எப்பொழுது டிவீட் செய்வது என்பதோ, ஒரு நாளுக்கு எத்தனை முறை டிவீட் செய்வது என்பதோ அவரவர் விருப்பம் சார்ந்தது.சுறுசுறுப்பாக இருப்பவர்கள் நாள் முழுவதும் டிவீட் செய்யலாம்.மற்றவர்கள் டிவிட்டர் கணக்கை மறந்து விடாமல் இருக்கும் அளவுக்கு அவப்போது டிவீட் செய்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் சரியான நேரத்தில் டிவீட் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருக்குமானால் எப்போது டிவீட் செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.என்னது டிவீட் செய்ய ஏற்ற நேரமா? அதை எப்படி கண்டுபிடிப்பது என்றெல்லாம் குழம்ப வேண்டாம்!அதற்கென்றே ஒரு இணையதளம் இருக்கிறது.
‘டிவீட்வென்’ என்னும் அந்த தளம் நீங்கள் எப்போது டிவீட் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறது. அது சுட்டிக்காட்டும் நேரத்தில் டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு கொள்ளலாம்.இப்படி ஒவ்வொரு டிவிட்டர் பயனாளியும் எப்போது டிவீட் செய்யலாம் என்று இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.
இது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்.ரீடிவிட்டை ஒரு அளவுகோளாக வைத்து கொண்டு அதனடிப்படையில் டிவீட் செய்ய ஏற்ற நேரத்தை இந்த தளம் கண்டுபிடித்து சொல்கிறது.அதாவது எப்போது டிவிட்டர் செய்தி ரீடிவீட் செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதோ அந்த நேரத்தை இந்த தளம் கண்டறிந்து சொல்கிறது.
எனவே இந்த தளம் சொல்லும் நேரமாக பார்த்து டிவிட் செய்தால் அந்த செய்தி ரீடிவீட்டாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.ரீடிவீட் செய்யப்படுவதன் மகிமை டிவிட்டர் பயனாளிகளுக்கு நன்றாகவே தெரியும்.
ரீடிவீட் செய்யப்படுவது என்பது ஒரு செய்தி மேலும் பலரிடம் சென்றடைவதற்கான வழி என்று பொருள்.அதாவது டிவிட்டரில் ஒருவர் வெளியிடும் செய்தி அவரது பின்தொட்ர்பாளர்களை தான் முதலில் சென்றடையும்.அவர்களில் யாராவது ஒருவர் அந்த செய்தி பயனுள்ளது என கருதினால் தங்கள் பின் தொடர்பாளர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பலாம்.அப்போது அவர்கள் அதனை அப்படியே ரீடிவீட் செய்வார்கள்.அதை பார்த்து அவரது பின் தொடர்பாளரில் யாராவது ரீடிவீட் செய்தால் அந்த செய்தி அவரது டிவிட்டர் வட்டத்தை சென்றடையும்.
இப்படியாக ரீடிவீட் செய்யப்பட செய்யப்பட டிவிட்டர் செய்தியின் வீச்சு அதிகரித்து கொண்டே செல்லும்.
ஆகவே தான் பின்தொடர்பாளர் எண்ணிக்கையைவிட ரீடிவீட் செய்யப்படுவது டிவிட்டரில் ஒருவரது செல்வாக்கை அறிய சிறந்த வழியாக கருதப்படுகிறது.
ஒருவர் டிவிட்டரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பட்சத்தில் அவரது குறும்பதிவுகள் அடிக்கடி ரீடிவீட் செயப்படும் பட்சத்தில் எந்த நேரத்தில் இந்த அற்புதம் அதிகம் நிகழ்கிறது என்பதை கண்டறிந்து விடலாம் என்று ட்வீட்வென் நம்புகிறது.அந்த நம்பிக்கயோடு டிவிட்டர் பயனாளிகள் கணக்கை ஆய்வு செய்து அவர்கள் குறும்பதிவுகள் எப்போது ரீடிவிட் செய்யப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இந்த தளத்தில் டிவிட்டர் பயனாளிகள் தங்கள் டிவிட்டர் பெயரை சமர்பித்ததுமே அவர்களின் கணக்கை அலசி ஆராய்ந்து வரைபடத்தின் மூலம் ரீடிவீட் வாய்ப்பை காண்பிக்கிறது.அந்த நேரம் பார்த்து டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு கொள்ளலாம்.
இந்த சேவை எந்த அளவுக்கு துல்லியமானது என்று தெரியவில்லை.டிவிட்டர் பயனாளிகள் இதனை தாங்களே சோதித்து பார்த்து கொள்ளலாம்.இந்த தளத்தை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பவர்கள் கூட முக்கிய குறும்பதிவுகளை வெளியிடும் போது அல்லது எந்த செய்தி அதிகமானோரை சென்றடைய வேண்டும் என்று நினைக்கின்றனரோ அப்போது இந்த சேவை காட்டும் நேரத்தில் டிவீட் செய்யலாம்.
டிவிட்டரின் வீச்சு மற்றும் குறும்பதிவுகளின் தாக்கம் குறித்து உண்மை நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சேவைகள் தேவையானதே.
இதே போலவே மேலும் ஒரு சேவையும் இருக்கிறது.வென் டூ டிவீட் என்னும் அந்த தளமும் டிவீட் செய்ய ஏற்ற நேரம் எது என காட்டுகிறது.தவறான நேரத்தில் டிவிட் செய்து அருமையான குறும்பதிவுகளை வீணடிகாதீர்கள் என்று கோரிக்கை வைக்கும் இந்த தளம் ஒருவருடைய பின் தொடர்பாளர்கள் குறும்பதிவுகளை படிக்கும் நேரத்தை அலசி ஆராய்ந்து எப்போது டிவீட் செய்ய்லாம் என்று பரிந்துரைக்கிறது.
இணையதள முகவரிகள்;http://www.tweetwhen.com/.
http://www.whentotweet.com/

0 Comments on “டிவீட் செய்ய ஏற்ற நேரம் எது? சொல்லும் இணையதளங்கள்.”
ponmalar
thanks sir
சி பி செந்தில்குமார்
அட.. நல்ல தகவல் தான்,மைண்ட்ல வெச்சுக்கறோம்