டிவிட்டரில் வாயை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் மத்திய அமைச்சரான சஷி தரூர்.சிக்கன பயணம் பற்றி சற்றே நகைச்சுவையாக அவர் பதிவு செய்த கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் சார்பில் தரூருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை இந்தியாவின் முதல் டிவிட்டர் சர்ச்சை என்று சொல்லலாம்.
அதோடு டிவிட்டர் பயன்பாடு பற்றிய எச்சரிக்கையாகவும் இந்த சம்பவம் அமைந்துள்ளது என்றே தோன்றுகிறது.டிவிட்டர் கருத்தால் அமைச்சரான தரூருக்கு ஏற்பட்டுள்ள சங்கடம் ஒரு புறம் இருக்க அரசியல் தலைவர்கள் டிவிட்டர் போன்ற சமுக மீடியா சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்று வாதிடும் என் போன்றவர்களுக்கான தர்ம சங்கடமாகவும் அமைந்துள்ளது.
இனி சர்ச்சையை கவனிப்போம்.
நாட்டில் பல இடங்களில் வறட்சி நிலவுவதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிக்கனத்தை கடைபிடிக்குமறு கட்சி அமைச்சர்கள் மற்றும் எம் பி க்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரும் சிக்கனத்தை கடைபிடித்து வருகிறார்.விமானத்தில் சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்து வருகிறார்.தலைவி எவ்வழி தொண்டன் அவ்வழி என்று மற்ற அமைச்சர்களும் இதனை பின்பற்றத்தொடங்கியுள்ளனர்.
இது உண்மையிலேயே சிக்கனத்திற்கு வழிவகுக்குமா அல்லது,பிரச்சனைக்கு தீர்வாக அமையாதா கண்துடைப்பு நடவடிக்கையா? என்னும் கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும் இந்த சிக்கன நடவடிக்கை ஒரு சங்கிலித்தொடர் விளைவையும் கூடவே சர்ச்சையையும் ஏற்படுத்தி விட்டது.
அமைச்ச்ர்கள் சாதாரண வகுப்பில் பயணிக்கினறனர்.எம் பி க்கள் சிக்கனமாக இருக்க முயல்கின்றனர்.தனி விமான பயனத்தை கைவிட்டு பயனிகள் விமானத்தில் செல்கின்றனர்.சோனியாவின் புதல்வர் ராகுல் விமானத்திற்கு பதில் டிரைனில் செல்கிறார்.
இவற்றை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.கட்சியிலேயே சிலர் முரண்டு பிடிக்கின்றனர்.இது பலன் தருமா என்னும் விவாதமும் சூடு பிடித்திருக்கிறது.
டிவிட்டர் வெளியிலும் இந்த விவாதம் வெடித்திருக்கிறது.
டிவிட்டரில் சுறுசுறுப்பாக இருந்து வரும் மத்திய அமைச்சரான சஷி தருர் இந்த விவாததிற்கு தனது டிவிட்டர் பதிவில் பதிலளித்தபோது பிரச்சனை உண்டானது.
பரம்பரை பணக்காரர் இல்லை என்று சொலவது போல தரூர் பரம்பரை அரசியல்வாதி இல்லை. அதிகாரியாக இருந்து ஐ நா உட்பட பல அமைப்புகளில் முக்கிய பதவி வகித்து அரசியலுக்கு வந்து எம் பியாகி இருப்பவர்.அவர் மீது இருக்கும் நன்மதிப்பில் மண்மோகன் அவரை அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறார்.
தரூர் விஷயமறிந்தவராக இருப்பதால் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பினால் சேவைகளின் பயன்பாட்டை அறிந்தவாராக இருக்கிறார்.டிவிட்டர் மூலம் போது மக்களையும் வாக்காளர்களையும்தொடர்பு கொள்ளலாம் எனற நம்பிக்கையில் அவர் டிவிட்டர் மூலம் சுறிசுறுப்பாக தனது எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
தேர்தலின் போதே அவர் டிவிட்டரை ப்யன்படுத்தினார். தேர்தலுக்குப்பின் அவர் டிவிட்டரை பயன்படுத்திய விதம் பாரட்டும்படி இருந்தது.(பார்க்க இந்தியாவின் முன்னோடி எம் பி என்னும் என் முந்தைய பதிவு)
ஒரு அமைச்சராகவும் தொடர்ந்து அவர் தனது செயல்பாடுகளை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
சிக்கன நடவடிக்கை பற்றி முதன்முதலில் சர்ச்சை எழுந்தபோது தரூர் டிவிட்டர் மூலமே விளக்கமளித்தார்.நட்சத்திர ஒட்டலில் தங்கிய அவரும் இன்னொரு அமைச்சரும் அங்கிருந்து வெளியேறி அரசு ஒதிக்கிய வீட்டில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக செய்திவெளியான போது தரூர் தனது டிவிட்டர் பதிவில் நட்சத்திர ஒட்டலில் சொந்த செலவிலேயே தங்குவதாவும் , போதுமக்கள் வரிப்பணத்தை தான் வீணாக்க மாட்டேன் என்றும் விளக்கமளித்தார்.
அரசியல் தலைவர்கள் டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணமாக இதனை கருதலாம். ஓட்டல் அறை பற்றிய சர்ச்சை எழுந்ததும் தரூர் அதனை அலட்சியப்படுத்தவும் இல்லை. மாறாக் செய்தியாளர் சந்திப்பு என்றெல்லாம் பரபரப்பையும் உண்டாக்கவில்லை.
தனது டிவிட்டர் பதிவில் நேரடியாக விளக்கம் அளித்து தனது நிலையை தெளிவு படுத்தினார்.இதனால் நேரமும் மிச்சம்; பிரச்சனையும் தெளிவானது.மறுநாள் நாளிதழ்கள் இதனை செய்தியாக் வெளியிட்டன.
டிவிட்டர் என்பது கருத்து வெளியிட்டிற்கான சாதனம் என்பதால் பிரபல புள்ளிகள் தங்கள் எண்ணங்களை டிவிட்டர் செய்தாலே போதும் கருத்துக்களை வெளியிட்டு விடலாம்.மறுப்பும் சரி விளக்கமும் சரி டிவிட்டர் மூலமே சாத்தியம்.புதிய அறிவிப்புகளையும் டிவிட்டரிலேயே வெளியிடலாம்.
மக்கள் பிரதிநிதிகள் டிவிட்டரில் எண்ணங்களை பகிர்வதன் மூலம் தங்களை தேர்ந்தெடுத்த வாக்களர்களுக்கான ஜனநாயக கடமையை சிறப்பாக நிறவேற்றலாம்.வாக்களர்களும் டிவிட்டர் பின்தொடர்வதன் மூலம் தங்கள் பிரிதிநிதியின் செயல்பாடுகள் மீது ஒரு கண் வைத்திருக்கலாம்.
டிவிட்டர் மூலமே அவர்களை தொடர்பும் கொள்ளலாம்.இதெல்லாம் டிவிட்ட செய்வதன் சாதகமான அம்சங்கள்.
ஆனால் தரூர் டிவிட்டர் சிக்கன செயல்பாடு குறித்து டிவிட்டரில் தெரிவித்த கருத்து உண்டாக்கிய சர்ச்சை டிவிட்டர் செய்வதன் பாதகமான முகத்தை உணர்த்தியிருப்பதாகவும் கருத இடமுண்டு.
டிவிட்டர் ஒரு வெளியீட்டு சாதனம் மட்டுமல்ல. உறையாடலுக்குமான வழியும் கூட.டிவிட்டரில் கேள்வி கேட்டு டிவிட்டரிலேயே பதிலளிக்கலாம்.
இப்படிதான் அச்சுதன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தரூருக்கு கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.
அமைச்சர் அவர்களே அடுத்த முறை நீங்கள் கேரளாவுக்கு செல்லும் போது கால்நடை வகுல்லில் பயணம் செய்வீர்களா?என்று எங்களுக்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.
தரூரும் ,புணித பசுக்களுக்கு அதரவு தெரிவிக்கும் வகையில் நிச்சயமாக என்று பதிலளித்தார்.
