அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்கின்றனர்.தாய்லாந்து பிரதமர்,பிரிட்டன் பிரதமர் என மேலும் சில தேசத்தலைவர்களும் டிவிட்டரில் இருக்கின்றனர்.ஆனாலும் டிவிட்டர் பயன்பாட்டில் முன்னோடி என்னும் பெருமை ரவாண்டா நாட்டு அதிபர் பால ககாமேவுக்கு தான் கிடைத்திருக்கிறது.
அதற்கு காரணம் தன் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்க டிவிட்டரை அவர் மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டது தான்.பதில் அளித்தது மட்டும் அல்லாமல் தனது நிலையை விளக்கி தொடர் விவாதத்திலும் ஈடுபட்டு வியக்க வைத்தார்.
டிவிட்டரில் தெரிவிக்கப்படும் கருத்துக்கு டிவிட்டரில் பதில் அளிப்பதோ அல்லது டிவிட்டர் வழியே விவாதம் செய்வதோ புதிதல்ல;பெரிய விஷயமும் இல்லை.ஆனால் ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் இப்படி டிவிட்டரில் பதில் அளிப்பது என்பது வியப்பானது தான்.
பிரிட்டன் பத்திரிகையாளார் இயான் பிரெல் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் அதிபர் ககாமேவை கடுமையாக விமர்சித்திருந்ததை அடுத்து அந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ககாமே டிவிட்டரில் விளக்கம் அளித்து அதை தொடர்ந்து விவாதத்திலும் ஈடுபட்டார்.
பத்திரிகையாளராக பிரெல் எத்தனையோ பதிலடிகளையும்,மிரட்டல்களையும் சந்தித்தவர் தான்.ஆனாலும் கூட ஒரு நாட்டின் அதிபர் அவர்து கருத்துக்கு டிவிட்டரில் பதில் அளிக்ககூடும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை.அதிலும் டிவிட்டரில் தான் தெரிவித்த கருத்துக்கு டிவிட்டர் வழியேவே அதிபர் பதில் அளிப்பார் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
எல்லாம் ககாமே அளித்த பேட்டி ஒன்றிலிருந்து ஆரம்பமானது.
ககாமே ரவாண்டாவை இனப்படுகொலையில் இருந்து மீட்டவர் என்ற போதிலும் அதன் பிறகு அவரது சர்வாதிகார போக்கு கடும் விமர்சனத்திற்கு ஆளானது.விமர்சனத்தை சகித்து கொள்ளாதவாரகவும்,கருத்து சுதந்திரத்தை நசுக்குபவராகவும் இருப்பதாக அவர் மீது குற்றசாட்டுக்கள் கூறப்படுகின்றன.யாரெல்லாம் அதிபரை விமர்சிக்கின்றனரோ அவர்கள் எல்லாம் கொடுமைப்படுத்தபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ரவாண்டாவின் கடுமையான நட்வடிக்கைகளை நியாயப்படுத்தி பேசிய ககாமே ,தன்னை விமர்சிக்க மீடியாவில் உள்ளவர்களுக்கோ,ஐநா அல்லது மனித உரிமை ஆர்வலர்களுக்கோ எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டியை படித்த பிரெல் அதிபர் ககாமேவின் ஆணவமான கருத்துக்களால் கடுமையாக அதிருப்தி அடைந்த பிரெல்,அதிபர் ககாமே சர்வாதிகாரத்தன்மை மிக்கவர்,நிதர்சனத்தை அறியாதவர் என்று டிவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அதன் பிறகு ககாமேவை மறந்துவிட்டு அவர் தனது வேலையில் மூழ்கிவிட்டார்.பின்னர் வாக்கிங் சென்று திரும்பியவர் எப்பொதும் போல முதல் வேலையாக தனது டிவிட்டர் பக்கத்தில் நுழைந்து புதிய செய்தி ஏதாவது இருக்கிறதா என பார்க்க முற்பட்டார்.
