புகைப்படங்களுக்காக என்றே ஒரு டிவிட்டர் சேவை இருந்தால் எப்படி இருக்கும்?அதாவது வார்த்தைகளில் பதிவிடாமல் காட்சிரீதியாக பதிவிட விரும்பினால் பான்கா இணையதளம் அதற்கான சேவையை அறிமுகம் செய்துள்ளது.
பான்காவை புகைப்படங்களூக்கான டிவிட்டர் என்று சொல்லலாம்.டிவிட்டரில் அதிகப்டசமாக 140 எழுத்துக்களைல் பதிவு செய்வதை போல இதன் மூலம் புகைப்படங்களை பதிவிடலாம்.
புகைப்படப்பிரியர்களுக்காக பிளிக்கர் போன்ற புகைப்பட பகிர்வு சேவைகள் இருக்கின்றன.அவற்றில் இருந்து கொஞ்சம் வேறுபட்டதாக இந்த சேவை அறிமுகாகியுள்ளது.இந்த தளத்தில் ஐபோன் மற்றும் ஆன்டிராய்டு போன்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
எப்ப்டி டிவிட்டர் தளத்தில் வரிசையாக குறும்பதிவுகள் தோன்றுமோ அப்படி இந்த தளத்தில் வரிசையாக புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும்.வரிசையாக புகைப்படங்கள் மட்டும் தான்,வேறேதும் இல்லை.
புகைப்படங்களை எல்லோர் பார்வைக்கும் வைக்கலாம்.உங்கள் குழுவுக்கு என்று சுருக்கியும் கொள்ளலாம்.புகைப்படங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது.
அமெரிக்கர் ஒருவர் தன்னைத்தானே படம் எடுத்து தினம் ஒரு படத்தை இணையத்தில் பதிவேற்றியதை உந்துதலாக கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
———-

0 Comments on “புகைப்படங்களுக்கான டிவிட்டர் சேவை”
balu
nice