47 நாட்கள் என்ற பெயரில் சிவசங்கரி நாவலொன்றை எழுதியுள்ளார்.இதே பெயரில் அந்த நாவலை கே பி படமாக எடுத்தார்.இந்த இரண்டு செய்திக்கும் நாம் பார்க்கப்போகும் தேடியந்திரத்துக்கும் நேரடி சம்பந்தம் எதுவும் கிடையாது.பெயரைத்தவிர.
48ர்ஸ். இது தான் அந்த புதிய தேடியந்திரத்தின் பெயர்.
அட இன்னொரு தேடியந்திரமா என்று அலுத்துக்கொள்ள வேண்டாம்.இது உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமான தேடியந்திரம் தான்.
கூகுலோடு போட்டி போட நினைக்காத இது எதிர்காலத்தில் இணையத்தில் கோலோச்சப்போவதாக சொல்லப்படும் சமூக தேடல் வகையைச்சேர்ந்தது.அதாவது டிவிட்டர் ,பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் பகிரப்படும் தகவல்களை மட்டும் தேடித்தருகிறது.
இன்னொரு விதமாக சொல்வதாயின் இதோ இந்த நொடியில் இண்டெர்நெட்டில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களில் இருந்து நமக்கு பொருத்தமானவற்றை இது தேடித்தருகிறது.
கூகுலில் குறிச்சொல்லை அடித்தவுடன் பொருத்தமான தேடல் முடிவுகள் வந்து நிறகும் அல்லவா,அதே போல இதில் குறிச்சொல்லை அடித்ததும் அந்த சொல் தொடர்பாக டிவிட்டர்,கூகுல் பஸ் ,பேஸ்புக்,டிக்,டெலிசியஸ் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களையும்,தகவல்களையும் மட்டும் தேடித்தருகிறது.
இதன் மூலம் நிங்கள் விரும்பும் நபர் அல்லது தலைப்பு தொடர்பாக இணையத்தில் என்ன வகையான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் அபிமான நட்சத்திரம் தொடர்பான கருத்துகலையோ அல்லது நீங்கள் வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றும் பட்சத்தில் உங்கள் நிறுவன தயாரிப்பு பற்றிய கருத்துக்கலையோ இதன் மூலம் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் தலைப்புகளில் உடனடி செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் தலைப்புகள் தவிர தற்போது பிரபலமாக உள்ள தலைப்புகள் முகப்பு பக்கத்திலேயே இடம்பெறுகின்றன.உலகின் நாடித்துடிப்பை அறிய அவற்றையும் கிளிக் செய்து பார்க்கலாம்.
இணையம் டிவிட்டர் ,பேஸ்புக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தேடியந்திரம் இத்தகைய சமுக வலைப்பின்னல் சேவை தளங்களில் வெளியாகும் விவரங்களை அழகாக உருவிக்கொண்டு வந்து பட்டியலிட்டு தருகிறது.
அது மட்டுமல்ல டிவிட்டரோ அல்லது பேஸ்புக்கிலோ என நமக்கு தேவையான
வலைப்பதிவு சேவையில் மட்டும் தேடுமாறும் வரையரை செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு ஈடுபாடுள்ள நபர்கள் பற்றிய தேடலில் ஈடுபடும் போது இந்த தேடியந்திரம் உண்மையிலேயே வியக்க வைத்துவிடுகிறது.நாம் தவறவிட்டு விடக்கூடிய அல்லது நமக்கு தெரியாமலேயே போய்விடக்கூடிய அவர்களைப்பற்றிய தகவல்களை இந்த தேடியந்திரம் கொண்டு வந்து கொட்டி திணறடித்துவிடுகிறது.
அபிமான நட்சத்திரம் அல்லது வர்த்தக நிறுவனங்கள் பற்றி தேடிப்பார்தால் இதனை புரிந்து கொள்ளலாம்.நிச்சயமாக நீங்கள் தவறவிட்டு விடக்கூடிய தகவல்களை இந்த தேடியந்திரம் தேடித்தருகிறது.
உங்களுக்கு அக்கறை இருக்க கூடிய தலைப்பு அல்லது நபர்கள் குறித்து டிவிட்டரிலோ,பேஸ்புக்கிலோ இப்போது என்ன சொல்லப்படுகிறது என்பதை இந்த தேடியந்திரம் மிக அழகாக உணர்த்துகிறது.யாரோ ஒருவர் உங்களைப்பற்றி சொல்லியிருக்க கூடியதை இந்த தேடியந்திரம் தவறவிடாமல் இருக்க வழி செய்கிறது.
இத்தகைய தேடியந்திரங்கள் ரியல்டைம் தேடியதிரம் என்று அழைக்கப்படுகின்றன.இவற்றில் அருமையான புதிய வரவு 48ர்ஸ்.
சரி அதென்ன 48 ர்ஸ்.
அமெரிக்காவில் தங்க வேட்டை நடைபெற்றது தெரியுமா?கலிபோர்னியாவில் தங்கம் கிடைப்பதாக கேள்விப்பட்டு எல்லோரும் கோடிஸ்வராராகும் ஆசையோடு அங்கு படையெடுத்தனர்.கோல்டு ரஷ் என்று சொல்லப்பாடும் இந்த தங்க வேட்டை 1848 ல் துவங்கியது. முதலில் கலிபோர்னியாவை நோக்கி சென்றவர்கள் 48 ர்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர். அதை குறிக்கும் வகையில் 48 ர்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.
——————

3 Comments on “சூப்பரான சமூக தேடியந்திரம்”
aruna
Thanx for sharing!
butterfly Surya
Nice. Thanx Simhan..
sri ram
useless