அநேகமாக சென்னை சத்யம் திரையரங்கில் அந்த வசதி முதலில் அறிமுகமாகலாம். ஸ்மார்ட் போனும் கையுமாக வருபவர்கள் டிவிட்டர் செய்து கொள்வதற்கான இருக்கைகளை அமைப்பது தான் அந்த வசதி.
இப்படி டிவிட்டர் செய்பவர்களுக்காக என்றே தனி இருக்கைகளை ஒதுக்கும் வழக்கம் அமெரிக்க கலை அரங்குகளில் பிரபலமாகி வருகிறது.சமீபத்தில் கூட அமெரிக்காவின் மின்னேசோட்டாவில் உள்ள கலை அரங்கில் டிவிட்டர் செய்வதற்கான பிரத்யேக இருக்கை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திரையரங்குகளிலும் கூட டிவிட்டர் இருக்கைகள் அமைக்கப்படலாம்.
எதையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பரவலாகி வருவதன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்களில் ஒன்றாக கலை அரங்குகளிலும் டிவிட்டருக்கு இடம் கிடைத்திருக்கிறது.
ஒரு விதத்தில் பார்த்தால் இதனை தலைகீழ் மாற்றம் என்று சொல்லலாம்.செல்போன் அறிமுகமாகி அவை பிரபலமாகத்துவங்கிய காலத்தில் அரங்கங்களில் நிகழ்ச்சி துவங்கும் முன் தயவு செய்து உங்கள் செல்போனை அனைத்து வைக்கவும் என்று வேண்டுகோள் வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.இன்னும் கூட பல அரங்குகளில் இந்த அறிவிப்பை கேட்கலாம்.
ஆனால் குறும்பதிவு சேவையான டிவிட்டரின் செல்வாக்கு அரங்குகளில் டிவிட்டர் செய்பவர்களுக்கு என்று தனி இடத்தை ஒதுக்க வைத்திருக்கிறது.
திரைப்பட அனுபவத்தில் டிவிட்டர் பிரிக்க முடியாத அம்சமாக மாறியிருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.
ஆம்,திரைப்படத்தை பார்த்ததும் வீட்டுக்கு போன பின் நண்பர்களிடம் படம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டது அந்த காலம்.இப்போதெல்லாம் படம் பார்த்தவுடன் தங்கள் கருத்தை டிவிட்டர் கணக்கு வழியே குறும்பதிவாக தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடனேயே பகிர்ந்து கொண்டு விடுகின்றனர்.அந்த கருத்துக்களை பலரும் அமோதித்து ரிடிவீட் செய்கின்றனர்.இல்லை மறுத்து பதில் குறும்பதிவிடுகின்றனர்.
ஆக,படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே படம் எப்படி என்னும் கருத்து ரசிகர்களின் குறும்பதிவுகளாக உருவாக்கப்பட்டு விடுகிறது.உண்மையில் டிவிட்டரில் வெளியாகும் கருத்துக்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடியதாக கூட அமைந்து விடுகிறது.
நிற்க இதன் அடுத்த கட்டமாக இப்போதெல்லாம் படம் முடியும் வரை கூட இல்லை,இடைவேளையின் போதே படம் எப்படி என்னும் கணிப்பை குறும்பதிவுகளாக பகிரத்துவங்கி விட்டனர்.
குறிப்பாக இளம் ரசிகர்களிடையே இப்படி படம் பார்த்தவுடன் அல்லது படம் பார்க்கும் போதே விமர்சன கருத்துக்களை பகிர்ந்து கொள்வது பிரபலமாக உள்ளது.அதிலும் டிவிட்டர் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மேலும் பரவலாக துவங்கியுள்ள நிலையில் திரையரங்கில் இருந்து டிவிட்டர் செய்வதும் அதிகரித்துள்ளது.
இப்படி ரசிகர்களில் பலர் ஸ்மார்ட்போனோடு வரும் போது அவர்களுக்கு தனி மரியாதை தந்தால் என்ன என்ற எண்ணம் உண்டாக கூடியது இயல்பானதாகவே தோன்றுகிறது.
முதன் முதலில் 2009 ம் ஆண்டில் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஒபாரா இசை நாடக நிகழ்ச்சியின் போது அரங்கில் 100 இருக்கைகள் டிவிட்டர் செய்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
பாரம்பரிய இசை வடிவமான ஒபரா நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு குறைந்து வரும் நிலையில் இளம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் விளம்பர யுக்தியாக இந்த டிவிட்டர் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டன.
டிவிட்டர் யுகத்திற்கே ஏற்ற புத்திசாலித்தனமான யுக்தியாக இது பாராட்டப்பட்டாலும் இசை நாடகம் நடுவே டிவிட்டர் செய்ய அனுமதிப்பது அந்த நாடகத்தின் ரசனையை கொல்லும் செயல் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக ஒபாராவின் பாரம்பரிய ரசிகர்கள் ,நாடகத்தின் நடுவே போனை கையில் வைத்து கொண்டு டிவிட்டர் செய்வதை ரசனைக்கு விரோதமானதாக கருதி கடுமையாக விமர்சித்தனர்.குறும்பதிவில் கவனம் செலுத்தினால் நாடகத்தின் நுணுக்கங்களை ரசிப்பது எப்படி என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
விமர்சனங்களை மீறி இந்த யுக்தி மெல்ல பரவலாக துவங்கியது.ஒரு கட்டத்தில் புகழ் பெற்ற பிராட்வே திரையரங்கிலும் டிவிட்டர் இருக்கைகள் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து சில திரையரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் இத்தகைய டிவிட்டர் இருக்கைகள் அமைக்கப்பட்டன.புது யுக ரசிகர்களை கவர்வதற்கான புதுமையான முயற்சியாக இவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.’
எல்லா நிகழ்வுகள் பற்றியும் முதல் கருத்துக்கள் டிவிட்டரில் வெளியாகி வரும் நிலையில் திரையரங்கம் போன்றவற்றில் டிவிட்டர் செய்பவர்களுக்கு என்று தனி இருக்கைகள் அமைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளகூடியதாகவே கருதப்படுகிறது.
ஆக இந்த வழக்கம் வெகு விரைவில் இங்கும் பிரபலமாகலாம்.
திரையரங்கம் சார்ந்த தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகம் செய்வதில் முன்னணியில் இருக்கும் சத்யம் திரையரங்கம் இந்த வசதியையும் முதலில் அறிமுகம் செய்யலாம்.