வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் டிவிட்டரை பயன்படுத்தி வருவது தெரிந்த் செய்தி தான்.நாட்டு மக்களோடு தொடர்பு கொள்ளவும்,தனது கருத்துக்களளை பகிர்ந்து கொள்ளவும் டிவிட்டரை பயன்படுத்தி வரும் சாவேஸ் இப்போது டிவிட்டர் மூலமே அரசாட்சி நடத்தி வருகிறார்.
வெனிசுலாவின் புரட்சித்தலைவன் என்று பாராட்டப்படும் சாவேஸ் அநாட்டை சோஷியலிச பாதையில் கொண்டு சென்று வருகிறார்.பெரும்பாலான மக்களால கொண்டாடப்பட்டாலும் சர்வாதிகாரி என்று சிலரால விமசிக்கப்படும் சாவேஸ் சமீபகாலமாக சர்சைகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறார்.
இந்த சோதனைகளை எல்லாம் சாவேஸ் தனது பாணியில் சமாளித்து வரும் நிலையில் காலம் தந்த சோதனையாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.நம் நாட்டு தலைவர்கள் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம் அல்லவா,அதே போல சாவேஸ் சிகிச்சைக்காக கியூபா சென்றுள்ளார்.
சாவேஸ் சிகிச்சை பெற கியூபாவை தேர்வு செய்ய இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.ஒன்று அமெரிக்காவை அவர் பரம வைரியாக கருதுவதால் அநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்லும் பேச்சுக்கே இடமில்லை.அதைவிட முக்கிய காரணம் மருத்துவ வசதி என்று வரும் போது அமெரிக்காவை விட கியூபாவே வல்லரசு.கியூபாவின் மருத்துவ கொள்கையும் அதற்கேற்ற வகையிலான விரிவான மனிதநேயம் சார்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளும் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமானவை.கியூபா தரமான மருத்துவர்களை உருவாக்கி உலகிற்கு ஏற்றுமதி செய்து வருவது பலரும் அறிந்திறாத செய்தி.
இப்படியிருக்கும் போது கியூபா வெனிசுலாவின் நட்பு நாடு என்னும் போது சாவேஸ் அங்கு சிகிச்சைக்கு செல்வது இயல்பானது தானே.
அது தான் சாவேசும் கியூபா மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.உயர்தரமான சிகிச்சை அவருக்கு கிடைப்பது உறுதி.ஆனால் நாட்டின் அதிபராயிற்றே!மருத்துவமனை படுக்கையில் படுத்துள்ள நிலையிலும் ஆட்சி பொறுப்பை மறந்துவிட முடியுமா?
அதிலும் சாவேஸ் போன்ற மக்களை நேசிக்கு அதிபர் கடமையை நினைக்காமல் இருக்க முடியுமா?அதனால் தான் சாவேஸ் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலம் ஆட்சி நடத்தி வருகிறார். (இது பற்றி இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டுள்ளது)
அதாவது டிவிட்டரில் குறும்பதிவுகளாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு வருகிறார்.
பொதுவாக தொலைவில் இருக்கும் போது முக்கிய உத்தரவுகளை தலைவர்கள் பிறப்பித்து வழிகாட்டுவதை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவது என்று சொல்வது உண்டல்லவா,அதே போல வெனிசுலா அதிபர் சமுக வலைப்பின்னல் யுகத்தில் மருத்துவமனையில் இருந்தபடி டிவிட்டர் வழியே ஆட்சி நடத்து வருகிறார்.
மருத்துவமனியில் இருந்தபடியே சுமார் 40 க்கு மேற்பட்ட குறும்பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.அவற்றின் மூலம் முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். புரட்சியாளர் சைமன் பொலிவர் நினைவாக பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.கியூபா முன்னாள் அதிப்ர காஸ்ட்ரோ மற்றும் அவரது சகோதராரான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோ ஆகியோரை சந்தித்தது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் அரையிறுதியில் வெனிசுலா பராகுவேவிடம் தோற்ற ஆட்டத்தில் வழங்கப்பட்ட தவறான முடிவு பற்றியும் ஆவேசப்பட்டுள்ளார்.சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு வீடு கட்டும் திட்டம் தொடர்பாக தனது அமைச்சர்களுக்கு பாராட்ட் தெரிவித்ததோடு தூய்மை திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்ப்போது தனது சிகிச்சை குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர் அவறை நம்பிக்கையான தெனியிலேயே முடிக்கிறார்.உயிர் போராட்டத்தில் இன்னொரு நாள் முடிந்தது என்பது போன்ற பதிவுகள் அவரது மன உறுதியை காட்டுகிறது.
டிவிட்டர் பதிவுகள் மூலம் எவ்வளவோ சாதிக்கலாம்.அரசாளவும் செய்யலாம் என்று சாவேஸ் காட்டியுள்ளார்.
பின் குறிப்பு.சாவேசின் டிவிட்டர் கணக்கு ஸ்பானிய மொழியில் உள்ளது.அவர்து டிவிட்டர் முகவரி.https://twitter.com/#!/chavezcandanga