பேஸ்புக்கில் இருக்கும் வசதி;டிவிட்டரில் இல்லாதது ,என விடுகதை பாணியில் கேட்டால் பிறந்த நாளை அறிவிக்கும் வசதி என்று யோசித்தோ யோசிக்காமலோ சொல்லி விடலாம்.
பேஸ்புக்கில் உறுப்பினராக பதிவு செய்யும் போதே பிறந்த நாள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து விடுவதால் ஒருவரின் பிறந்த நாளை நண்பர்கள் தெரிந்து கொள்வது மிகவும் சுலபம்.
ஆனால் டிவிட்டரில் பிறந்த நாள் போன்ற விவரங்களை சமர்பிக்க வேண்டிய தேவையில்லை என்பதால் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் ஒருவரது பிறந்த நாளை தெரிந்து கொள்ள வழியில்லை.
டிவிட்டரில் பின்தொடர்பவர்கள் நண்பர்களின் பிறந்த நாளுக்கு வாழத்து தெரிவிக்க முடிந்தால் நன்றாக தான் இருக்கும்.இந்த ஏக்கத்தை நிரைவேற்றும் வகையில் டிவிட்டரில் பிறந்த நாளை பகிர்ந்து கொள்வதற்கான சேவையை டிவீடே தள்ம் வழங்குகிறது.
டிவிட்டர் சார்ந்த செயலிகளில் ஒன்றான டிவீடேவில் டிவிட்டர் பயனாளிகள் தங்கள் பிறந்த தினத்தை குறிப்பிட்டு அதன் பிறகு தங்கள் டிவிட்டர் கணக்கை இயக்கினால் அவர்களடைய பிறந்த நாள் விவரம் டிவிட்டர் நண்பர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.இதே போல அவர்கள் யாரையெல்லாம் பின்தொடருகின்றனரோ அவர்களின் பிறந்த தினத்தையும் அறிந்து கொண்டு உரிய நேரத்தில் குறும் பதிவிலேயே வாழ்த்த முடியும்.
முகப்பு பக்கத்தில் பிறந்த நாள் கேக்குடன் வரவேற்கும் இந்த சேவை டிவிட்டர் நண்பர்களிடையே மேலும் பிணைப்பை ஏற்படுத்தி கொள்ள உதவும்.
இணையதள முகவரி;http://tweeday.com/

0 Comments on “டிவிட்டரில் பிறந்த நாளை அறிவிக்க!”
shakkthi
thanks sir . super