அவர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ரவாண்டா அதிபர் டிவிட்டரில் அவர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் அளித்திருந்தார்.என்னை சர்வாதிகாரி என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்பது போல அமைந்திருந்த அந்த பதிலில் ‘எல்லோரையும் விமர்சிக்கும் உரிமையை நீங்களே எடுத்து கொள்கிறீர்கள்.உங்களுக்கு தான் உரிமை இருப்பது போல மற்றவர்களை மதிப்பிடுகிறிர்கள்’ என்று தெரிவித்திருந்தார்.
முதல் பதிவின் தொடர்ச்சி போல இருந்த அதற்கு அடுத்த பதிவில் ‘உலகில் எது சரி எது தவறு என்றும்,எதை நம்ப வேண்டும் எதை நம்பக்கூடாது நீங்களே தீர்மானிக்கிறிர்கள் உங்களுக்கு அந்த உரிமை இல்லை’ என்று கூறியிருந்தார்.
அதிபரின் இந்த டிவிட்டர் பதிலை படித்த பிரெல் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிட்டார்.ஒரு நாட்டுக்கு அதிபராக இருப்பவர் டிவிட்டரில் தான் சொன்ன கருத்துக்கு பதில் அளிக்க முற்படுவார் என்று அவர் நினைக்கவில்லை.அதோடு அதிபரின் டிவிட்டர் வாசகம் இளைஞர்கள் டிவிட்டரில் பய்னபடுத்தும் பாணியில் அமைந்திருந்ததும் வியப்பில் ஆழத்தியது.
அந்த வியப்பினுடே பிரெல் அதிபருக்கு பதில் அளிக்கும் வகையில்’உங்களை விமர்சன்ம் செய்ய எனக்கு ஏன் உரிமையில்லை என்று எப்படி சொல்கிறீர்கல் என்று புரியவில்லை,தயவுசெய்து விளக்கம் தர முடியுமா?’என கேட்டிருந்தார்.
பின்னர் மீண்டும் அதே கேள்வியை டிவிட்டர் செய்தார்.
ரவாண்டாவில் பத்திரிகை சுதந்திரத்துக்கு உங்களை விமர்சிபவர்களுக்கும் என்ன ஆகிரது என்று தெரிந்தாலும் இதை கேட்கிறேன் என்று அடுத்த கேள்வியையும் கேட்டார்.
உடனே ;’ரவாண்டா மக்களை கேட்டால் சொல்வார்கள்,நீங்கள் வணிப்பது போல இல்லை நான்,ரவாண்ட மக்கள் பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது’ என்று அதிபர் ககாமே பதில் அளித்தார்.
‘நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கல் ஆதாரம் இல்லாதவை,என்னை பற்றியே ரவாண்டா மக்கள் பற்றியோ எதையும் தெரிந்து பேசுவதில்லை’என்று அடுத்த பதிவிலும் அவர்து பதிலடி தொடர்ந்தது.
அதற்கு,’ நான் சொல்வத்ற்கெல்லாம் போதுமான ஆதரங்கள் இருக்கின்றன ‘என்று பிரெல் பதில் தெரிவித்தார்.அடுத்த டிவிட்டர் செய்தியில் அதற்கான ஆதாரத்தையும் இணைத்திருந்தார்.
‘ஆப்பிரிக்கர்களுக்கு ஆப்பிரிக்ககள் தான் தேவை உங்களை போன்றவர்கள் இல்லை என அடுத்த இரண்டு பதிவுகளில் அதிபர் தனது பதிலடியை தொடர்ந்தார்.
உடனே பிரெல் தனது பழைய குற்றச்சாட்டை அழுத்தம் திருத்தமாக் மீண்டும் தெரிவித்தார்.
அதற்கு ‘என்னை ஏன் சர்வாதிகாரி என்றும் நிதர்சனைத்தை அறியாதவர் என்றும் விமர்சனம் செய்தீர்கள் என்பதற்கு இன்னும் நீங்கள் பதில் அளிக்கவில்லை’என்று ககாமே குற்றம் சாட்டினார்.என்னை அவமதிக்க மட்டுமே செய்துள்ளீர்கள் என்றும் குற்றம் சாட்டி அடுத்த பதிவை வெளியிட்டார்.
