டிவிட்டர் உலகில் ரிடிவீட்டின் மகத்துவத்தை சொல்லவே வேண்டாம்.காரணம் ஒரு குறும்பதிவு ரிடிவீட் செய்யப்படும் போது அது அதிகமானோரை சென்றடைகிறது.அதே குறும்பதிவு மேலும் பலரால ரிடிவீட் செய்யப்பட்டால் அது மேலும் பலரை சென்றடையும்.
ரிடிவீட் செய்யப்படும் போது ஒவ்வொருவரின் டிவிட்டர் வட்டத்திலும் வாசிக்கப்படும் வாய்ப்பு இருதால் அந்த செய்தி பரவலான கவனத்தை பெறும்.
இப்படி ரிடிவீட் செய்யப்பட்டு டிவிட்டரில் பெரிய அளவில் பிரபலமான விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன.
ஆனால் குறும்பதிவிடுவது மட்டும் தான் நம கையில் உள்ளதே தவிர அது ரிடிவீட்டாவது நம் கையில் இல்லை.அந்த செய்தி பின்தொடர்பாளர்களுக்கு பிடித்திருந்தால் அவர்கள் அதனை ரிடிவீட் செய்யலாம்.அதன் பிறகு அவர்கள் வட்டத்தில் யாராவது ரிடிவீட் செய்யலாம்.இப்படியே அந்த செய்தி டிவிட்டர் வெளியில் காட்டுத்தீ போல பரவி கவனத்தை பெறலாம்.
இவையெல்லாம் தானாக் நடப்பது.ரிடிவீட் செய்யுங்கள் என்று கெஞ்சி கேட்டாலும் எதிர்பார்த்த பலன் இருக்குமா என்று சொல்ல முடியாது.அப்படி கேட்பதும் கூட சரியாக இருக்காது.பொதுநலன் நோக்கிலான செய்தி என்றால் எல்லோரும் ரிடிவீட் செய்யுங்கள் என்று கேட்பது சரியாக இருக்கும்.
ஆனால் அப்போதும் கூட எத்தனை பேர் ரிடிவீட் செய்வார்கள் என்று சொல்ல முடியாது.
இந்த குறையை போக்கும் வகையில் எந்த செய்தி அதிகம் ரிடிவீட் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கான ஆதரவை திரட்டிக்கொள்ள உதவுவதற்காக என்றே தண்டர்கிளாப் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு குறும்பதிவு ஒரே நேரத்தில் பலரால் ரிடிவீட் செய்யப்பட இந்த தளம் வழி செய்கிறது.ஆனால் அதற்கு முன்பாக அந்த செய்திக்கான போதுமான ஆதரவாளர்களை திரட்டியாக வேண்டும்.
அந்த வகையில் புதிய நிறுவங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஆதரவாளர்களை திரட்ட உதவும் கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் போல இது செயல்படுகிறது.கிக்ஸ்டார்ட்டர் மூலம் நிதி திரட்ட விரும்புகிறவர்கள் தங்களுக்கென ஒரு பக்கத்தை அமைத்து கொண்டு அதில் தங்கள் நிறுவத்திற்கான திட்டத்தை குறிப்பிட்டு அதனை ஆதரிப்பவர்களிடம் இருந்து நிதி கோரலாம்.அந்த திட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் விரும்பும் நிதியை வழங்க முன்வரலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையான நிதி சேர்ந்து விட்டால் திட்டம் வெற்றி பெற்றதாக அர்த்தம்.
அதே போலவே தண்டர்கிளாப் தளத்தில் டிவிட்டர் செய்திக்கான ஆதரவை திரட்டலாம்.ரிடிவீட் செய்யப்பட வேண்டிய செய்தியையும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு ஆதரவு திரட்டலாம்.குறிப்பிட்ட அளவு ஆதரவாளர்கள் சேர்ந்து விட்டால் நீங்கள் விரும்பும் தினத்தன்று அவர்கள் அனைவரும் அந்த செய்தியை ரிடிவீட் செய்வார்கள்.