இதனைப்படித்த காங்கிரஸ் பிரமுகர்கள் கொதித்துப்போயினர்.தரூர் பதில் சொன்னவிதம் பொறுப்பற்றது என கருதியதோடு கட்சியின் சிக்கன நடவடிக்கையை கிண்டல் செய்வதாகவும் நம்பினார். அதைவிட முக்கியமாக சோனியா அல்லது ராகுலை கிண்டல் செய்வதாக நினைத்து வெகுண்டனர்.
கட்சியின் செய்தி தொடர்பாளரான ஜெயந்தி நடராஜன் தரூருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு தரூர் காங்கிரஸ் கட்சியின் அரசியல் காலாச்சாரத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரசியல் பாடமே நடத்திவிட்டார்.
காங்கிரஸ் கட்சி அமைச்சர் ஒருவரை இப்படி வெளிப்படையாக கண்டித்ததேயில்லை.
தரூர் இப்படி பொருப்பில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேன்டும் என்றும் கூறப்பட்டது.அவர் டிவிட்டர் செய்வதை நிறுத்து வேண்டும் என்று சொல்லப்பட்டதாக கூட வைத்துக்கொள்ளலாம்.
டிவிட்டர் பற்றி அரசியல் உலகில் போதிய புரிதல் இல்லாத்தால் டிவிட்டரே பிரச்சனைக்கு காரணம் என்று கருதப்பட்டதாக நினைக்கலாம்.அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் எப்படி அதிகார பூர்வமாக தொடர்பு கொள்கின்றன்றோ அதுவே நல்லது என காங்கிரஸ் பிரமுகர்கள் நினைக்கலாம்.
டிவிட்டர் பயன்பாட்டை முன்வைப்பவர்களுக்கும் இந்த சம்பவம் கொஞ்சம் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது உண்மை.அதோடு டிவிட்டர் பற்றிம் கேள்விப்பட்டு அதனை ப்யன்படுத்தலாம் என நினக்கும் அரசியல் பிரமுகர்கள் நம்க்கேன் வம்பு என டிவிட்டரில் இருந்து ஒதுங்கி விடலாம்.
இது டிவிட்டருக்கும், டிவிட்டர் கொண்டு வரக்கூடிய மாற்றங்களுக்கும் நல்லதல்ல.
அது மட்டுமல்லாமல் உள்ள படியே டிவிட்டர் செய்வது தேவைதானா என கேட்கப்படுவதும் நியாயம் தானோ என்னும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு பதிலளிக்க உதவும் குறும்பதிவு சேவையான டிவிட்டர் வெளியிட்டிலும் பகிர்விலும் எத்தனையோ புதிய வாயில்களை திறந்து விட்டிருப்பதாக டிவிட்டர் அபிமானிகளால் பாரட்டப்பட்டாலும்,காபி சாப்பிட்டேன், அரட்டை அடித்தேன் போன்ற ஒன்றுக்கும் உதவாத விவிரங்களை பகிர்வது தேவைதானா என்றும் கேட்கப்படுகிறது.
டிவிட்டர் அருமையே அதன் பயன்பாட்டில் தான் இருக்கிறது என்றாலும் டிவிட்டர் செய்வதால் தேவையில்லாத சர்ச்சைகள் உண்டாவதை பார்ப்பவர்கள் நிச்சயம் டிவிட்டர் மீது தாக்குதல் தொடுக்க கூடும்.
அந்த வகையில் தரூரின் செயல் டிவிட்டர் பயன்பாட்டைப்பொருத்தவரை துரதிர்ஷடவசமாது தான்.
இதனிடையே சஷி தரூர் தனது டிவிட்டர் கருத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.டிவிட்டர் மூலமே அவர் மன்னிப்பு கோரி விளக்கமளித்துள்ளார்.

0 Comments on “சஷி தரூர் சொன்னது சரியா?”
4தமிழ்மீடியா
சிம்மன்!
உங்கள் வலைப்பூவினை எங்கள் தளத்தில் வாரமொர வலைப்பதிவு பகுதியில், இவ்வாரம் இணைத்துள்ளோம். அதை இந்த இணைப்பில் காணலாம்