டிவிட்டர் எத்தனையோ பிரச்சாரங்களை பார்த்திருக்கிறது. ஆனால் இது வரை இப்படியொரு பிரச்சாரத்தை கண்டதில்லை என்று கூறும் வகையில் இறப்பதற்கான உரிமை கேட்டு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரின் மனதை மாற்றுவதற்காக பலரும் டிவிட்டரில் குரலெழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையிலான நெகிழ்ச்சியான போராட்டமாக இது மாறிக்கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சாரத்தின் மையமாக இருப்பவர் பிரிட்டனைச் சேர்ந்த டோனி நிக்லின்சன். 58 வயதாகும் நிக்லின்சன் கடந்த 7 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பவர். 2005ம் ஆண்டில் வர்த்தக விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது நிக்கலின்சன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ‘லாக்ட் இன் சின்ட்ரோம்’ என்னும் நோய்க்கு ஆளானார்.அதிலிருந்து அவர் நகரமுடியாமல் அசையமுடியாமல் படுத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். மற்றவர்களோடு பேசவோ தொடர்பு கொள்ளவோ முடியாத நிலையில் அவர் மரண படுக்கையில் நாட்களை கழித்து வருகிறார்.
நிக்லின்சனின் குடும்பத்தினர் அவர் இந்த நிலையில் தவிப்பதை விட சட்டப்பூர்வமாக மருத்துவர் உதவியோடு தனது வாழ்க்கையை முடித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கருணைக் கொலை தொடர்பான விவாதத்தை மீண்டும் மக்கள் மன்றத்திற்கு உயிர் பெற வைத்துள்ளது.
எந்த காரணத்திற்காகவும் ஒரு உயிரை எடுக்கும் உரிமையை யாருக்கும் கொடுக்க கூடாது என்னும் கருத்து முன்வைக்கப்படும் நிலையில், மரணத்தை விடக் கொடிய வேதனையை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் அந்த வேதனையில் இருந்து விடுதலை பெறுவது சரியே என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு மிகுந்த கவனத்தோடு எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நிக்லின்சன் டிவிட்டர் மூலம் பேசினார். எந்த விதத்திலும் மற்றவர்களோடு பேசவோ தொடர்பு கொள்ளவோ முடியாத நிக்கல்சன் கண் இமைகளால் தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தின் மூலம் டிவிட்டரில் பேசினார்.
“உலகிற்கு வனக்கம்,நான் டோனி நிக்லின்சன்.. நான் லாக்ட் இன் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.. இது எனது முதல் குறும்பதிவு.” இது தான் அவரது முதல் குறும்பதிவு.
ஒருவரது கரு விழி நகர்வைக் கொண்டு அவரது எண்ணங்களை ஊகித்து அதனை வார்த்தைகளாக மாற்றும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கொண்டு டிவிட்டரில் குறும்பதிவுகளை வெளியிடும் முதல் மனிதரான நிக்லின்சன் வெளியிட்ட குறும்பதிவுகள் தனது உடலுக்குள்ளேயே சிறைப்பட்டு கிடக்கும் மனிதரின் மன உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
” பழைய நண்பன் ஒருவர் அழைத்திருந்தார். ஆனால் மனைவி ஜேன் மட்டுமே அவரோடு பேசிக்கொண்டிருந்தாள். காரணம் அவளால் மட்டுமே பேச முடியும், என்றாலும் அவனை கண்டது மகிழ்ச்சியாக தான் இருந்தது” என்பது போன்ற குறும்பதிவுகள் நிக்லின்சனின் நிலையை உணர்த்தி, உலுக்கக் கூடியதாக இருந்தன.
அடுத்த சில நாட்களில் பலரும் அவரது டிவிட்டர் கணக்கை பின் தொடர துவங்கினர். சிலர் அவரது மரண கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இன்னும் பலரோ அவரது மனதை மாற்றி தன் மரண விழைவை கைவிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒருவர், “டோனி அவர்களே.. வாழ்கை என்பது ஒரு கொண்டாட்டம் என்பதால் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுமாறு மன்றாடுகிறேன்.. உங்களுக்காக இல்லை என்றாலும், பிள்ளைகளுக்காக” என்று குறும்பதிவிட்டிருந்தார்.
இன்னொருவரோ “எல்லாமே ஒரு காரணத்தோடு தான் நடக்கிறது.. எனவே தயவு செய்து வாழப் போராடுங்கள்” என்று கூறியிருந்தார்.
