தினமும் எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கிறது.இருப்பினும் அமெரிக்காவின் ஹால் தாமசுக்கு வேலை கிடைத்த விதம் குறித்து வைத்து கொள்ளக்கூடியது.
மனிதர் டிவிட்டர் மூலம் வேலைக்கு விண்ணப்பித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
வேலை வாய்ப்புக்கு என்று சில விதிகளும் இலக்கணமும் இருக்கின்றன அல்லவா?ஒரு நல்ல அறிமுக கடிதம் எழுத வேண்டும்.பயோ டேட்டா என்று சொல்லப்படும் தன் விவரக்குறிப்பு விரிவானதாகவும் வேலைக்கான ஒருவரின் தகுதியை சரியாக எடுத்துறைப்பதாகவும் இருக்க வேண்டும்
.ஒரு நல்ல தன் விவரக்குறிப்பை தாயரிக்க தலை பிய்த்துக்கொள்பவர்கள் எல்லாம் இருக்கின்றனர்.இதற்காகவே பயிற்சி எடுத்து கொள்பவர்களும் உண்டு.
ஆனால் தாமஸ் அறிமுக கடிதமும் எழுதவில்லை.தன் விவரக்குறிப்பையும் அனுப்பவில்லை.டிவிட்டர் மூலம் விண்ணப்பித்தார், அவ்வளவே.வேலை அவருக்கே கிடைத்து விட்டது. எப்படி?
தாமஸ் டிவிட்டரை சரியாக பயன்படுத்தி அசத்தியிருந்தார்.
பி எப் ஜி கம்யூனிகேஷன்ஸ் என்னும் நிறுவனம் தான் டிவிட்டர் மூலமெ அவரை பணிக்கு அமர்த்திய நிறுவனம்.மார்க்கெட்டிங் துறையில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் சமூக மீடியா என்னும் புதிய துறை ஏர்படுத்தப்பட்டது.
பெரும்பாலான நிறுவனக்களில் மக்கள் தொடர்பு என்னும் தனித்துறை இருபப்து போல் இப்போது பல நிறுவனங்களில் சமூக மீடியா என்னும் துறை உருவாக்கப்படுகிறது. டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவைகளை நிறுவன வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்பிற்காக திறம்பட பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே இதன் பின்னே உள்ள நோக்கம்.
வர்த்தக உலகில் இது புதிய போக்காக உருவாகி வருகிறது. டிவிட்டரில் நிறுவனம் பற்றி தெரிவிக்கப்படும் கருத்துக்களை கண்காணித்து அதற்கு பதில் அளித்து நிறுவனத்தின் நற்பெயரை காப்பதும் இந்த துறையின் கடமையாக கருதப்படுகிறது.
நிறுவனத்தின் புதிய திட்டங்கள் பற்றியும் டிவிட்டரில் பதிவு செய்வதும் இந்த துறைடமிருந்து எதிரப்பார்க்கப்படும் பணி. இதன் விளைவு என்ன தெரியுமா? அநேக நிறுவனங்களில் இதற்காக என்றே புதிய பணியிடம் உருவாக்கப்பட்டு வருகிறது. பி எப் ஜி நிறுவனமும் இதோ போன்ற பணியிடத்தில் புதிதாக ஒருவரை நியமிக்க விரும்பியது.
ஆனால் வழக்கமான முறையில் இந்த பணிக்கான நேர்முகத்தேர்வை நடத்த விரும்பாமல் டிவிட்டர் மூல்மே நடத்த எண்ணியது. புதிய துறைக்கான பணி நியமனத்தை பழைய முரையில் நடத்துவதைவிட புதிய முறையிலேயே செய்வது தானே பொருத்தமாக இருக்கும் என்று நிறுவனம் கருதியது
.இதன் பயனாக வேலை வாய்ப்பு அறிவிப்பு டிவிட்டர் பதிவாகவே வெளியானது. அந்த பதிவிலேயே அறிமுக கடிதம் எல்லாம் வேண்டாம்,தன் விவரக்குரிப்பும் வேன்டாம். இந்த வேலைக்கான தகுதியை டிவிட்டர் மூலமே வெளிப்படுத்துக என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
டிவிட்டர் மூலம் நிறுவன பொருட்கள விற்க உங்களால் முடியும் என்பதை நிருபிக்க டிவிட்டர் மூலம் உங்கள் திறமையை வெளிப்படுத்துவதை விட சிறந்த வழி உண்டா என்றும் கேட்கப்பட்டிருந்தது.
