நின்றால் மாநாடு;நடந்தால் பேரணி என்று நம்மூர் தலைவர்கள் புகழப்படுவது போல டிவிட்டரில் சில பிரபலங்கள் அடியெடுத்து வைக்கும் போது தொண்டர்கள் ஆதரவாளர்களும் குவிந்து விடுகின்றனர்.பில் கேட்ஸ் வருகையில் இது நிகழ்ந்திருக்கிறது.அதாவது கட்சி ஆரம்பித்தவுடன் லட்சக்கணக்கில் தொண்டர்கள் சேருவது போல டிவிட்டரில் அவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் பின்தொடர்பவர்கள் கிடைத்துள்ளனர்.
பில் கேட்சின் செல்வாக்கின் அடையாளம் இது.
குறும்பதிவு சேவையான டிவிட்டரை பல பிரபலங்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.புதிதாக பிரபலங்களும் டிவிட்டரில் ஐக்கியமாகி வருகின்றனர்.
ஒவ்வொரு முறை ஒரு நட்சத்திரம் அல்லது பிரபலம் டிவிட்டருக்கு வரும் போதும் அது கவனத்தை ஈர்க்கிறது.செய்தியாகிறது. விவாதத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பிட்ட அந்த பிரபலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை படிப்பதில் இணையவாசிகளுக்கு ஆர்வமும் உண்டாகிறது.விளைவு பலரும் பின்தொடர்பவர்களாக இணைகின்றனர்.
ஒரு சில பிரபலங்களுக்கு ஆயிரக்கணக்கில் பின்தொடர்பவர்கள் கிடைக்கலாம். சிலருக்கு பல்லாயிரக்கணக்கில் கிடைக்கலாம்.இதற்கு நால் கணக்கில் ஆகலாம்.வார்க்கணக்கில் ஆகலாம்.
ஆனால் அபூர்வமாக ஒரு சிலருக்கு எடுத்த எடுப்பிலேயே அயிரக்கனக்கில் பின்தொடர்பவர்கள் கிடைத்து அந்த என்ணிக்கை வெகு விரைவிலேயே லட்சக்கண்க்கில் உயரலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விஷயத்தில் இந்த அபூர்வம் சாத்தியமாகியுள்ளது.பில் கேட்ஸ் டிவிட்டரில் நுழைந்த செய்தி வெளியான் உடனேயே அவருக்கு 10 ஆயிரம் பின்தொடர்பவர்கள் கிடைத்து விட்டனர்.அடுத்த சில மணியில் இது 25 ஆயிரமாக உயர்ந்து 8 மணி நேரத்துக்குள் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது.
இதனை ஒரு டிவிட்டர் சாதனை என்றே சொல்ல வேண்டும்.
பில் கேட்ஸ் டிவிட்டர் வருகையை சக டிவிட்டர் பிரபலங்களூம் வரவேற்றுள்ளனர்.
அடிப்படையில் ஒரு புரோகிராமர் என்பதால் கேட்ஸ் முதல் டிவிட்டை புரோகிராமர்கள் மொழியில் ஹலோ வோர்ல்டு என குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டிருந்தார்.
கேட்ஸ் டிவிட்டர் செய்வதை இங்கே பார்க்கவும்..http://twitter.com/billgates

0 Comments on “டிவிட்டரில் பில்கேட்ஸ்”
Suthanthira-ilavasa-menporul
Many spelling mistakes which could be avoided.
Pingback: Tweets that mention டிவிட்டரில் பில்கேட்ஸ் « Cybersimman's Blog -- Topsy.com
Thamizh
கணினி சார்ந்த தொழில்நுட்ப செய்திகளை http://twitter.com/tamiltechlover இல் தொகுத்து வழங்குகிறேன் .தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் .