டிவிட்டரில் அமிதாப் நுழைந்து,சஞ்சை தத் இணைந்தது,சச்சின் அடியெடுத்து வைத்ததையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள் இந்திய தபால் துறை டிவிட்டரில் இணைந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?ஆம் இந்தியாவின் பழமையான அமைப்புகளில் ஒன்றான தபால் துறை டிவிட்டரில் அடியெடுத்து வைத்த முதல் அரசு நிறுவனம் என்னும் பெருமையை பெற்று டிவிட்டரில் பயன்பாட்டில் முன்னோடியாக மாறியிருக்கிறது.
நட்சத்திரங்களும் தனிநபர்களும் டிவிட்டரை பயன்படுத்துவது சரி.ஆனால் தபால் துறை போன்ற ஒரு நிறுவனம் எப்படி டிவிட்டரை பயன்படுத்துவது சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றலாம்.இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.பேஸ்புக் தளத்தில் நிறுவனங்கள் தங்களூக்கான பக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்வது போல டிவிட்டரிலும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களுக்கான பக்கத்தை அமைத்துக்கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள்லாம்.
அதாவது சம்பதப்பட்ட நிறுவனம் சார்பில் அதன் தலைவர் அல்லது உயர் அதிகாரி ஒருவர் டிவிட்டரில் கருத்துக்களை பதிவிடலாம்.கம்ப்யூட்டர் நிறுவனமான டெல் முதன் முதலில் டிவிட்டரை இப்படி பயன்படுத்தி பெருமளவில் பயன்பெற்றது.
வாடிக்கையாளர்களோடு நேரிடையாக தொடர்பு கொள்ளவும் புதிய அறிமுகங்கள் மற்றும் சலுகைகள் பற்றி தெரிவிக்க டிவிட்டரை பயன்படுத்திய டெல் தன் மூலம் விற்பனையை பல மடங்கு பெருக்கி காட்டி வர்த்தக உலகை வியக்க வைத்தது.
உண்மையில் டெல்லின் இந்த முயற்சிக்கு பிறகே டிவிட்டரை இப்படி விற்பனை சார்ந்த்தாவும் பயன்படுத்த முடியும் என தெரிந்தது.அது மட்டுமல்ல டிவிட்டரின் பயன்பாட்டு எல்லையையும் விரிவுபடுத்தி அதன் செலவாக்கையும் உயர்த்தும் வகையில் இது அமைந்தது.
டிவிட்டர் என்பது வெறும் அர்த்தமில்லாத அப்டேட்கள் மட்டும் அல்ல அதையெல்லாம் தாண்டி தகவல் பரிமாற்றம் மற்றும் உரையாடலுக்கான சாதனம் என்பதையும் டெல் உணர்த்தியது.
டெல்லை அடுத்து மேலும் பல நிறுவங்கள் டிவிட்டரில் இருப்பை ஏற்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வருகின்றன.
இந்த வரிசையில் கொஞ்சம் ஆச்சர்யப்படும் வகையில் இந்திய தபால் துறை டிவிட்டரை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் டிவிட்டரில் நுழைந்த இந்தியா போஸ்ட் 3 மாதங்களில் கணிசமான பின்தொடர்பாளர்களையும் பெற்றுள்ளதோடு வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்வதில் அரசு நிறுவனங்களில் பார்க்க முடியாத அபூர்வமான சுறுசுறுப்பை வெளிப்படுத்தி வருகிறது.
தபால் துறையின் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த பதிவுகள் அமைந்திருந்தாலும் வெறும் விளம்பர குரலாக அலுப்பூட்டும் வகையில் இல்லாமல் ஆர்வத்தை தூண்டக்கூடிய வெகையிலேயே பதிவுகள் இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
இன்னும் முக்கியமாக எல்லா பதிவுகளூமே வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயனுள்ளதாகவே இருக்கின்றன.
நாடு முழுவதும் தங்கம் வாங்கும் மோகம் ஆட்டிப்படைத்த அட்சய திரிதியை தினத்தின் போது தபால் அலுவலகங்களிலும் தங்கம் வாங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது என்னும் தகவலை ஒரு குறும்பதிவு தெரிவித்தது.இன்னொரு பதிவோ ஜோதிடம் தொடர்பான சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் சொன்னது.
சர்வதேச பார்சல் கட்டணம் தொடர்பான விலை விவரங்களை தெரிந்து கொள்ள தபால துறையின் இணையத்லத்திற்கு செல்லுமாறு மற்றொரு பதிவு வழி காட்டியது.
அடையாள அட்டைகளை தபால் துறை வழங்கி வருவது உஙக்ளுக்கு தெரியுமா? என்னும் கேள்வி கேட்ட குறும்பதிவுன் உண்மையிலேயே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.வர்த்தக நிறுவனங்கள் கவனிக்கவும் என அழைப்பு விடுக்கும் குறும்பதிவு ஒன்று அஞ்சல் சேவை மூலம் விளம்பரம் செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் வைக்கிறது.இண்டெர்நெட் மூலம் பணம் அனுப்பபடும் உடனடி மணிஆர்டர் சேவை நாடு முழுவதும் 2200 தபால் அலுவலகங்களீல் அறீமுகம் செய்யப்பட்டுள்ள தகவலை இன்னொரு பதிவு குறிப்பிடுகிறது.
அடுத்த ஆண்டு பிபரவரி மாதம் நடைபெற உள்ள மாபெரும் தபால் தலை கண்காட்சி பற்றியும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன..முதலீடாக தங்கம் வாங்குகிறீர்களா? 24 காரட் தங்க நாணயங்கள் அஞ்சல் துறை லோகோவோடு நாடு முழுவதும் கிடைக்கிறது.
இப்படி அஞ்சல் துறையின் புதிய திட்டங்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.
நடுவே ஒரு பதிவு அட்சய திரிதியை முன்னிட்டு துவங்கிய தங்கம் விற்பனை இன்னும் தொடர்வதாக தகவல் கொடுத்தது.
இவற்றின் நடுவே தபால் சேவையின் அருமை பற்றி எடுத்துச்சொல்லும் பதிவுகளும் வாடிக்கையாளர்களை தபால் துறையின் பக்கம் இழுக்க முயன்றன.
தபால் அலுவலகம் என்பது உங்களுடைய சொத்தாகும்.அது உங்களுடையது.அதனை மேம்படுத்த உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் என ஒரு பதிவு பெருமிதத்தோடு கருத்து சொல்ல கேட்கிறது.சமூகத்தின் முக்கிய அங்கமாக் தபால்காரர் நீடிப்பதாகவும் இன்னொரு இடத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இவையெல்லாம் கூட பெரிய விஷயமல்ல.வாடிக்கையாளர் சேவை தொடர்பான பதிவுகளூம் மோசமான சேவை குறித்து புகார் தெரிவிக்க உள்ள வாய்ப்பும் இந்த குறும்பதிவை உயிரோட்டம் மிக்கதாக ஆக்குகிறது.உங்கள் தபால் அலுவலகத்துக்கு சென்று அந்த அனுபவத்தை டிவிட்டரில் தெரிவிக்கவும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இது வெறும் அறிவிப்பாக நின்றுவிடவில்லை.வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு முறையான பதில்கள் வழங்கப்படுகின்றன.
இப்படி கிடைத்த உடனடி பதிலால் மகிழ்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களின் பதில்களை பார்க்கும் போது ஈடுபாடு அதிகரிக்கிறது.
தபால் சேவை தொடர்பாக குறையோ அதிருப்தியோ அல்லது சந்தேகமோ இருந்தால் இங்கு பதிவிட்டால் பதிலும் பெறலாம். தெளிவும் கிடைக்கும்.இந்த தன்மை பலரை இந்தியா போஸ்ட்டின் ரசிகராக்கிவிடும் .ஏற்கனவே பலர் ரசிகராகி பின்தொடர்பாளராக சேர்ந்துள்ளனர்.இதில் வெளிநாட்டவரும் அடக்கம்.
இந்திய தபால் துறையே நேரில் பேசுவது போல அமைந்துள்ள இந்த குறும்பதிவு வெறும் விளம்பர குரலாக இல்லாமல் வாடிக்கையாளர்களூடனான ஒரு உரையாடலாக இருப்பதே விஷேசம்.டிவிட்டரின் தனிதன்மையும் அது தானே.
———

0 Comments on “டிவிட்டரில் இந்திய தபால் துறை”
SaranR
இது எனக்கு முற்றிலும் புதிய தகவல்…
நன்றி நண்பரே