டிவிட்டரில் வெளியான நாவல்

அமெரிக்க எழுத்தாளர் மாட் ஸ்டுவர்டை மகத்தான எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஸ்டுவர்ட் இதுவரை ஒரு நாவல் மட்டுமே எழுதியுள்ளார். அந்த நாவலும் இலக்கிய உலகை புரட்டிப் போடும் ரகத்தை சேர்ந்தது அல்ல. சொல்லப் போனால் அவரது முதல் நாவல் பெரும்பாலான பதிப்பகத்தால் நிராகரிக்கப்பட்டது.

இவற்றை எல்லாம் மீறி ஸ்வர்ட்டை இலக்கிய முன்னோடி என்று குறிப்பிடலாம். காரணம் இலக்கிய வெளியீட்டில் ஸ்டுவர்ட் புதிய பாதை காட்டியிருக்கிறார். அதாவது தனது முதல் நாவலை டிவிட்டரில் வெளியிட்டு இந்த குறும்பதிவு சேவை வழியே நாவல் ஒன்றை வெளியிட்ட முதல் ழுத்தாளர் என்னும் பெயரை தட்டிச் சென்றிருக்கிறார்.

ஒற்றை வரிச் சேவையான டிவிட்டரை நாவல் வெளியிட பயன்படுத்தியது புதுமைதானே!ஆனால் இளம் எழுத்தாளரான ஸ்டுவர்ட் வெறும் புதுமை கருதி இதனை செய்து விடவில்லை. ஒரு அறிமுக எழுத்தாளராக இலக்கிய வானில் பிரகாசிக்கத் துடித்துக் கொண்டிருந்த அவரது வேட்கையை எந்த பதிப்பகமும் நிறைவேற்ற முன்வராத நிலையில் தனது முதல் படைப்பை டிவிட்டர் வழியே உலகிற்கு கொண்டு வர நினைத்தார்.

அதன்படியே டிவிட்டரில் தனது நாவலை வெளியிட்டு முதலில் இணை உலகின் கவனத்தை ஈர்த்து  இலக்கிய உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். உள்ளடக்கத்திற்காக இல்லாவிட்டாலும் வெளியீட்டு முறைக்காக இதனை இலக்கிய புரட்சி என்றும் சொல்லலாம். (வெற்றியில் முடிந்த புரட்சியோ, தோல்வியை தழுவிய புரட்சியோ என்பதை காலம் சொல்லும்)இதில் சுவாரசியம் என்னவென்றால் நாவலின் தலைப்பிலும் புரட்சி இருப்பதுதான். ஆம் பிரெஞ்ச் ரிவல்யுஷன் (பிரெஞ்சு புரட்சி) என்னும் பெயரில்தான் ஸ்டுவர்ட் நாவலை எழுதியிருக்கிறார்.

சான்பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கும் அவர் கடந்த 2009ல் இந்த நாவலை எழுதி முடித்த நிலையில் அமெரிக்க வழக்கப்படி ஒரு ஏஜெண்டை அமர்த்திக் கொண்டு அவர் மூலமாக பல பதிப்பகங்களை தொடர்பு கொண்டார். இலக்கிய உலகின் வழக்கப்படி எல்லோருமே அந்த “முதல்’ நாவலை நிராகரித்து விட்டனர்.

சான்பிரான்சிஸ்கோவில் வாழும் ஒரு குடும்பத்தின் வரலாற்றில் இணையும் முயற்சியை விவரிக்கும் அந்த நாவலை படித்த பதிப்பாளர்கள் யாரும் அதனை குப்பை என கருதிவிடவில்லை. கொஞ்சம் மாறுபட்ட சிக்கலான நடையில் எழுதப்பட்ட அந்த நாவலை வித்தியாசமான எழுத்து என சில பதிப்பாளர்கள் பாராட்டவும் செய்தனர்.

ஆனால் வெளியீட்டிற்கு பின் லாபம் வரும் அளவுக்கு விற்பனை ஆகுமா என யோசித்து மன்னிக்கவும் பிரசுரிப்பதற்கில்லை என்று கையை விரித்தனர். பெரிய எழுத்தாளர்கள் உட்பட பலரும் அறிமுக நிலையில் சந்தித்த ஏமாற்றம்தான். எனவே ஸ்டுவர்ட் தளர்ந்து விடவில்லை.

மேலும் தனது எழுத்தில் நம்பிக்கை இருந்ததால் பேப்பர் பேக்கில் வெளியாக வழியில்லாமல் போனால் என்ன என்று டிவிட்டர் பக்கம் வந்து விட்டார். குறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்நிலையில் ஸ்டுவர்ட் தன்னுடைய நாவலை வெளியிட அதனை பயன்படுத்தி கொண்டுள்ளார். அவர் பயன்படுத்திய விதம் நாளை தொடரும்.சாமான்யர்கள் முதல் பிரபலங்கள் வரை டிவிட்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பட்டியலில் எழுத்தாளர்களும் உண்டு.

ஆனால் எழுத்தாளர்கள் பெரும்பாலும் புதிய படைப்புகள் பற்றி வாசகர்களுக்கு தகவல் அளிக்கவும் ஏற்கனவே வெளியான படைப்புகள் குறித்து வாசகர்களோடு உரையாடவும் தான் டிவிட்டர் செய்து வருகின்றனர்.எது எப்படியோ எந்த எழுத்தாளரும் டிவிட்டரை வெளியீட்டு சாதனமாக கருதியதாக தெரியவில்லை. அதிலும் முழு நீள நாவலை வெளியிட டிவிட்டர் உதவக்கூடும் என ஒருவரும் நினைத்ததில்லை.

ஆனால் மாட ஸ்டுவர்ட் பாதிப்பர்கர்கள் பாராமுகத்தை அடுத்து தனது பிரெஞ்சு புரட்சி நாவலை டிவிட்டரில் வெளியிட தீர்மானித்தார். இது ஒரு புதுமையான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் டிவிட்டரின் ஆதார குணமான 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடு மினி சிறுகதைக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர நாவலுக்கு ஏற்றதாக இருக்காது.

ஸ்டுவர்ட் இதனை அறியாமல் இல்லை. ஆனால் டிவிட்டரின் பகிர்வு குணம் வெளியாகாத தனது நாவலை வாசகர்களிடம் கொண்டு செல்ல கைகொடுக்கும் என நம்பினார். எனவே டிவிட்டருக்கு ஏற்ப நாவலை வளைப்பது என முடிவு செய்தார். அதாவது மொத்த நாவலையும் ஒரிருசரிகளாக பிரித்து ஒவ்வொன்றையும் வரிசையாக டிவிட்டர் செய்திகளாக வெளியிட தீர்மானித்தார்.

இப்படி வரிகளாக வெளியிடுவதன் மூலம் நாவலின் உள்ளடக்கம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்பதோடு முழு நாவலையும் வெளியிட்டு விட முடியும். டிவிட்டரில் நாவலை வெளியிடுவதற்கான இந்த வழியை தேர்வு செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் இரண்டு முக்கிய சிக்கல் இருந்தன. ஒன்று ஒரு முழு நாவலை சிறு சிறு வாக்கியங்களாக பிரித்து அவற்றை டிவிட் செய்வது என்பது மிகவும் சிக்கலானது. இது எழுத்தாளரின் பிரச்சனை.

ஸ்டுவர்ட் இதற்கு சுலபமாக விடை கண்டுவிட்டார். ஒரு சாப்ட்வேர் புரோகிராமரை கொண்டு 4800000 வார்த்தைகள் கொண்ட தனது நாவலை 3700 வாக்கியங்களாக பிரித்து தர வைத்துவிட்டார். அவற்றை டிவிட்டர் செய்திகளாக வெளியிடவும் ஒரு புரோகிராம் எழுதி வாங்கி கொண்டார் ஆக தினமும் அர் டிவிட் செய்ய வேண்டியதில்லை. எல்லாவற்றையும் புரோகிராம் பார்த்துக்கொள்ளும்.

ஒரு நாவல் தன்னைத்தானே டிவிட் செய்து கொள்வது போல அழகாக ஏற்பாடு செய்துவிட்டார். இரண்டாவது பிரச்சனை வாசகர்களுகானது டிவிட்டரில் ஒரு சில வரிகளை படிக்கலாம். பத்து பதினைந்து டிவிட்களை படிக்கலாம். ஆனால் முழு நாவலையும் படிப்பது எப்படி சாத்தியம்?

நிச்சயம் டிவிட்டரில் வெளியாகும் நாவலை தொடர்ந்து படிப்பது என்பது சாத்தியமில்லைதான். அதிலும் டிவிட்டரின் தலைகீழ் வரிசை முறைப்படி கீழே இருந்து படித்து வருவது என்பது மிகத்தீவிர வாசகனை கூட வெறுத்துப்போக வைக்கும். இந்த சிக்கலுக்கு ஸ்டுவர்ட் எந்தவித தீர்வும் காண முயற்சிக்கவில்லை.

காரணம் டிவிட்டரில் யாரும் முழு நாவலை படிக்க முடியாது. யாரும் அப்படி படிக்கப் போவதும் இல்லை என அறிந்தேயிருந்தார். அதனால் என்ன? என்பதே ஸ்டுவர்ட்டின் எண்ணம். ஏன் என்றால் எப்படியும் டிவிட்டரில் எல்லோரும் எதையாவது படிக்கவே செய்கின்றனர். எனவே நாவலை டிவிட்டரில் வெளியிடும்போது முழுவதுமாக படிக்காமல் இருக்கலாமே தவிர ஆங்காங்கே படிக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா? அவ்வாறு வாசிப்பவர்கள் நாவலால் கவரப்பட்டு முழு நாவலையும் பேப்பர் பேக் வடிவில் வாங்கி படிக்க முன்வரலாம் அல்லவா?

இதுதான் ஸ்டுவர்ட்டின் எதிர்பார்ப்பு. பதிப்பகங்கள் நிராகரித்த நாவலை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க இது சரியான வழி தானே. டிவிட்டர் வெளியிட்டர் என்ற அறிவிப்பின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்து விட முடியும் என்பதோடு பலரையும் நாவலின் பகுதிகளை வாசிக்கலாம் வைக்க முடியும் அல்லவா? இந்த இரண்டும் தவறாமல் நிகழ்ந்தன.

பல நாளிதழ்கள் ஸ்டுவர்ட் முயற்சி பற்றி ஸ்லாகித்து எழுதின. இணையவாசிகளுக்கும் அவரது நாவலை டிவிட்டரில் படித்துப் பார்க்க ஆர்வம் உண்டானது. ஆர்வத்தோடு வருபவர்களை ஏமாற்றாமல் இருக்கும் வகையில் இந்த முயற்சிக்காக இணைய தளம் ஒன்றை அமைத்து அதில் தன்னைப் பற்றியும் தனது முயற்சி பற்றியும் விளக்கியிருந்தார். நாவலின் டிவிட்டர் பக்கத்திற்கான இணைப்பையும் கொடுத்திருந்தார்.

———–

http://www.thefrenchrev.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *