நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர்.
இவர்களில் பேஸ்புக் நண்பர்கள் ஒருவிதம் என்றால் டிவிட்டர் நண்பர்கள் இன்னொரு விதம்.பேஸ்புக்கில் நண்பர்கள் மூலம் நண்பர்கள் கிடைக்கின்றனர்.நண்பராக ஏற்க சம்மதமா என்று கேட்டு அது ஏற்றுக்கொள்ளப்பால் நண்பர்களாகலாம்.
டிவிட்டரில் அப்படி இல்லை,ஒருவருடைய குறும்பதிவுகள் பிடித்திருந்தால் அல்லது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் அவரது டிவிட்டர் கணக்கை பின்தொடர ஆரம்பித்து விடலாம்.அந்த நொடியில் இருந்து அவர் டிவிட்டர் நண்பராகி விடுவார்.
டிவிட்டரில் தான் சந்திக்க வேண்டும் என்றில்லை.நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசும் போது கூட டிவிட்டரில் இருக்கிறீர்களா என கேட்டு டிவிட்டர் முகவரியை வாங்கி பின் தொடரலாம்.சிலர் அவர்களாகவே முன்வந்து டிவிட்டர் முகவரியை தரலாம்.
இப்படி பல நண்பர்கள் டவிட்டரில் சேரலாம்.எல்லாம் சரி டிவிட்டர் நண்பர்கள் அதிகரிக்கும் போது குறிப்பிட்ட டிவிட்டர் நண்பர்களை எங்கே சந்தித்தோம் என்பது நினைவில் இல்லாமல் போகலாம்.டிவிட்டரில் ஒருவரை எப்படி சந்தித்தோம் என்ற தகவல் பல காரணங்களுக்காக தேவைப்படலாம்.பலவிதங்களில் பயன்படலாம்.
அதற்காக அடடா டிவிட்டர் சந்திப்புகளை குறித்து வைக்காமல் போனோமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை.இந்த தேவையை நிறைவேற்றுவதற்காக என்றே ஒரு இணைய சேவை இருக்கிறது.மெட்.என்யு என்னும் அந்த தளம் மூலம் டிவிட்டர் சந்திப்புகளை குறித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த சேவையை புக்மார்கிங் துண்டாக தரவிற்க்கம் செய்து கொண்டால் அது பிரவுசரில் போய் உட்கார்ந்து கொள்ளும்.அதன் பிறகு புதிய டிவிட்டர் நண்பர்கள் கிடைக்கும் போது இந்த புக்மார்க் துண்டை கிளிக் செய்து, அந்த டிவிட்டர் நண்பர எங்கே எப்படி அறிமுகமானார் என்பதை குறித்து வைத்துக்கொள்ளலாம்.அந்த நண்பரை டிவிட்டரில் பின் தொடர்வற்கான காரணத்தையும் குறித்து கொள்ளலாம்.அவரது தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் குறித்து கொள்ளலாம்.
பின்னர் எப்போது தேவை என்றாலும் இந்த குறிப்புகளை பார்த்து கொள்ளலாம்.எந்த டிவிட்டர் நண்பரை பற்றிய சந்திப்பு விவரம் தேவைப்பட்டாலும் அவரது முகவரி மீது கிளிக் செய்தால் புக்மார்கிக் விவரம் மூலம் சந்திப்பு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
டிவிட்டர் பிரியர்களுக்கு பயனுள்ள சேவை.
இணையதள முகவரி;http://met.nu/