இந்த தளம் ஒலி அகராதி !

’வலையொலி அகாரதி’ எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? ஆங்கிலத்தில் இதே பொருள் தரும் பெயரில் நடத்தப்பட்டு வந்த பாட்காஸ்ட் எனப்படும் வலையொலி நிகழ்ச்சி பற்றி தான் இந்த பதிவு. பாடிக்‌ஷனரி (Podictionary ) எனும் அந்த நிகழ்ச்சியை சார்ல்ஸ் ஹாட்சன் (Charles Hodgson) என்பவர் நடத்தி வந்திருக்கிறார்.

மொழி ஆர்வலர்களுக்கான வலையொலி விருந்து என வர்ணிக்க கூடிய இந்த நிகழ்ச்சிகான தடத்தை இப்போது இணையத்தில் காண முடியவில்லை என்பதை மீறி, பாடிக்‌ஷனரி உண்டாக்கும் சில எண்ணங்களை பகிர்வது அவசியமாகிறது.

முதலில், இந்த நிகழ்ச்சி பற்றி சிறு குறிப்பு. இணையத்தின் மூலம் ஒலி வடிவில் கேட்க கூடிய பாட்காஸ்ட் வகையைச்சேர்ந்த இந்த நிகழ்ச்சியில்,  மொழி ஆர்வலரான ஹாட்சன், தினமும் ஒரு ஆங்கில் வார்த்தையை எடுத்துக்கொண்டு, அதன் பொருளையும், பயன்பாடு, வரலாறு உள்ளிட்ட சுவாரஸ்மான தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாட்காஸ்டிங் பிரபலமாகத் துவங்கிய 2006 ம் ஆண்டு வாக்கில், ஹாட்சன், பாடிக்‌ஷனரியை துவக்கியிருக்கிறார்.ஒலி வடிவில் தினம் ஒரு ஆங்கில வார்த்தைக்கான பொருள் கூறல் எனும் எண்ணமும், அதற்கேற்ற பொருத்தமான பெயரும் இந்த நிகழ்ச்சியை கவனிக்க வைத்திருக்கிறது.

பாட்காஸ்டிங் முன்னோடி பயனாளிகளில் ஹாட்சனும் ஒருவர் என கருதலாம். ( ஆரம்ப கால பாட்காஸ்டிங் சேவைகளில் ஒன்றான ஓடியோ தளத்தின் ஆவண காப்பக சேமிப்பு வடிவின் முகப்பு பக்கத்தில், பாடிக்‌ஷனரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஓடியோ சேவை பின்னர் டிவிட்டராக திசை மாறி உருவானது).

சார்லஸ் ஹாட்சன் தொடர்பான இணைய தேடல் ஏமாற்றமே தருகிறது. அதைவிட ஏமாற்றம் தரும் விஷயம் அவரது பாடிக்‌ஷனரி நிகழ்ச்சிக்கான இணையதளத்தின் இரண்டு வடிவங்களுமே ( பாடிக்‌ஷனரி.காம், நெட்) போனஸ் ஐரிஸ் ஓட்டல் இணையதளத்தின் விளம்பர பக்கத்தை காண்பிக்கின்றன. பழைய இணையதளங்கள் கைவிடப்பட்டு அவற்றின் இடத்தில் விளம்பர குப்பை தளங்களை காண நேர்வது, இணையத்தில் அடிக்கடி எதிர்கொள்ளும் விபத்து என்றாலும், தினம் ஒரு ஆங்கில வார்த்தையை விளக்கும் வகையில் கவர்ந்திழுக்கும் வலையொலி நிகழ்ச்சியின் சுவடுகளை இணையத்தில் பார்க்க முடியாதது ஏமாற்றமாக இருக்கிறது.

ஹாட்சன் ஏன் இந்த சேவையை தொடர்ந்து நடத்தவில்லை எனத்தெரியவில்லை. ஆனால், தினம் ஒரு ஆங்கில சொல் வலையொலி எனும் போது, உடனே இணையத்தின் சொல்லின் செல்வர் அனு கார்க் பெயர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்காவில் குடியேறிய இந்தியரான அனு கார்க், வேர்ட்ஸ்மித் எனும் பெயரிலான இணையதளத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஆங்கில மொழி பிரியரான கார்க், இமெயில் செய்தி மடல் சேவையாக இந்த தளத்தை துவக்கினார். அதாவது, தினமும் ஒரு ஆங்கில வார்த்தையை தேர்வு செய்து அதற்கான பொருளையும், அந்த வார்த்தையின் பயன்பாடு மற்றும் மொழி வரலாறு சார்ந்த அம்சங்களையும் இமெயிலில் சந்தாதாரர்களுக்கு அனுப்பி வைத்தார்.

பெரும்பாலும் அதிகம் அறியாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து அனு கார்க் விளக்கம் அளித்த விதம் வாசகர்களை கவரவே இந்த செய்திமடல் சேவை பிரபலமானது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவருக்கு வாசகர்கள் உருவானார்கள். அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், கார்கின் வெற்றியை விளக்கி கட்டுரை எழுதியது.

ஒரு கட்டத்தில் கார்க் தனது முழுநேர பணியை விட்டு விலகி, இந்த தளத்தை முழுநேரமாக நடத்த துவங்கினார்.

எளிமையான முகப்பு பக்கம் கொண்ட இந்த தளத்தில் இன்றளவும், அவரது சேவையை பார்க்கலாம். பழைய வார்த்தைகளை கிளிக் செய்து வரிசையாக பார்க்கலாம்.

அனு கார்க் இந்த சேவையை 1994 ம் ஆண்டு துவக்கினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனது சேவையை தொடர்கிறார். அந்த வகையில் வேர்ட்ஸ்மித்.ஆர்க் (https://wordsmith.org/) இணையத்தின் முன்னோடி தளங்களில் ஒன்று.

பி.கு: ஹாட்சனின் வலையொலி அகராதியை, ஒருவிதத்தில் அனு கார்கின் இணைய மடலின் ஒலி வடிவம் என்று சொல்லலாம். இந்த ஒப்புமையை மீறி, அனு கார்க், இணைய முன்னோடிகளில் ஒருவர் என்பதை மீறி, ஹாட்சனயையும், அனு கார்கையும் ஒப்பிட்டு பார்க்கும் எந்த குறிப்பும் இணையத்தில் இல்லை. இப்படி ஒப்பிட்டு தேடினாலும் கூகுள் பள்ளிக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *