தமிழக‌ மீனவர்களுக்காக டிவிட்டரில் ஒலிக்கும் குரல்

டிவிட்டர் எத்தனையோ போராட்டங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.

இப்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பிற்கும் இதன் முன்னோடியாக க‌ருதப்படும் டுனிசியாவின் மல்லிகை புரட்சிக்கும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் சேவைகள் முக்கிய பங்காற்றியதாக கருதப்படுகிற‌து.

இதெற்கெல்லாம் முன்பு மால்டோவாவில் டிவிட்டரால் புரட்சி வெடித்தது.சில‌ நேரங்களில் எதிர்ப்பு அலையை உண்டாக்கவும் குறிப்பிட்ட பிரச்ச்னை குறித்த விழ்ப்புணர்வு ஏற்படுத்தவும் டிவிட்டர் பதிவுகள் உதவியிருக்கின்ற‌ன.

இந்த வரிசையில் இப்போது தமிழகமும் சேர்ந்திருக்கிறது.

ஆம், இலங்கை கடற்படையால் தமிழக‌ மீனவர்கள் தொடர்ந்து கொடுரமாக படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக டிவிட்டரில் குரல் கேட்க துவங்கியுள்ளது.

டிவிட்டரில் செயல்படும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்க மீனவர் நலனில் அக்கறை கொண்டவர்கள் தொடரும் மீனவர் படுகொலைகள் தொடர்பான குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். டிவிட்டரில் குறும்பதிவுகளை வெளியிடும் வசதியோடு மறுபதிவு(ரீடிவீட்)பதில் அளிப்பது போன்ற பல வசதிகள் இருக்கின்றன.

இதே போலவே குறிப்பிட்ட தலைப்பிலான பதிவுகளை சக டிவிட்டர் பயனாளிகல் மத்தியில் கவனத்தில் கொண்டு வர அவற்றை ஹாஷ்டாக்(#)என்னும் குறியோடு வெளியிடும் வசதியும் உள்ளது. இப்படி ஹாஷ்டாக் குறியை பயன்படுத்தும் போது ஒரே தலைப்பிலான குறும்பதிவுகள் தனித்து தெரியத்துவங்கும்.

அந்த பிரச்ச‌னைக்கு ஆதரவு தேட விரும்பினால் சக டிவிட்டர் பய்னாளிகளையும் ஹாஷ்டாக் குறியை சேர்த்து கொள்ளுமாறு கேட்கலாம்.இப்படி ஹாஷ்டாக் குறியோடு பதிவுகள் வெளியாகும் போது அந்த தலைப்பு டிவிட்டரில் மேலோங்கும் வாய்ப்பை பெற்று பரவலான கவனத்தை ஈர்க்கும்.

டிவிட்டரில் ஒரு தலைப்பு மேலெழுந்தது என்றால் உடனே அது ஊடகம் முதல் அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைக்கும். இதே போல தான் இப்போது டிவிட்டரில் டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பான கருத்துக்கள் குறும்பதிவுகளாக வெளியாகி கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளன.

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கொலைவெறி தாக்குதல் தொடர்கதையாகியுள்ள நிலையில் இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் அரசு தீவிரம் காட்டாத நிலையில் எல்லோர் மனதிலும் ஒரு ஊமை கோபம் குடிக்கொண்டிருக்கிற‌து. இந்த கோபம் தான் டிவிட்டரில் குறும்பதிவுகளாக பொங்கி கொண்டிருக்கிறது.மீனவர் படுகொலை தொடர்பான பதிவுகளை வெலியிடுபவர்கள் சக குறும்பதிவர்களையும் இதே போன்ற பதிவுகளை எவ்ளியிடுமாறு கேட்டுக்கொண்டனர்.அதில் டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகை தவறாமல் சேர்த்து கொள்ளுமாறும் குறிப்பிட்டனர்.

இதன் பார்த்தவர்கள் அவற்றை மறுபதிவு செய்ததோடு தங்கள் பங்கிற்கு கருத்துக்களை தெரிவிக்கவும் செய்தனர்.இவ்வாறு டிஎன்பிஷர்மேன் ஹாஷ்டாக்கோடு வெளியான பதிவுகள் தனித்து தெரியத்துவங்கின. இந்த பதிவுகள் மீனவர்கள் படுகொலை தொடர்பான கவலையையும் கோபத்தையும் ஆவேசத்தையும் பிரதிபலித்தன.தொடர்ந்து பிரதிபலிக்கின்றன.

இலங்கையின் அடாவடி செயலை கண்டிப்பதோடு இந்த விஷயத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் மவுனத்தையும் கண்டிக்கும் வகையில் பதிவுகள் அமைந்திருந்தன. ஒரு டிவிட்டர் பதிவு இந்திய கடற்படையின் சீருடை என்ன புடவையா என கேட்டதுர்.பல‌ பதிவுகள் மீனவர் கொலையை த்டுத்து நிறுத்தாமல் நிதி கொடுத்து கை கழுவுவதை கண்டனம் செய்தன.

