பாலிவுட்டின் பாட்ஷா டிவிட்டரிலும் பாட்ஷாவாகியிருக்கிறார்.ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதையும் ,அதே வேகத்தில் முதல் நாளிலேயே 10 ஆயிரம் பின்தொடர்பாளர்களை பெற்றிருப்பதையும் தான் குறிப்பிடுகிறன்.
திரைப்பட நட்சத்திரங்கள் ரசிகர்களோடு தொடர்பு கொள்ள டிவிட்டரை விட சிறந்த மற்றும் எளிமையான வழி கிடையாது.பல பிரபலங்கள் இதனை உணர்ந்து டிவிட்டர் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிவிட்டர் செய்யும் பாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே வரும் நிலையில் பாலிவுட் மன்னாக கருதப்படும் கான்(ஷாருக்கான்)இப்போது டிவிட்டரில் தனக்கான பக்கத்தை துவக்கியிருக்கிறார்.
ஷாரூக் டிவிட்டருக்கு வந்ததன் பின்னே சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது.ஷாரூக்கை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் கரண் ஜோகர் தான் அவரை டிவிட்டர் பக்கம் இழுத்து வந்துள்ளார்.டிவிட்டருக்கான் விளம்பர தூதரைப்போல செயல்பட்டு ஷாரூக்கை டிவிட்டர் செய்ய சம்மதிக்க வைத்ததாக ஜோகர் குறிப்பிட்டுள்ளார்.
ஷாரூக்குடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி 3 மாதத்திற்கும் மேல் டிவிட்டரின் அருமை பெருமைகளை அவரிடம் எடுத்துச்சொல்லி ஜோகர் ஷாரூக்கை ஒருவழியாக டிவிட்டர் செய்ய சம்மதிக்க வைத்துள்ளார்.
ஷாரூக் டிவிட்டர் செய்ய துவங்க வேண்டும் என்பதில் ஜோகருக்கு ஆர்வம் ஏற்பட முக்கிய காரணம் இருக்கிறது. ஜோகரின் டிவிட்டர் பக்கத்தை படிக்க வரும் ரசிகர்களில் பெரும்பலானோர் ஷாரூக் தொடர்பான தகவல்களையே கேட்டு வந்துள்ளனர் .மேலும் பலர் ஷாருக்கிடம் சொல்ல நினைக்கும் விஷயம் அல்லது கேட்க நினைப்பவற்றை ஜோகரிடம் கேட்டுள்ளனர.எனவே ஷாருக்கே டிவிட்டர் செய்தால் ரசிகர்களின் தகவல் ஏக்கத்தை போக்க முடியும் என்று ஜோகர் நினைத்திருக்கிறார்.
அதோடு ஏற்கனவே டிவிட்டரின் ஆற்றலை உணர்ந்தவர் என்ற முறையில் ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள ஷாரூக் டிவிட்டர் செய்வது அவசியம் என்றும் நினைத்துள்ளார்.
உங்கள் மீது அபிமானம் வைத்திருக்கும் லட்சக்கணக்கானோர் டிவிட்டரில் உங்களுக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர் என்று சொல்லி ஒரு வழியாக ஷாரூக்கை சம்மதிக்கவும் வைத்து விட்டார்.
ஷாரூக்கும் தனது முதல் பதிவிலேயே இதனை குறிப்பிட்டு ஜோகரால் தான் டிவிட்டரில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.அடிப்படையில் கூச்ச சுபாவம் கொண்ட நான் இயக்குனரும் நண்பருமான
ஜோகரின் வற்புறுத்தலால் டிவிட்டர் மூலம் கருத்துக்களை பகிர முன்வந்திருப்பதாக ஷாருக் குறிப்பிட்டிருந்தார்.
ஷாரூக் டிவிட்டரில் நுழைந்ததுமே இரண்டு விஷயஙகள் நடந்தன. ஏற்கனவே டிவிட்டரில் இருக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன்,விவேக் ஒபிராய் ,பாரான் அக்தர் போன்றவர்கள் அவரை டிவிட்டருக்கு வரவேற்றனர்.
அதோடு ஷாருக் ரசிகர்கள் அளவில்லா மகிழ்ச்சியோடு அவரது டிவிட்டர் பக்கத்தில் பின்தொடர்பாளர்களாக இணைந்தனர். முதல் நாளன்றே 10 ஆயிரம் பேர் ஷாருக் பக்கத்தில் சேர்ந்துவிட்டனர்.
இதே வேகத்தில் தொடர்ந்தால் டிவிட்டரில் உள்ள மற்ற பாலிவுட் நட்சத்திரங்களை அவர் பின்னுக்குத்தள்ளிவிடும் வாய்ப்பு உள்ளது.
ஷாரூகை பின்தொடர விரும்புகிறவ்ர்கள் கவனத்திற்கு ஐயம் எஸ் ஆர் கே என்னும் பெயரில் அவர் டிவிட்டர் செய்கிறார்.
———–

0 Comments on “டிவிட்டரில் ஷாரூக் கான்”
muthu
thanks for share a new news to us im willing to go head.
eppoodi
நல்ல விடயம் ……
Pingback: Tweets that mention டிவிட்டரில் ஷாரூக் கான் « Cybersimman's Blog -- Topsy.com