“கடவுள் எல்லாவற்றையும் ஒரு திட்டத்தோடும் நோக்கத்தோடும் தான் நிகழ்த்துகிறார். நீங்கள் ஒரு நல்ல உதாரணமாகி உத்வேகத்தின் அடையாளமாக விளங்குங்கள்” என்று இன்னொருவர் குறும்பதிவில் வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்காவில் இருந்து ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகளின் இணைய முகவரிகளை அனுப்பியிருந்தார்.
“அற்புதங்கள் நிகழும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் ”
“சாத்தியமான எல்லாவற்றையும் முயன்று பார்க்காமல் உலகை விட்டு நீங்கள் செல்வதை நான் விரும்ப மாட்டேன் ”
முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என்றாலும் இத்தனை பேர் நீங்கள் உயிர் வாழ விரும்புவதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் ”
இப்படி பலரும் டிவிட்டர் வழியே நிக்லின்சன் மரணத்தை கோரும் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நிக்கிலின்சன் இந்த ஆதரவு குரல்களால் நெகிழ்ந்து போயிருக்கிறார். “நான் என் முடிவை மாற்றி கொள்வேனா என்று அறிய பலரும் விரும்புகின்றனர்.. முதலில் நீதிமன்ற தீர்ப்பு வரட்டும்” என அவர்களுக்கு பதில் அளித்திருந்தார்.
இப்போது 25,000 பேருக்கும் மேல் அவரை டிவிட்டரில் பின் தொடர்கிறார்கள்.
இதனிடையே நிக்லின்சன் தனது வழக்கறிஞர் பால் போவன் மூலமாக நீதி மன்றத்தில் தனது கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவில், 2007ம் ஆண்டு முதல் தனது வாழ்க்கையை முடித்து கொள்ள விரும்பி வருவதாக கூறியுள்ள அவர், தனது முடிவுக்கு எதிரான தீர்ப்பு மேலும் துன்பம் நிறைந்த வாழ்கையிலேயே தன்னை தள்ளி விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை போல உணவு அளிக்க வேண்டி இருக்கிறது.. என்னால் குளிக்க முடியாது, உடை மாற்ற முடியாது, உயிரை மாய்த்து கொள்வதைக் கூட மருத்துவர் உதவி இல்லாமல் செய்து கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். எனவே மருத்துவர் எனக்கு உதவினால், அவர் சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடாது என கேட்டுள்ளார்.
ஆனால் நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பளித்தாலும் உடனே இறந்து விட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்வது என்று அரசு எனக்கு உத்தரவிடுவதற்கு மாறாக, அதாவது விருப்பத்திற்கு மாறாக உயிர் வாழ்ந்து துன்பப்படுவதை விட என் வாழ்க்கையை நானே தீர்மானித்து கொள்ளும் உரிமை இருப்பது எனக்கு எத்தனை மன நிம்மதியை தரக்கூடியது தெரியுமா? என்று உருக்கத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
இறப்பதற்கு முன் நிக்லின்சன் தனது சுயசரிதையை எழுத விரும்புகிறார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நிக்லின்சன் மனைவி மற்றும் பிள்ளைகளின் கருத்தையும் நீதிமன்றம் கேட்க உள்ளது.
இந்த வழக்கு விசாரணை மனிதனின் தனிப்பட்ட உரிமை, அரசின் கடமை, உயிரின் அருமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான விவாதமாக மாறியுள்ளது. பிரிட்டனில் உள்ளவர் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இந்த வழக்கை பின் தொடர்ந்து வருகின்றனர்.
பார்க்கலாம், காலம் அவருக்கு என்ன வழி வைத்திருக்கிறது என்று!
டிவிட்டர் முகவரி : http://twitter.com/#!/TonyNicklinson
————
யூத்புல் விகடனுக்காக எழுதியது.

0 Comments on “டிவிட்டரில் ஒரு ஜீவமரண போராட்டம்”
cheenakay
அன்பின் சைபர் சிம்மன் – இணையத் தொழில் நுட்பம் எவ்வளவு உதவுகிறது. கருவிழியினால் ஒருவர் உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனில் எவ்வளவு தூரம் தொழில் நுடபம் முன்னேறி இருக்கிறது. அவர் வாழ வேண்டும். நீண்ட காலம் வாழ வேண்டும். அவர் இணிஅய நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதனால் மனம் மாறும். இறைவனின் கருணை மழை பொழிய பிரார்த்தனைகள் . நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா.
cybersimman
ஆம் நண்பரே.எனது விருப்பமும் அதுவே தான்!.
அன்புடன் சிம்மன்