டிவிட்டர் உலகின் சமீபத்திய செய்தி,ஸ்பெயினில் உருவாக்கப்பட்டிருக்கும் டிவிட்டர் ஹோட்டல் தொடர்பானது.சுற்றுலா சொர்கமான ஸ்பெயினின் மஜார்கோ தீவில் உள்ள சோல் வேவ் ஹவுஸ் தான் இந்த டிவிட்டர் ஹோட்டல்.
உலகின் முதல் டிவிட்டர் ஹோட்டல் என்று இந்த ஹோட்டல் தனனைத்தானே அழைத்து கொள்கிறது.
இது வெறும் விளம்பர முயற்சியா அல்லது சமூக வலைப்பின்னல் யுகத்திற்கு ஏற்ற நவீன கருத்தாக்கமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
டிவிட்டர் மோகம் கொண்டவர்கள் விடுமுறையிலும் டிவிட்டர் அனுபவத்தை பெறும் நோக்கில் இந்த ஹோட்டலில் டிவிட்டர் அனுபவம் உருவாக்கப்பட்டுள்ளது.அதாவது ,இங்கு டிவிட்டரை மையமாக கொண்ட அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.டிவிட்டரரின் நீல நிற பரவையை நினைவு படுத்தும் தலையணை போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.இது பெரிய விஷயமல்ல.ஹோட்டலில் தங்கும் அனுபவம் முழுவதும் டிவிட்டர்மயமாக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலில் டிவிட்டரில் ஆர்டர் செய்யலாம்,சக விருந்தினர்களோடு டிவிட்டரில் டொடர்பு கொண்டு புதிய நட்பை வளர்த்து கொள்ளலாம்.ஆம்,ஹோட்டலில் நுழைந்ததுமே வாடிக்கையாளர்களுக்கான டிவிட்டர் செயலி ஒன்று வழங்கப்படுகிறது.வை பீ வசதி மூலம் ஹோட்டல் வளாகத்தில் மட்டும் செயல்படக்கூடிய பிரத்யேக செயலி இது. ஹோட்டல வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்தலாம்.
இந்த செயலி வாயிலாக டிவிட்டர் செய்திகளை வெளியிடலாம்.ஹோட்டலில் தங்கியிருக்கும் மற்ற வாடிக்கையாளர்களோடு டிவிட்டரில் உரையாடலாம்.டிவிட்டர் செய்தி வழியாகவே ரூம் சர்வீஸ் உள்ளிட்ட வசதிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.இதற்காக என்றே பிரத்யேக ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதைத்தவிர டிவிட்டர் அறைகள் மற்றும் டிவிட்டர் காக்டெயிலும் உண்டு.
டிவிட்டர் அனுபவம் உணர வாருங்கள் என பெருமையோடு அழைக்கிறது இந்த ஸ்பெயின் ஹோட்டல்.
ஆனால் இந்த டிவிட்டர் அனுபவம் பிரபலமாகுமா?யார் கண்டது நாளை நம்மூர் லாட்ஜில் கூட டிவிட்டர் வசதி சக்ஜமாகலாம்.
ஸ்பெயின் போவதாக இருந்தால் முயன்று பாருங்கள்.:http://www.melia.com/hotels/spain/majorca/sol-wave-house/index.html

0 Comments on “டிவிட்டர் ஹோட்டல் இது!.”
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – எப்ப ஸ்பெயின் போகலாம் – நாம் அங்கே போய்த் தங்கி கீச்சுகள் அனுப்பி மகிழ வேண்டாமா ? தேடித்தேடிக் கண்டுபிடித்து புதிய புதிய தளங்களை அறிமுகப் படுத்தும் தங்களின் திறமையும் உழைப்பும் பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
மகிழ்ச்சியாக போய் வரலாம்.பயணங்கள் நல்ல அனுபவம்.பதிவர் என்ற முறையில் சிறப்பு சலுகைகள் கிடைத்தால் மிடில் கிலாஸ் சங்கிலி உடைத்து பறக்கலாம்.
அன்புடன் சிம்மன்