டிவிட்டரில் கருத்துக்களை பதிவு செய்ய அதிக்பட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் டிவிட்டர் மூலம் விண்ணபிப்பது எத்தனை சவாலானது என புரிந்து கொள்ளலாம்.வேலைக்கான விளம்பரத்தைப்பார்த்த பலரும் இப்படி நினைத்திருக்கலாம்.
ஆனால் இளைஞரான தாமஸ் ஹால் அப்படி நினைக்கவில்லை.ஏற்கனவே டிவிட்டர் பயன்பாட்டில் பரிட்சயம் மிக்க அவர் டிவிட்டர் மூலம் விண்ணப்பிக்க உற்சாகமாக தயாரானார். அவர் அனுப்பிய டிவிட்டர் செய்தியை பார்த்து வியந்து போன நிறுவன அதிகாரி சோலனே கெல்லி தாமஸ் வேலைக்கு தேர்வானதாக அறிவித்தார்.
கற்பனை மற்றும் படைப்பாற்றல் இரன்டையும் கலந்து அவர் அனுப்பிய டிவிட்டர் செய்தி இது தான்;பி எஃப் ஜி நிறுவனத்திற்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக தோன்றுகிறது. இந்த வாசகத்திற்கு முன் நிறுவன பெயர் மற்றும் அதிகாரியின் பெயரை குறிப்பிட்டிருந்த தாமஸ் அதன் முடிவில் மேலும் தகவல்களுக்கு என்று ஒரு இணைப்பையும் அத்தோடு தனது வலைப்பதிவுக்கான இணைப்பையும் கொடுத்திருந்தார்.
முதல் இணைப்பை கிளிக் செய்தால் புகழ் பெற்ற தொழில்நுட்ப இதழான வயர்டு பத்திரிக்கையின் புகப்பு பக்கத்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதில் தாமஸ் பேட்டி கொடுப்பது போன்ற படம் இருந்தது.அந்த பேட்டியில் தான் அவர் நிறுவனத்தின் வளமான எதிர்காலம் பற்றி பேசுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. புதுமையான சிந்தனை தானே.
மேலும் அவரது வலைப்பதிவு இனைப்புக்கு சென்றால் டிவிட்டர் போன்ற தளங்களை பயன்படுத்துவதில் அவருக்கு உள்ள பரிட்சயம் புலப்பட்டது. இப்படி டிவிட்டரின் 140 எழுத்துக்கள் வரையரையை புத்திசாலித்தனமாக கையாண்டதால் தாமஸ் வேலைகாக தேர்வானார்.
வருங்காலத்தில் மேலும் பல நிறுவனங்கள் டிவிட்டர் மூலம் நேர்க்காணல் நடத்தலாம்.அதற்கு நிங்களும் தயாராக இருங்கள்.
————

0 Comments on “டிவிட்டர் மூலம் கிடைத்த வேலை”
டெக்ஷங்கர் @ TechShankar
நல்ல ஆழமான கருத்தாழம் மிக்க கட்டுரை. தொடர்ந்து டிவிட்டர் பற்றிய தகவல்களை தமிழில் தருகிறீர்கள். நன்றி. ஒரு சிறு விண்ணப்பம். கட்டுரையை எழுதி சப்மிட் அழுத்துவதற்கு முன்னர் ஒரு முறையேனும் proof பார்த்துவிட்டு சப்மிட் செய்யுங்களேன்.
ஆங்காங்கே தென்படும் எழுத்துப் பிழைகளை சரி செய்யலாமே நண்பரே!.
உங்கள் டிவிட்டர் பற்றிய கட்டுரைகளுக்கு நான் விசிறியாகிவிட்டேன்.
cybersimman
எழுத்து பிழைப்பற்றி உங்களைப்போல் பலரும் குறிப்பிட்டுள்ளனர். இயன்றவரை களைய முயல்கிறேன்.மேலும் திவிரமாக்குகிறேன்.
அன்புடன் சிம்மன்
IQBAL SELVAN
அடேங்கப்பா இப்படி ஒரு வழி எனக்கு தெரியாம போச்சே??? மனுஷன் புத்தி சாலி தானுங்க………
http://wp.me/KkRf
anand
I want to deposit some money in Stock Exchange. But I don’t know the processing method. Hence I request to give tips.
cybersimman
please see folloawing blogs;
http://top10shares.wordpress.com/
http://panguvaniham.wordpress.com/
http://indiyapangusanthai.blogspot.com/
illuminati
Happy new year friend……..
I’m new to the blogging world.Do visit my blog and comment please .
http://illuminati8.blogspot.com/
nsebse
thanks for the info…
Posted by cybersimman on December 30, 2009 at 7:48 மு.பகல்
please see folloawing blogs;
http://top10shares.wordpress.com/
http://panguvaniham.wordpress.com/
http://indiyapangusanthai.blogspot.com/