டிவிட்டரில் வெனிசுலா அதிபர்

வெனிசுலா அதிபர்ஹியூகோ சாவேஸ் குறும்வலைப் பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூடு ஆகிய தலைவர்களின் வரிசையில் டிவிட்டரில் நுழைந்திருக்கும் தலைவர் என்பதை காட்டிலும் சாவேஸின் டிவிட்டர் பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். . வெனிசுலா நாட்டின் புரட்சித்தலைவன்  என்று ஆதரவாளர்களால் போற்றப்படும் சாவேஸ், அந்நாட்டை சரிவிலிருந்து மீட்டு சோசியலிச பாதையில் முன்னேற வைத்திருக்கிறார். அமெரிக்க எதிர்ப்பாளரான சாவேஸ் தனது நாட்டை தனிப்பாதையில் நடத்திச் செல்கிறார்.

 முன்னாள் ராணுவ அதிகாரியான அவர் முதல் முறை மக்கள் பேராதரவோடு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது வெனிசுலாவில் நிகழ்ந்த புரட்சிக்கு அவர் தலைமையேற்றார். எனினும் 2வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றபோது, முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் வந்தன.

மேலும், சர்வாதிகாரியாக நடந்துகொள்வதாகவும் அவரது எதிரிகள் விமர்சித்தனர். இவையெல்லாம் அவதூறு பிரச்சாரம் என்று சாவேஸ் ஆதரவாளர்கள் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இவற்றில் உண்மை எந்த அளவு இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, சாவேஸ் எதிர்ப்பாளர்கள் இண்டர்நெட் மூலம் அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

குறும்பதிவு சேவையான டிவிட்டர் மற்றும் வலைப்பின்னல் தளமான பேஸ்புக் ஆகியவற்றை கொண்டு சாவேசுக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. கருத்து சுதந்திரம் அரசால் பறிக்கப்பட்ட நிலையில் இண்டர்நெட் தங்களுக்கு கை கொடுப்பதாக சாவேஸ் எதிர்ப்பாளர்கள் கூறிவந்தனர்.

 இண்டர்நெட் மூலமான இந்த எதிர்ப்பு பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றுக்கு வெனிசுலாவில் தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. பேஸ்புக்குக்கு எதிராக சாவேஸ் வெளிப்படையாக கருத்தும் தெரிவித்திருந்தார். இண்டர்நெட்டின் குரல்வளையை நெரிக்கும் மற்றொரு முயற்சி என சாவேஸின் செயல் விமர்சிக்கப்பட்டது.

இதன் மூலம் இண்டர்நெட்டின் எதிர்ப்பாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் சாவேஸ் தற்போது டிவிட்டரில் நுழைவதாக அறிவித்திருக்கிறார். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்வது போல டிவிட்டர் மூலம் எழும் எதிர்ப்பு அலைகளை டிவிட்டர் வழியாகவே சந்திக்க சாவேஸ் முடிவு செய்திருப்பதை இது உணர்த்துகிறது.

 சாவேஸ் இந்த முடிவை அறிவித்த உடனேயே அவரது கணக்கில் 18 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் சென்று விட்டனர். அவர் முதல் பதிவை வெளியிட்டபோது 23 ஆயிரம் பின் தொடர்பாளர்கள் கிடைத்திருந்தனர்.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் சேவைகளை எதிர்க்கட்சிகள் ஏனோ தங்கள் சொத்துபோல நினைத்துக்கொண்டிருப்பதாகவும், அதற்கு சாவேஸ் சரியான பதிலடி கொடுப்பார் என்றும், அவரது நெருங்கிய சகாவான அமைச்சர் கேபல்லோ தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் 70 லட்சம் பேர் டிவிட்டரில் எங்களோடு இணைவார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அதாவது சாவேஸ் கட்சியின் உறுப்பினர்களை மனதில் கொண்டு இந்த சவாலை விடுத்திருக்கிறார். சாவேஸின் நோக்கம் டிவிட்டரில் கருத்துக்களை வெளியிடுவது மட்டுமல்ல இந்த சேவையில் முதலிடத்தை பெறுவதாகவும் இருக்கிறது.

சாவேஸ் எந்த அளவுக்கு பின்தொடர்பாளர்களை பெறுகிறார் என்பது அவரது டிவிட்டர் பதிவுகளை பொறுத்தே அமையும். வெனிசுலா ஆதரவாளர்களை பெறுவது கூட பெரிய விஷயமல்ல. தனது கருத்துக்கள் மூலம் அவர் மற்ற நாடுகளில் எத்தனை ஆதரவாளர்களை ஈர்க்கிறார் என்று பார்ப்போம்.

————-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரில் வெனிசுலா அதிபர்

  1. Pingback: Tweets that mention டிவிட்டரில் வெனிசுலா அதிபர் « Cybersimman's Blog -- Topsy.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *