உலககோப்பையை முன்னிட்டு குறும்பதிவு சேவையான டிவிட்டரும் உலககோப்பைக்கான தனி பகுதியை துவக்கியுள்ளது.டிவிட்டரின் முகப்பு பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள உலககோப்பை 2010 என்னும் சின்ன லோகோவை கிளிக் செய்தால் இந்த சிறப்பு பகுதி வந்து நிற்கிறது.
இணையவாசிகள் மத்தியில் பிரபலாமானதாக இருக்கும் டிவிட்டர் எப்போதுமே உலகம் இப்போது என்ன நினைக்கிறது எனபதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது. அதாவது டிவிட்டர் பதிவுகள் மூலம் நடைபெறும் உரையாடல் உலகம் இப்போது எவற்றை முக்கியமாக கருதுகிறது என்பதன் கண்ணாடியாக அமைவதாக கருதபப்டுகிறது.
உலககோப்பை துவங்க உள்ள நிலையில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு உலகின் மொழி கால்பந்தாகவே இருக்கும்.டிவிட்டரிலும் கால்பந்து சார்ந்த பதிவுகளே ஆதிக்கம் செலுத்தப்போகின்றன.
கால்பந்து தொடர்பான பதிவுகளை ஒரே இடத்தில் படிக்கவும் ,கால்பந்து குறித்தும் போட்டிகள் குறித்து டிவீட் செய்யவும் வசதியாக டிவிட்டர் இந்த தனி பகுதியை உருவாக்கியுள்ளது.
இந்த பகுதியில் முன்னணி டிவீட்கள் என்னும் குறிப்போடு தற்போது டிவிட்டரில் வெளியாகும் உலககோப்பை கால்பந்து தொடர்பான டிவிட்டர் செய்திகள் அணிவகுத்து வருகின்றன.அருகிலேயே உலக்கோப்பை நிகழ்ச்சி நிரல் வரிசையில் போட்டிகளீன் விவரங்கள் அவற்றில் பங்கேற்கும் நாடுகளீன் கொடிகளோடு கொடுக்கப்பட்டுள்ளன.கொடிகலீல் கிளிக் செய்தால் அந்த நாடு தொடர்பான டிவிட்டர் செய்திகள் வந்து நிற்கின்றன.இப்படி டிவிட்டரில் உலககோப்பையை மிக எளிதாக பின்தொடரலாம்.
ரசிகர்கள் தங்கள் டிவீட்களையும் பதிவு செய்து உரையாடலில் இணையலாம்.
இதைதவிர முகப்பு பக்கத்தின் மேலே போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகளின் கொடிகலூம் லோகோவாக இடம்பெற்றுள்ளன.அதில் கிளிக் செய்தால் அந்த நாடு தொடர்பான டிவிட்டர் பதிவுகளை காணலாம்..
டிவிட்டரின் உலககோப்பை பக்கத்திற்கு தாராளமாக சபாஷ் போடலாம்.
உலக்கோப்பை போட்டிகளின் போது கால்பந்து சார்ந்த செய்திகளை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக இருக்கும் என்பதை உணர்ந்து டிவிட்டர் இந்த பக்கத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற சூப்பர் பவுல் போட்டியின் போது பாதிக்கு மேற்பட்ட டிவிட்டர் செய்திகள் இந்த போட்டி தொடர்பானதாகவே இருந்ததை அடுத்து டிவிட்டர் உலககோப்பையின் போதும் இதே நிலை ஏற்படலாம் என உணர்ந்து டிவிட்டர் உலககோப்பை பகுதியை அருமையாக உருவாக்கியுள்ளது.
—————

0 Comments on “டிவிட்டரில் உலககோப்பை கால்பந்து”
SaranR
நல்லபதிவு ,
உங்களின் எழுத்து திறமை அருமை
cybersimman
நன்றி நண்பரே.