இலங்கை கடற்படையை கண்டிக்கும் பதிவுகளும் அதிகம் வெளியாயின.நம்மூர் அரசியல்வாதிகளின் அலட்சியம் மற்றும் பாராமுகத்தை விமர்சிக்கும் பதிவுகளும் அதிக்கம் செலுத்தின. படுகொலையை தடுத்து நிறுத்த செய்ய வேண்டியவற்றையும் பதிவுகள் வலியுறுத்தின.

ஊடக‌ங்கள் இந்த பிரச்சனையை உரிய முரையில் கவனிக்காமல் இருபத‌ற்கும் கண்டன குரல்கள் எழுந்தன. திடிரென பார்த்தால் த‌மிழ் டிவிட்டர் வெளியில் மீனவர்களுக்காக ஆதரவு அலை உருவாகி சுழன்ற‌டித்து.

பலர் மீனவர்களுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டதோடு இது போன்ற‌ ஆதரவு திரட்டும் முயற்சியை உள்ளபடியே வரவேற்றும் மக்ழிந்தனர். தென்னரசு போனர் டிவிட்டர் பதிவர்கள் டின்பிஷர்மேன் என்னும் குறிப்போடு பதிவிடுமாறு ஓயாமல் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இதன் பயனாக தமிழர்களின் இணைய‌கோபம் கரைபுரண்டோடுகிற‌து. இதனிடையே சேவ் டிஎன்பிஷர்மேன் ஆர்ஜி என்னும் இணையதளமும் அமைக்கப்பட்டு இந்த பதிவுகள் ஒருங்கிணைக்கப்ப்பட்டு வருகிறது.மீனவர் படுகொலை தொடர்பான கட்டுரைகள் மற்றும் இணைப்புகள் சம‌ர்பிக்க வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மீனவர்கள் மட்டுமே அனுபவித்து வந்த துயரத்தை வெகுஜன கோபமாக மாற்றும் முதல் முயற்சியாக இதனை க‌ருதலாம். இந்த இணைய இயக்கம் நிற்காமல் வெல்லட்டும்.

http://www.savetnfisherman.org/

—————–

டிவிட்டர் ஒரு போராட்ட கருவியாக பயன்படும் விதம் குறித்து பல பதிவுகளை எழுதியுள்ளேன்.எனினும் இந்த பதிவை தனி உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் எழுதியுள்ளேன்.தமிழன் மட்டும் என்ன சளைத்தவனா? நீங்களும் உங்கள் பங்கிற்கு டிவிட்டரிலும் வலைப்பதிவிலும் குரல் கொடுங்கள்.இனி ஒரு மீனவன் கொல்லபடக்கூடாது. அன்புடன் சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “தமிழக‌ மீனவர்களுக்காக டிவிட்டரில் ஒலிக்கும் குரல்

  1. http://www.savetnfisherman.org/
    டவிட்டர்களின் போராட்டத்திற்காக துவங்கப்பட்ட தளம். இணைப்பு கொடுக்கவும்

    Reply
    1. cybersimman

      நிச்சயம் கொடுக்கிறேன்

      Reply
  2. Pingback: Tweets that mention தமிழக‌ மீனவர்களுக்காக டிவிட்டரில் ஒலிக்கும் குரல் « Cybersimman's Blog -- Topsy.com

  3. need volunteers to write a press release based #tnfisherman campaign ( on behalf of savetnfisherman.org 2) – http://bit.ly/1AIOxV

    Reply
  4. //நீங்களும் உங்கள் பங்கிற்கு டிவிட்டரிலும் வலைப்பதிவிலும் குரல் கொடுங்கள்.இனி ஒரு மீனவன் கொல்லபடக்கூடாது.//

    உங்களின் இந்த பகிர்வுக்கு என் நன்றிகள் பல… நம்முடைய குரல் நிச்சயம் அரசின் காதிற்கு சென்று சேரும் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. நாம் அனைவரும் இயன்றவரை நம் குரலை உயர்த்துவோம்.

    http://kousalya2010.blogspot.com/2011/01/blog-post_27.html

    Reply
    1. cybersimman

      அரசு செவி சாய்க்கும் என்று நம்புவோம்

      Reply
  5. Pingback: தமிழக மீனவர்களுக்கான இணையக்குரல் « நல்லூர் முழக்கம்

  6. Mr. Chidambaram should step down from his portfoliio “Home Ministry”. This is very shamfull one when one Tamil people having Home Ministry, so many Tamil fishermen killed by Srilankan Navy Force. Fishermen should start democrat protest against Indian Govenment in every district headquarters of East Coast region. Should start showing Blag Flag to Central Ministers, who is visit to Tamil Nadu.

    What ther are doing our Navy forces? Is they really to protect our people? Is the Government protect our people? Why should we have been continued with this Constitution? Why not to go for separate?

    T. Sivakumar

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *