டிவிட்டர் தனது கேள்வியை மாற்றிக்கொண்டிருக்கிறது.ஆனால் அதற்காக டிவிட்டரை பயன்படுத்துபவர்கள் மாறவேண்டியதில்லை.சொல்லப்போனால் டிவிட்டர் பயனாளிகள் அதனை பயன்படுத்தும் விதத்தை வைத்தே டிவிட்டர் தனது கேள்வியை மாற்றியிருக்கிறது.
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
இது தான் டிவிட்டர் இது வரை கேட்டு வந்த கேள்வி.இதற்கு பதில் அளிக்கும் வகையில் தான் டிவிட்டர் சேவையை எல்லோரும் பயன்படுத்தி வந்தனர்.அதாவது ஆரம்பத்தில்.
இப்போது டிவிட்டரின் போக்கே மாறிவிட்டது.டிவிட்டரை பயன்படுத்தும் விதமும் மாறியிருக்கிறது.துவக்கத்தில் கூறப்பட்டது போல ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பகிர்ந்து கொள்ள மட்டும் அல்லாமல் என்ன நினைக்கிறார், எதை படித்துக்கொண்டிருக்கிறார்,என எல்லா வகையான தகவல்களையும் பகிர்வதற்கான இடமாக டிவிட்டர் மாறியிருக்கிறது.
காபி சாப்பிடுவதையும் காலை உணவையும் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட டிவிட்டர் இன்று ஒரு ஒளிபரப்பு சாதனாமாக உருப்பெற்றிருக்ககிறது.
டிவிட்டரில் புதிய படங்கள் பற்றிய விமர்சனங்களை சுடச்சுட பகிர்கின்றனர்.பூகம்பமோ புயல் மழையோ முதல் செய்தி அனேகமாக டிவிட்டரில் இருந்து பறக்கிறது.விபத்து என்றாலும் சம்பவ இடத்தில் இருப்பவர் உடனே அந்த அனுபவத்தை உடனே டிவிட்டர் செய்கிறார்.டிவிட்டர் மூலமே பேட்டி காணப்பட்டுள்ளது.
ஒருவிதத்தில் இது நல்லது தான்.டிவிட்டர் மீது துவக்கத்தில் முன்வைக்கப்பட்ட விமர்சனத்திற்கும் இது பதிலாக அமைந்துள்ளது.ஒருவர் என்ன் செய்து கொண்டிருக்கிறார் என்னும் கேள்விக்கான பதிலாக பகிரப்படும் விவரங்கள் பல நேரங்களில் அற்பத்தனமாக இருக்குமே அதானல் சமுகத்திற்கு என்ன பயன் என்று கேட்கப்பட்டது உண்டு.ஆனால் டிவிட்டர் பயனாளிகள் இந்த கேள்வி சுவரை உடைத்து எரிந்துவிட்டு டிவிட்டரை எப்படியெல்லாமோ பயன்படுத்து வருகின்றனர்.விளைவு டிவிட்டர் பயன்பாட்டில் புதிய எல்லைகள் எற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களை எல்லாம் புரிந்து கொண்டு டிவிட்டர் தனது அடிப்படை கேள்வியை மாற்றிக்கொள்வதாக அறிவித்துள்ளது.
அதன் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் டிவிட்டர் கேள்வி இனி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதல்ல அதற்கு பதிலாக என்ன நடக்கிறது என்பதே என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவில் நண்பர்கள் தங்களுக்குள் தொடர்புன்கொள்ளும் எளிய வழியாக அறிமுகமான டிவிட்டர் பயனாளிகள் கைகளில் புதுய அவதாரம் எடுத்து தனிநபர்களும் குழுகளும் அமைப்புகளும் அதனை முற்றிலும்க் புது விதமாக பயன்படுத்து வருவதால் இந்த மாற்றம் அவசியமாவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆக இனி டிவிட்டர் கேட்கும் கேள்வி என்ன நடக்கிறது என்பதாக்வே இருக்கும்.டிவிட்டர் பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமாகவும் இருக்கும்.
(
டிவிட்டர் பற்றிய எனது அறிமுக பதிவையும் படித்துப்பார்கவும்
)
—–
link;
http://cybersimman.wordpress.com/2009/08/26/twitter-26/

0 Comments on “டிவிட்டரில் அதிரடி மாற்றம்”
ராஜேஷ் கண்ணன்
Definitely twitter is a threat to Google search somewhat.
Recently my login failed in payment gateway. Immediately i searched in twitter whether any other people has similar problems. And yes, there were few with same problems at that second.
Well, google could have not helped me in this situation. Only twitter can do such helps.
Hope google buys twitter soon.