டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை வெளியிடும் இந்த சூடான தன்மை உற்சாகத்தை தரும். ஆனால் இந்த செய்தியே ஆறின கஞ்சியாகி போன பின் அது தொடர்பான குறும்பதிவு என்ன பயனை தரக்கூடும்.
இப்படி நமது டிவிட்டர் கால வரிசையில் திரும்பி பார்த்தால் சில குறும்பதிவுகள் அவற்றின் காலம் முடிந்து போய் வெற்றுப்பதிவாக காட்சி தரலாம்.உதாரணத்திற்கு குறிப்பிட்ட இணையதளம் ஒன்றில் தள்ளுபடி சலுகை தரப்படும் தகவலை நீங்கள் பகிர்ந்திருக்கலாம்.அப்போது அது பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்.ஆனால் இப்போது தள்ளுபடி காலம் முடிந்த பிறகு அந்த குறும்பதிவு எதற்கு? இப்படி நிறைய உதாரணக்களை சொல்லலாம். இது போன்ற கால வரையரை கொண்ட குறும்பதிவுகளை வெளியிட்டு விட்டு அவற்றின் பயன்பாடு காலம் முடிந்த பிறகு அவை தானாகவே டெலிட் செய்யப்பட்டு விடும் வசதி இருக்கிறது தெரியுமா? ஸ்பிரிட் சேவை இந்த வசதியை தருகிறது.
டிவிட்டர் முன்னாள் ஊழியரான பியரி லெக்ரெய்ன் இந்த சேவையை உருவாக்கியுள்ளார். இந்த சேவை ஒரு ஹாஷ்டேக் மூலம் குறும்பதிவுகள் தானாக டெலிட் ஆக வழி செய்கிறது.
எப்படி என்றால், எந்த குறும்பதிவுகள் எல்லாம் கல வரையரை கொண்டவையோ அவற்றுடன் அந்த கால வரையரை ஹாஷ்டேகாக குறிப்பிட்டால போதும் அந்த காலம் முடிந்தவிடன் அவை காணாமல் போய்விடும். உதாரணத்திற்கு ஒரு குறும்பதிவுடன் #4டி என்று குறிப்பிட்டால் அந்த பதிவு 4 நாள் முடிந்தவுடன் டெலிட் ஆகிவிடும். இதே போல மணிக்கணக்கையோ நிமிடக்கணக்கையோ கூட குறிப்பிடலாம்.
சுவாரஸ்யமான சேவை. ஒவ்வொருவரும் தங்கள் குறும்பதிவு முறைக்கு ஏற்ப புதுமையான முறையில் கூட இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
இணைய முகவரி: http://twitterspirit.com/
——–
இதே போலவே இமெயிலுக்கும் உள்ள சேவை பற்றிய பதிவை இங்கே படிக்கலாம். :http://cybersimman.wordpress.com/2010/04/08/email-7/

2 Comments on “உங்கள் டிவிட்டர் பதிவுகள் தானாக டெலிட் ஆகவேண்டுமா?”
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – அரிய தகவல் – பயனுள்ள தகவல் – இருப்பினும் பயன் படுத்த சோம்பேறித்தனம் தடுக்கும். தேவையா – இருந்து விட்டுப் போகட்டுமே என்ற மனப்பான்மை உள்ள நாம் இதனைப் பயன் படுத்துவோமா ? பயன் படுத்த முயல்வோம் . நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
உணமை தான். ஆனால் காலாவதியான குறும்பதிவுகளை சங்கடமாக நினைப்பவர்களுக்கு இது உதவும்.
அன்புடன் சிம்மன்