இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப் (http://www.emailtheweb.com/ ) தளம் இதை சாத்தியமாக்குகிறது.இந்த தளத்தின் மூலம் எந்த ஒரு இணையதளத்தையும் இமெயிலாகவே அனுப்பி விடலாம்.
இதற்காக முதலில் நீங்கள் அனுப்ப விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்து விட்டு தொடர்ந்து இமெயில் முகவரியை டைப் செய்தால் போதும்,அந்த தளம் உரிய நபருக்கு அப்படியே போய் சேர்ந்து விடும்.
இந்த சேவையை பயன்படுத்த ஜிமெயில் முகவரி தேவை.இலவச சேவை மற்றும் கட்டண சேவை இரண்டும் உள்ளது.ஆனால் இலவ்ச சேவையில் வரம்புகள் உண்டு.
எல்லாம் சரி, இணையதளத்தை இமெயிலில் ஏன் அனுப்ப வேண்டும்? இணையதள முகவரியை மட்டும் இணைப்பாக அனுப்பலாமே என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால் இமெயிலில் வரும் இணைப்புளை எல்லாம் கிளிக் செய்து பார்க்க எத்தனை பேருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்கிறது இந்த தளம்.நேரமின்மை,வைரஸ் தாக்குதல்,வீணான விளம்பர மெயில் தாக்குதல் என பலவேறு காரணங்களால் பலரும் மெயிலில் வரும் இணைய இணைப்புகளை கிளிக் செய்யாமலே இருந்து விடலாம்.அதனால் இணைப்புக்கு பதிலாக மொத்த இணையதளத்தையும் அனுப்பி விடுவது சிறந்தது தானே.
மெயிலில் இணைய உலா.
இதே போலவே இமெயில் மூலமே நீங்கள் இணையத்திலும் உலா வரலாம்.அதாவது நீங்கள் பார்க்க விரும்பும் இணையதளத்தை இமெயிலிலேயே வர வைத்துக்கொள்ளலாம்.
வெப்டுபிடிஎப் ( http://www.web2pdfconvert.com/) இந்த சேவையை வழங்குகிறது.அடிப்பையில் இந்த தளம் இணைய பக்கங்களை பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது. அபிமான இணையதளங்களை அல்லது முக்கிய இணைய பக்கங்களை இப்படி பிடிஎப் வடிவில் மாற்றி சேமித்து கொள்ளலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.
இதே பாணியில் இந்த தளத்திற்கு நீங்கள் பார்க்க விரும்பும் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து அனுப்பினால்,அந்த தளத்தில் பிடிஎப் வடிவை அனுப்பி வைக்கிறது.ஆக இணையத்திற்கு போகமாலே இணையதளத்தை பார்க்கலாம்.இணையதளத்தை பார்வையிடுவது மட்டும் அல்ல கூகுலில் தேடவும் இதை பயன்படுத்தலாம்.கூகுல் இணைய முகவரியை குறிப்பிட்டு தேட வேண்டிய பதத்தையும் குறிப்பிட்டால் பிடிஎப் வடிவில் தேடல் பக்கத்தி அனுப்புகிறது.
சில அலுவகங்களில் இணைய கட்டுப்பாடு இருக்கும்.இமெயிலை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கலாம்.இது போன்ற இடங்களில் இணையதளங்களை பார்வையிட விரும்பினால் இந்த சேவை கைகொடுக்கும்.அது மட்டும் அல்ல செல்போனில் இணையத்தை அணுகும் போது இணைய பக்கங்கள் மிகவும் மெதுவாக டவுண்லோடு ஆகும் நேரங்களிலும் இதை பயன்படுத்தலாம்.

3 Comments on “இமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி”
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – அதிசயமாக இருக்கிறது – இன்னொருவரின் இணைய தளத்தினை பிடிஎஃப் கோப்பாக மாற்றுவது சரி – அதனை அப்படியே மின்னஞ்சலில் நமது முகவரிக்கு நாமே அனுப்பிக் கொள்வதா ? சரியான செயலாகத் தெரியவில்லையே . பயமாக இருக்கிறது – ஒரு வழியில் பார்த்தால் அடுத்தவரிஒன் தளத்தினைச் சென்று பார்ர்பதற்கு உரிமை இருக்கும் நமக்கு – அத்தளத்தினை நமது மின்னஞ்சல் முகவரிக்கு நாமே அனுப்பிக் கொள்ள உரிமை இல்லையா என்ற் தோன்றுகிறது …. ம்ம்ம்ம் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை நண்பரே.ஒரு இணையதளத்தை பார்க்கிறோம்.அதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.தேவை ஏற்பட்டால் அதன் பக்கங்களை அச்சிட்டு கொள்கிறோம்.அதே போல தான் இமெயிலில் அனுப்புவதும்.அதோடு இணைய் இணைப்பு இல்லாத நேரங்களில் தளங்களை பார்ப்பதற்காக அவற்றை டெஸ்க்டாப்பில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஆரம்பம் முதல் இருக்கிறதே.அதாவது ஆன்லைனில் இல்லாமலே இணையதளங்களை பார்க்கும் வசதி!.அது போல தான் இதுவும்.பயனுள்ள வசதி.இதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.
அன்புடன் சிம்மன்.
Pingback: விரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை | Cybersimman's Blog