இமெயில் தாமதமாவ‌து ஏன்? ஒரு விளக்கம்.

message-headersஇமெயில் பயன்படுத்தும் எல்லோருக்கும் எழக்கூடிய கேள்வி தான் இது.ஏன் இந்த தாமதம்? அதாவது, எப்போதோ அனுப்பி வைக்கப்பட்ட இமெயில் இன்னும் ஏன் இன்பாக்சில் வரவில்லை?

இந்த இமெயில் குழப்பத்தை நீங்களும் அனுபவித்திருக்கலாம்.நண்பரிடம் இருந்தோ,அலுவலக அதிகாரியிடம் இருந்தோ முக்கியம் மெயிலை எதிர்பார்த்திருப்பீர்கள்.அதை அனுப்பியவரும்,போனில் தகவல் சொல்லிவிட்டு மெயில் வந்திருக்கிறதா? பார்த்து சொல்லுங்கள் என கேட்டிருப்பார். நீங்களும் இன்பாக்சில் கிளிக் செய்து கொண்டே இருப்பீர்கள் ஆனால் அந்த மெயில் மட்டும் எட்டிப்பார்க்காது.

பொதுவாக,இமெயில்கள் அனுப்பிய சில நொடிகளில் எல்லாம் வந்து சேர்ந்து விடும் போது சில மெயில்கள் மட்டும் தாமதமாவது ஏன்?என்ற கேள்வி குழம்ப வைக்கும்.

அனுப்பிய‌ இமெயில் முகவரி சரி தானா என்று பார்ப்பீர்கள். இன்டெர்நெட் இணைப்பு ஒழுங்காக இருக்கிறதா என சோதிப்பீர்கள்.சர்வர கோளாறா,இல்லை இணைத்து அனுப்பட்ட கோட்டுகளால் சிக்கலா என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கும். அப்படியும் மெயில் வந்திருக்காது.பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அந்த மெயில் வந்து நிற்கும். அதற்குள் கிளிக் செய்து செய்து வெறுத்து போயிருப்பீர்கள்.

ஏன் இந்த தாமதம்?

இந்த கேள்விக்கு விடை அறிய விரும்பினால் அதற்கான வழி இருக்கிறது. அதாவது குறிப்பிட்ட இமெயில் ஏன் தாமதமாக வந்த்து என தெரிந்து கொள்ளலாம்.இந்த பதில் உங்களுக்கு வந்த மெயில்லேயே இருக்கிறது என்கிறார் அமீத் அகர்வால்.

ஜிமெயிலில் அந்த மெயிலை ஓபன் செய்து அதில் மூலத்தை பார்ப்பதற்கான ஷோ ஒரீஜினல் என்னும் கட்டளையை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு அந்த மெயில் பயணம் செய்த இணைய பாதையும் அதில் சந்தித்த சர்வர்களும் வந்து நிற்கும்.அந்த மெயில் எந்த ஐ.பி முகவரிகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறது என இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

இப்படி இணையத்தில் எங்கெங்கோ சுற்றி மூச்சிறைக்க வந்ததால் தான் இன்பாக்சிற்கு தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.

இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். இமெயில் பயணித்து வரும் முறை பற்றிய அறிதல் இருந்தால் அடுத்த முறை ஏதேனும் மெயில் உடனடியாக வந்து சேராவிட்டால் டென்ஷ்னாகமல் இணைய எதார்தத்தை புரிந்து கொண்டு கூலாக இருக்கலாம் அல்லவா?

அதோடு நீங்கள் ஒரு மெயில் அனுப்பி அது இன்னும் வரவில்லையே என யாரேனும் உங்களை தொல்லை செய்தால் இந்த விளக்கத்தை சொல்லி பார்க்கலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இமெயில் தாமதமாவ‌து ஏன்? ஒரு விளக்கம்.

  1. இமெயிலை தமிழில் மின்னஞ்சல் என்றும், மின்னல் வேகத்தில் வந்து சேர்வதால் மின்ன(ல)ஞ்சல் என்றும் இனி எழுதலாமே!

    Reply
    1. cybersimman

      மின்னலஞ்சல் நல்ல சொல் பிரயோகம். முழுக்க முழுக்க தமிழ் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. பிடிவாதமாக தமிழ் சொற்களை பயன்படுத்துவதை காட்டிலும் புழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களை அப்படியே பயன்படுத்துவது வாசிப்புக்கு உதவும்.மின்னஞ்சல் என்பதை விட இமெயில் என்பது எளிதாக புரியலாம்.ஓபன் சோர்ஸ் என்பதை திற்வு மூலம் என்று சொல்லும் போது புரிதல் தாமதமாகிறது.
      மேலும் பேஸ்புக்கை முகநூல்,வதனப்பக்கம் என்றும் டிவிட்ட்ரை கீச்சுகள் என தமிழ் படுத்துவது தேவையா?

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *