ஹூ,வாட்,வேர் உள்ளிட்ட ஐந்து விஷயங்களை செய்திக்கான அடிப்படையாக இதழியல் பாலபாடத்தில் சொல்லித்தருவார்கள். கய் கவாஸாகி இப்படி இமெயிலுக்கான ஐந்து விஷயங்களை முன் வைத்திருக்கிறார். கய் கவாஸாகி இணைய எழுத்தாளர், முதலீட்டாளர் ,இணைய தொழில் முனைவோர் என பல முகங்களை கொண்டவர். அவர் புதிதாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஏ.பி.இ: ஆத்தர்,பப்ளிஷர்,எனடர்பிரனர் ,இது தான் புத்தகத்தின் தலைப்பு.
இந்த புத்தகத்தில் தான் தான் அவர் இமெயிலுக்கான இலக்கணத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.
எந்த ஒரு இமெயிலும் ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பது தான் அவர் சொல்லும் இலக்கணம். அந்த ஐந்து கேள்விகள்
வ
ரி
சை
யா
க…
1.நீங்கள் யார்?
2. உங்களுக்கு என்ன வேன்டும்?
3.நீங்கள் ஏன் என்னை கேட்கிறீர்கள்?
4.நான் ஏன் நீங்கள் கேட்பதை செய்ய வேண்டும்?
5.அடுத்ததாக என்ன?
இந்த ஐந்து கேள்விகளுக்கும் ஒருவர் அனுப்பும் இமெயில் பதில் அளிக்கும் வகையில் இருந்தால் அந்த மெயில் பதில் அளிக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக கவாஸாகி சொல்கிறார்.
ஒரு புத்திசாலித்தனமான மனிதர் தனக்கு வரும் இமெயிலுக்கு பதில் அளிக்கலாமா வேண்டாமா என தீர்மானிக்க இவை போதுமானவை என்கிறார் அவர்.
கவாஸாகி சாதாரணமானவர் இல்லை.முதலீட்டாளராக அவரது ஆதரவு கேட்டு ஆயிரகணக்கில் அவருக்கு இமெயில் வருகிறது.அவற்றுக்கு பதில் அளிக்கும் அனுபவத்தில் இந்த இமெயில் இலக்கணத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். எனவே அவர் சொல்வதை தாராளமாக நம்பலாம்.
காவாஸாகி இமெயில் அனுப்பும் கலையை மேம்படுத்த மேலும் சில எளிமையான விஷ்யங்களையும் முன் வைத்துள்ளார். அது பற்றி அடுதத அல்லது அதற்கு அடுத்த பதிவில்.இப்போதைக்கு இதை அடையாளம் காட்டிய லைப்ஹாக்கருக்கு நன்றி.

2 Comments on “எந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்.”
Cheena ( சீனா )
அன்பின் சிம்மன்
அரிய தகவல்கள் – இமெயில் இலக்கணங்கள் – பொறுத்திருப்போம் அடுத்த பதிவினிற்கு – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
இமெயில் இன்னும் ஆச்சரயத்துக்குறியதாக இருப்படு தான் ஆச்சரயம். அதனிடம் இன்னும் புதுமை மிஞ்சியிருக்கிறது.தொடர்ந்து பார்ப்போம்.வியப்போம்.
அன்புடன் சிம்மன்