இருக்கிறது.
அமெரிக்காவில் இந்த திட்டம் நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெக்டர் இந்த திட்டத்தை தீவிரமாக ஆதரிப்பவர். கிராஸ்லே அதே தீவிரத்தோடு எதிர்ப்பவர்.
இந்த திட்டத்தின் கீழ் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இனையாக அரசு இன்சூரன்ஸ் வழங்க இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.இதனால் மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்று எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.
இவர்களில் ஒருவரான ஐயோவா எப் பி கிராஸ்லே,இந்த திட்டம் வயாதானவர்களை அரசு கருணைக்கொலை செய்ய வைத்து விடும் என்று ஒரு கருத்தை கொளுத்திப்போட்டு நாடு முழுவதும் பரபர்ப்பை ஏற்படுத்திவிட்டார்.
இந்தநிலையில் இந்த திட்டத்தை ஆதரிப்பவரான பெனிசில்வேனியா எம் பி ஸ்பெக்டர், கிராஸ்லே கூறும் கருத்துக்கள் தவறானவை என அவரோடு விவாதிக்க முற்பட்டார்.
இதற்காக அவர் தேர்வு செய்த வழி தான் டிவிட்டர்.அமெரிக்காவில் டிவிட்டர் செய்யும் பழக்கம் கொண்ட அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர். கிராஸ்லேவின் கருத்துக்கள் வெளியான நிலையில் ஸ்பெக்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் ,சுகாதார திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுமாறு கூற எம் பி கிறாஸ்லேவை தொடர்பு கொண்டேன் , ஆனால் முடியவில்லை , எப்படியும் விரைவில் இது பற்றி விவாதிப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.
அரசு திட்டம் பற்றி கருத்து தெரிவிப்பது தவறல்ல ஆனால் இறக்கும் தருவாயில் மருத்துவதிட்டம் பற்றி பேசி அச்சுறுத்த யாருக்கும் உரிமையில்லை என்று அடுத்த டிவிட்டர் பதிவில் கடுமையாகவே அவர் தெரிவித்தார்.
இவ்வாறு கராச்லேவின் நிலைப்பாட்டை மிக அழகாக தனது டிவிட்டர் பதிவில் அவர் விமர்சித்திருந்தார்.கூடவே தனது நிலையையும் தெளிவு படுத்தியிருந்தார்.
இந்த டிவிட்டர் பதிவுகள் கவனத்தை ஈர்த்த நிலையில் கிராஸ்லேவும் தனது டிவிட்டர் பக்கத்தில் இது பற்றி கருத்து தெரிவித்தார்.அதாவது ஸ்பெக்டர் கருத்துக்கு பதில் அளித்து தனது நிலையை தெளிவுபடுத்தினார்.
இந்த விவாதம் இப்போதைக்கு இத்தோடு நிற்கிறது.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதே போல மக்கள் பிரதிநிதிகள் டிவிட்டரை பயன்படுத்தி விவாதித்தால் எப்படி இருக்கும். அது தொடர் விவாதமாக அமிந்தால் மேலும் பயனுல்ளதாக இருக்கும்.

0 Comments on “டிவிட்டரில் அரசியல் விவாதம்”
மஞ்சூர் ராசா
ட்விட்டரின் அதிவேக வளர்ச்சி ஜிமெயில், யாகு, ஹாட்மெயில் போன்றவற்றை ஓரத்திற்கு தள்ளிவிடுமோ என தோன்றுகிறது
kuppan_yahoo
but i guess sms has the same facility of Twitter, so what’s big difference in twitter compared to sms.
cybersimman
sms is one to one. twitter is one to many.thats the big big diff