மறைந்த அமெரிக்க எம் பி எட்வர்டு கென்னடி நினைவாக டிவிட்டர் பக்கம் ஒன்று அமைக்கப்பட்டு அவரது இறுதிச்சடங்கு தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.பொது மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்க விரும்புகிறவர்களுக்கும் தேவையான தகவல்கள் கென்னடி குடும்பத்தினராலேயே அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கென்னடியின் மறைவுக்கு அமெரிக்காவே உருக்கமாக அஞ்சலி செலுத்தி வரும் வேளையில் இந்த டிவிட்டர் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.காலாத்தால் உருவாக்கப்பட்ட டிவிட்டர் பக்கம் என்றே இதனை சொல்லலாம்.
பொதுவாகவே தலைவர்கள் மறைந்த பின் அடக்கம் எப்போது,இறுதி ஊர்வலம் புறப்படுவது எங்கிருந்து,அஞ்சலி செலுத்தும் நேரம் எது என பலவிதமான கேள்விகள் எழும். சூழ்நிலைக்கேற்ப இன்னும் பல கேள்விகள் எழலாம்.
இவற்றுக்கெல்லாம் பதில் தேடுவது சுலபமில்லை.பத்திரிக்கைகளை புரட்ட வேண்டும் .நண்பர்களிடம் விசாரிக்க வேண்டும்.
எட்வர்டு கென்னடி குடும்பத்தினர் இதற்காகவே டிவிட்டர் பக்கம் ஒன்றை வுருவாக்கி இறுதிச்சடங்கு தொடர்பான தகவல்களை எல்லாம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.இந்த டிவிட்டர் தகவல்கள் தேவையான விவரங்களை தருவதோடு ஒரு நேரடி வர்ணனை போலவும் அமைந்துள்ளது.
அது மட்டுமல்ல மறைந்த தலைவரின் குணநலன்களை எடுத்துச்செல்வதாகவும் டிவிட்டர் பதிவுகள் அமைந்திருந்தன.அதே போல் அஞ்சலி செலுத்த தலைவர்கள் அவரைப்பற்றி தெரிவித்த கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
கென்னடி முக்கியமாக கருதியவை,அவரது சிந்தனைகள் ஆகியவையும் கூட பகிர்ந்து கொள்ளப்பட்டன.
மொத்தத்தில் கென்னடிக்கான டிவிட்டராஞ்சலியாக இந்த பதிவுகள் அமைந்திருந்தன.தொழில்நுடபத்தை பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கியவர் என்றும்,முதன் முதலில் சொந்தமாக இணையதளம் உருவாக்கிகொண்ட எம் பி என்னும் சிறப்பையும் பெற்ற கென்னடிக்கு பொருத்தமான அஞ்சலி தான்.
—–
link;
http://twitter.com/kennedynews