பிரபல சைக்கிள் பந்தைய வீரரான லான்ஸ் ஆம்ஸ்டிராங் சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்று திரும்பினார்.அதனால் என்ன என்று கேட்கிறீர்களா?இந்த பயணத்தின் போது அவர் ரசிகர்களை மகிழ்வித்து தானும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா,பிரபலமாக விளங்கும் விளையாட்டு வீரர் ஒரு நகருக்கு விஜயம் செய்வதும் அவரைக்காண ரசிகர்கள் செல்வதும் எல்லா இடங்களிலும் நடப்பது தானே என நினைக்கலாம் .
ஆனால் ஆம்ஸ்டிராங் பயணத்தில் விசேஷம் என்னவென்றால் மிக இயல்பாக இந்த சந்திப்பு நடந்தது தான்.பொதுவாக பிரபலங்களின் பயண திட்டங்களின் போது என்ன நடக்கும். அவரது வருகை பத்திரிக்கை செய்திகள் மூலம் வெளியாகும். அதைப்பார்த்துவிட்டு அவரைக்காண ரசிகர்கள் முற்றுகையிடுவார்கள்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் ரசிகர்களை மனதில் கொள்ளலாமல் திட்டமிட்டிருந்தால் அவர்கள் வேண்டாத விருந்தாளியாகி விடுவார்கள்.கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது ரசிகர்களும் சேர்த்தே தள்ளப்படுவார்கள்.பாதுகாப்பு போன்ற பிரச்சனை காரணமாக சம்பந்தப்பட்ட வீரரே நினைத்தால் கூட ரசிகர்களுக்கு உதவ முடியாது.
பெரும்பாலான நேரங்களில் ரசிகர்களால் தங்கள் அபிமான நட்சத்திரத்தை பக்கத்தில் சென்றுகூட பார்க்க முடியாது.ஒரு கையெழுத்து வாங்கவும் அவர்கள் திண்டாட வேண்டும்.விளையாட்டு போட்டிகள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.அனுமதிக்கப்பட்ட பகுதியை கடந்து அவர்களால் செல்லவே முடியாது.
விழாக்கள் என்றால் விஐபிக்களும் செல்வாக்கு மிக்கவர்களும் போய் ஒட்டிக்கொள்வார்கள்.ரசிகர்களின் பாடு திண்டாட்டம் தான்.
ஆனால் ஆம்ஸ்டிராங் ஸ்காட்லாந்து வந்த போது எந்தவித தடையோ குறுக்கிடோ இல்லாமல் ரசிகர்களை சந்தித்திருக்கிறார்.அவ்ர்களோடு சைக்கிள் ஒட்டி மகிழ்ந்திருக்கிறார்.
எப்படி என்று கேட்கிறீர்களா?
ஆம்ஸ்டிராங் இந்த பயணத்தை பற்றிய விவரத்தை தெரிவிக்க எந்த இடைத்தரகரையும் நாடவில்லை.மாறாக தனது டிவிட்டர் பக்கத்தில் தனது வருகையை ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
டிவிட்டர் சேவையை தீவிரமாக பயன்படுத்தி வரும் பிரபலங்களில் ஆம்ஸ்டிராங்கும் ஒருவர்.தன்னுடைய பயிற்சி விவரம்,எண்ண ஓட்டம் ஆகியவற்றை எல்லாம் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.ரசிகர்களும் ஆர்வத்தோடு அவரது டிவிட்டர் பக்கத்தில் பின்தொடார்ந்து வருகின்றனர்.புதிய போட்டி என்றாலும் சரி,பத்திரிக்கை பேட்டிக்கு விளக்கம் என்றாலும் சரி டிவிட்டரிலேயே தனது கருத்தை அவர் தெரிவித்து விடுகிறார்.
இப்படித்தான் அவர் ஸ்காட்லாந்து பயண திட்டம் பற்றியும் டிவிட்டரில் அறிவித்தார்.நண்பர்களே நான் ஸ்காட்லாந்து வருகிறேன் என்னை சந்திக்க விரும்புகிறவர்கள் வரலாம்.வந்து என்னோடு சைக்கிள் ஓட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று அவர் கூறியிருந்தார்.
டிவிட்டரில் அவரை பின்தொடரும் அந்நாட்டு ரசிகர்கள் இந்த பதிவை பார்த்ததும் குஷியாகி குறிப்பிட்ட தினத்தன்று சைக்கிளோடு வருகை தந்தனர்.ஆம்ஸ்டிராங் சைக்கிள் ஓட்டிச்செல்ல ரசிகர்களும் அவரோடு உற்சாகமாக சைக்கிள் ஒட்டிச்சென்றனர்.நம்மூர் ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கரோடு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தத் போல் தான் இதுவும்.
ஆம்ஸ்டிராங்கின் சைக்கிள் பந்தைய சாதனைகளை கொண்டாடி மகிழும் அவர்கள் தங்கள் அபிமான நட்சத்திரத்தோடே சைக்கிள் ஒட்ட வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதினர்.
ஆம்ஸ்டிராங்கும் தன் பங்கிற்கு ரசிகர்களோடு நேரத்தை செலவிட முடிந்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.யாராவது சில ரசிகர்கள் வருவார்கள் என்று அவர் நினத்தற்கு மாறாக முன்னூறுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்துவிட்டனாராம்.இதனால் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.அதோடு உள்ளூர் சாம்பியன் ஒருவரும் வந்ததில் அவர் நெகிழ்ந்து போய்விட்டார்.
இனிதே தனது பயணத்தை முடித்த்க்கொண்டு சொந்த நாடான அமெரிக்க திரும்பிய அவர் டிவிட்டரில் மூலமே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
இப்போது ரசிகர்கள் தலைவர் அடுத்த முறை தங்கள் பகுதிக்கு எப்போது வருவார் என்று டிவிட்டரை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கின்றனராம்.
ஆம்ஸ்டிராங் சாதனை வீரர் மட்டுமல்ல.மரணத்தைவென்ற வீரும் கூட. 25 வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் பின்னர் அந்த நோயோடு தீரத்தோடு போராடி வெற்றி பெற்றதோடு மீண்டும் பயிற்சி மேற்கொண்டு சைக்கிள் பந்தயத்திலும் சாத்னை படைத்தார்.சைக்கிள் போட்டியின் உச்சமாக கருதப்படும் டூர் டி பிரான்ஸ் போட்டியில் அவரது சாதனைகள் மலைக்க வைக்ககூடியது.
இதற்காக அவர் மன உறுதியின் மறு வடிவமாக கருதப்படுகிறார்.மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் கருதப்படுகிறார்.
——-
ஆம்ஸ்டிராங்கின் டிவிட்டர் பயன்பாடு தொடர்பான முந்தைய பதிவுக்கு பார்க்க …
——-
link;
http://cybersimman.wordpress.com/2009/02/21/twitter-23/

0 Comments on “ஒரு டிவிட்டால் நிகழ்ந்த அற்புதம்”
nilaamathy
மன உறுதி உள்ளவரின் செயற்பாட்டை பதிவிட்ட உங்களுக்கு நன்றி
.அப்படியே நம்ம பக்கமும் எட்டி பாருங்க
mathinilaa.blogspot.com
……நிலாமதி