பிரெல் விடாம்ல்,’நான் கேட்ட கேள்வியை விட்டு விட்டு எங்கோ செல்கிறிர்கள்,உங்களை விமர்சனம் செய்ய ஏன் எங்களுக்கு உரிமை இல்லை என்று சொல்கிறிர்கள் என்று கேட்டார்.
ஆனால் அதிபரோ ‘என்னை விமர்சித்த பத்திரிகையாளரோடு விவாதம் செய்ய எனக்கு உரிமையில்லையா’ என கேட்டிருந்தார்.
‘ரவாண்டா பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது,உங்களுக்கு எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை,உங்கள் அரசிடம் இப்படி கேட்டுப்பாருங்களேன் ‘என்றும் அடுத்த பதிவை வெளியிட்டார்.
‘நாளிதழ்களையும் ,மீடியாவையும் நீங்கள் நசுக்கும் போது நியாயம் எங்கே இருக்கிறது ‘என பிரெல் விடாமல் தனது கேள்விகனையை தொடர்ந்தார்.
‘ரவாண்டாவில் எல்லாமே நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடக்கிறது என்று இதற்கு அதிபர் ஆணித்தரமான பதிலை டிவீட் செய்தார்.
‘பிரெல் மீண்டும் தனது மூல கேள்வியை கேட்டு அதற்கு பதில் தருமாறு கேட்டுக்கொன்டார்.
ஐநா மற்றும் மனித உரிமை அமைப்பினர் மட்டும் ஒழுங்கா என்பது போல அதிபர் இப்போது பதில் அளித்தார்.
இனும் சில டிவிட்டர் செய்திகளாக இந்த பரிமாற்றம் தொடர்ந்தது.நீங்கள் கேள்விகள் கேட்கப்படுவதை விரும்புவதில்லை என குற்றம் சொல்லிவிட்டு அதிபர் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனிடையே அந்நாட்டு வெளியுரவுத்துறை அமைச்சரும் தன் பங்கிற்கு டிவிட்டரில் விளக்கம் அளித்தார்.
இந்த விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலேயே டிவிட்டர் வெளியில் இந்த செய்தி பரபரப்பை உண்டாகியது.பத்திரிகையாளர் ஒருவரோடு ரவாண்டா அதிபர் டிவிட்டரில் நேரடி விவாதத்தில் ஈடுட்டிருப்பதை பலரும் ரசித்ததோடு இரு தரப்பினருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டனர்.
டிவிட்டர் நிபுணர்களும் இந்த விவாததால் கவரப்பட்டனர்.இதற்கு முன்னர் இப்படி தேசத்தலைவர் ஒருவர் டிவிட்டரில் விளக்கம் அளிக்கவோ விவாதம் நடத்தவோ முயன்றதில்லை;இது ஒரு டிவிட்டர் மைல்கல் என்று ஸ்லாகித்தனர்.
அவரோடு விவாதத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர் பிரெல் தனது கேள்விகளுக்கு அதிபர் நேரடியாக பதில் அளிக்காமல் பதில் கேள்வி கேட்டு தட்டி கழித்தாலும் ,புதிய தகவல் தொடர்பு சாதனமான டிவிட்டர் வழியே அவர் தன் மிதான விமர்சனத்திற்கு விளக்கம் அளிக்க முயன்றது பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார்.ஆனால் இந்த சுதந்திரத்தை அவர் தனது நாட்டு மக்களிடமும் காட்டாதது வேதனையானது என்று தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இப்படி தலைவர்களும் அதிபர்களும் டிவிட்டரில் தங்கள் மீதான விவாதத்தில் ஈடுபடுவது சகஜமானால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்.

0 Comments on “டிவிட்டரில் விவாதம் செய்த ரவாண்டா அதிபர்.”
ponmalar
thanks for sharing. interesting sir