ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்து முதல் சில நாட்களிலேயே அதிக பின்தொடர்பவர்களை பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ஷாரூக் டிவிட்டரை பயன்படுத்தும் விதம் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் டிவிட்டரில் அவருக்கு போட்டியும் உருவாகியுள்ளது.
போட்டி என்றால் ரசிகர் ஒருவர் ஷாரூக் பெயரிலேயே போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை உருவாக்கி ஷாரூக் போலவே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த போலி ஷாரூக்கிற்கும் பின்தொடர்பாளர்கள் கிடைத்திருக்கின்றனர்.
டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் பக்கத்தை அமைக்கலாம்.பெரும்பாலும் பலர் தங்கள் பெயரில் டிவிட்டர் பக்கம் அமைத்து தங்கள் சுயபுராணத்தை பதிவு செய்வது உண்டு.ஒரு சிலர் மட்டும் விவகாரமாக பிரபலங்களின் பெயரில் டிவிட்டர் பக்கத்தை துவக்கி விளையாடுவதுண்டு.சில நேரங்களில் ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரத்தின் புகழ்பாட இவ்வாறு செய்வதுண்டு.சில வேண்டுமென்றே விவகாரமாக இதனை செய்வதும் உண்டு.
கவனத்தை ஈர்ப்பது உட்பட இதற்கு பலவித நோக்கங்கள் இருக்கின்றன.இதனை கட்டுப்படுத்தவே டிவிட்டர் பிரபலங்களைப்பொருத்தவரை அவ்ர்களுக்கான அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்த உறுதிசெய்த் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.டிவிட்டர் பக்கத்தின் வலது புறத்தில் சரிபார்க்கப்பட்ட பக்கம் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.
அக்மார்க் முத்திரையைப்போல சம்பந்தப்பட்ட பிரபலத்திற்கு உரிய பக்கம் இது என உணர்த்தும் சான்றிதழ் இது,
ஆனால் இந்த கட்டுப்பட்டையும் மீறி போலி பக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஷாரூக் விஷயத்தில் அவர் ‘iamsrk’,என்ற பெயரில் டிவிட்டர் பக்கத்தை அமைத்துள்ளார என்றால் அவரது போலி ‘imsrk. என்னும் பெயரில் டிவிட்டர் செய்து வருகிறார்.
இந்த செயலை எதிர்த்து ஷாரூக் டிவிட்டர் நிரவாகத்திடம் முறையீடு செய்து நிவாரணம் தேடலாம். அவ்வாறு செய்கிறாரா என்று தெரியவில்லை.
————
இது போலி ஷாரூக்;http://twitter.com/imsrk

0 Comments on “டிவிட்டரில் ஷாருக்கிற்கு போட்டி”
கிரி
எப்படியெல்லாம் கிளம்பறாங்கய்யா!
Pingback: Tweets that mention டிவிட்டரில் ஷாருக்கிற்கு போட்டி « Cybersimman's Blog -- Topsy.com
ramanank
good
IQBAL SELVAN
Kalakraanga Ellaarum ///////// http://wp.me/KkRf
Ennaiyum follow panuvaara