உலகின் நீளமான கவிதை நீண்டு கொண்டே இருக்கிறது.அந்த கவிதை தொடர்ந்து எழுதப்பட்டுக்கொண்டே வருகிறது.அந்த கவிதை எப்போது முடியும் என்றும் தெரியவில்லை.
அப்படியென்ன கவிதை? அதை எழுதுவது யார்?
எந்த கவிஞனாலும் எழுதப்படவில்லை அந்த கவிதை.அது உருவாக்கப்படும் கவிதை.டிவிட்டரால் எழுதப்படும் கவிதை.
டிவிட்டரால் எப்படி கவிதை எழுத முடியும்?
டிவிட்டரால் கவிதை எழுத முடியாது.ஆனால் டிவிட்டர் வரிகளை கொண்டு கவிதை எழுதலாம் அல்லவா?அப்படித்தான் இந்த நீளமான கவிதை உருவாக்கப்பட்டு வருகிறது.
குறும் வலைப்பதிவு சேவையான டிவிட்டரில் வெளியாகும் செய்திகளில் இருந்து பொருத்தமான வரிகளே கவிதையாகி வருகின்றன.சாப்ட்வேர் நிபுணர் ஒருவர் இதற்கான சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார்.
ஆன்ட்ரூ கோயர்கே என்னும் பெயர் கொண்ட அவர் ருமேனியா நாட்டைச்சேர்ந்தவர்.சாப்ட்வேர் புரோகிராம்களை உருவாக்குவதில் கில்லாடியான அவர் டிவிட்டராலும் அதில் செய்திகள் வெளியாகும் வேகத்தாலும் கவரப்பட்டு அவற்றை கவிதையாக்கும் நோக்கத்தோடு ஒரு சாப்ட்வேரை வடிவமைத்தார்.
இந்த சாப்ட்வேர் எப்படி கவிதை எழுதுகிறது என்றால்,முதலில் புதிதாக வெளியாகும் டிவிட்டர் செய்தியில் இருந்து ஒரு வரியை தேர்வு செய்து கொள்கிறது.அதன் பிறகு அதனோடு பொருத்தமான ஒரு வரி தேடப்பட்டு இரண்டும் இணைக்கபப்ட்டு கவிதையில் சேர்க்கப்படுகிறது.பொருத்தமில்லாத வரிகள் காத்திருப்பில் வைக்கப்படுகின்றன.பின்னர் புதிய வரிகளுக்கு அவை பொருந்துகின்றனவா என்று ஒவ்வொரு முறையும் பரிசிலிக்கப்படுகிறது.
இப்படி இரண்டு இரணடு வரிகளாக கவிதை வளர்ந்து வருகிறது.சந்த நயம் ஓசை நயம்,எதுகை மோனை ஆகியவற்றின் அடிப்படையில் வரிகள் கவிதையில் சேர்க்கப்படுகின்றன.
இதுவரை 364000 வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.உலகின் நீளமான கவிதை என்று இதனை அழைக்கும் கோயர்கே இதே பெயரில் இணையதளம் ஒன்றையும் அமைத்துள்ளார். இநத தளத்தில் நீளும் இக்கவிதையை படித்துப்பார்க்கலாம்.
இதனை அர்த்தமுள்ள கவிதை என்று சொல்லமுடியாது. பெரும்பாலான வரிகள் வெறும் சொற்சேர்க்கையாக தோன்றினாலும் ஒரு சில வரிகள் உண்மையிலேயே வியப்பையும் சுவாரசியத்தையும் அளிக்கக்கூடியவை.
இண்டெர்நெட்டின் மனசாட்சியாக டிவிட்டரில் வெளியாகும் வரிகள் அமைவதால் அவற்றை பிரதிபலிக்கும் கவிதையாக இந்த நீளமான கவிதை அமைவதாக அவர் கூறுகிறார்.
————

0 Comments on “டிவிட்டரில் எழுதிய கவிதை”
nkashokbharan
நல்ல தகவல். நன்றி.!