எல்லா டிவீட்களையும் தேடலாம்: டாப்சை தரும் புதிய வசதி.

<Topsyp>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம் ஆண்டு முதல் வெளியான டிவிட்டர் குறும்பதிவுகளை தேடலாம் என்பது தான் அந்த அறிவிப்பு.இதன் பொருள் இது வரை வெளியான டிவிட்டர் குறும்பதிவுகள் எல்லாவற்றையும் தேடலாம் என்பது தான்!.

முதல் பார்வைக்கு மிகவும் சாதாரணமாக தோன்றினாலும் இது ஒரு மைல்கல் அறிவிப்பு.காரணம் இது வரை வெளியான டிவிட்டர் பதிவுகளை எல்லாம் தேடிப்பார்ப்பதற்கான வசதி இப்போது தான் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது.

டிவிட்டரில் வெளியாகும் குறும் ப‌திவுகளை தேடுவது என்பது பெரிய விஷய்மல்ல தான். அவற்றை கூகுல் மூலம் தேடலாம். டிவிட்டர் தளத்திலேயே கூட குறும்பதிவுகளை தேடுவதற்கான வசதி இருக்கிறது. ஆனால் இவை முழுமையானதல்ல. காரணம் இந்த இரண்டுமே சமீபத்திய குறும்பதிவுகளையே தேடித்தரும். பழைய குறும்பதிவுகள் தேவை என்றால் அவற்றை தேடிப்பார்க்க முடியாது.டிவிட்டர் வசமே கூட பழைய குறும்பதிவுகளை எல்லாம் அலசிப்பார்த்து பொருத்தமான குறும்பதிவை கொண்டு வந்து நிறுத்தும் வசதி இல்லை.

அனால் டிவிட்டர் அலசல் இயந்திரமான டாப்சை இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. டிவிட்டர் அறிமுகமான 2006 ம் ஆண்டு முதல் வெளியான எல்லா குறும்பதிவுகளையும் பட்டியலிட்டு வைத்திருக்கும் டாப்சி அவற்றில் இருந்து நமக்கு தேவையானதை தேடித்த‌ருகிறது.அதாவது இது வரை வெளியான 425 பில்லியன் குறும்பதிவுகளை பட்டியலிட்டு வைத்திருக்கிறது. 3500 க்கும் மேற்பட்ட சர்வர்களில் இவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட் தலைப்பு தொடர்பான குறும்பதிவுகளை காண வேண்டும் என்றால் டாப்சையில் தேடிக்கொள்ளலாம். ரஜினியின் எந்திரன் வெளியான போது என்ன ரியேக்ஷ்ன இருந்தது சச்சின் நூறாவது சதம் அடிப்பதற்கு தருமாறிக்கொண்டிருந்த போது டிவிட்டரில் என்ன விதமான உரையாடல் நடந்தது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளலாம்.

அதே போல சசி தரூர் முதன் முதலில் டிவிட்டரில் சர்ச்சையில் சிக்கி பத‌வியை இழந்த போது வெளியான குறும்பதிவுகள், நரேந்திர மோடி பிரதமர் கனவை வெளியிட்ட போது பதிவான கருத்துக்கள் என சக்லத்தையும் திரும்பி பார்க்கலாம்.

டாப்சையின் தேடல் வசதி தெளிவாகவும் விரிவாவும் உள்ளது. தேடல் பதத்தை டைப் செய்து விட்டு புதிய பதிவுகள் வேண்டுமா பழைய பதிவுகள் வேண்டுமா என குறிப்பிட்டு தேடலாம். இவ்வளவு ஏன், போன மாதத்து குறும்பதிவுகள் தேவை என்றோ போன வருடத்து குறும்பதிவுகள் தேவை என்றோ குறிப்பிட்டு தேட முடியும்.

இவற்றை தவிர குறுபதிவுகளில் வெளியான இணைப்புகள் ,புகைப்படங்கள் வீடியோக்களையும் தனியே தேடலாம்.பல்வேறு மொழிகளிலும் தேட்லாம்.

டிவிட்டர் உலகின் மனசாட்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதில் உடனுக்குடன் எல்லா நிகழ்வுகள் தொடர்பான பதிவுகளும் வெளியாகி வரும் நிலையில் இந்த பதிவுகளில் தேடிப்பார்க்க கூடிய வசதி மிகவும் முக்கியமானது .

டிவிட்டர் பதிவுகளை தேட: http://topsy.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “எல்லா டிவீட்களையும் தேடலாம்: டாப்சை தரும் புதிய வசதி.

  1. அன்பின் சிம்மன் – நல்லதொரு தகவல் பகிர்வினிற்கு நன்றி – பயனுள்ள தகவல் – பயன்படுத்துவோம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே. டிவிட்டரில் வேலையும் தேடலாம்.இதோ அழகான உதாரணம். http://www.twitjobsearch.com/

      Reply
  2. அன்பின் சிம்மன் – வேலை தேடினேன் – அலெர்ட் கிரியேஷனில் பிரசனி இருக்கிறாது – பார்த்துக் கொள்கிறேன் = பயனுள்ள தகவல் – எனக்குத் தேவைப்படாது – வேலை தேடும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் – பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *