ட்விட்டரில் கிரேக்க மேதை சாக்ரட்டீஸ் !

socrates_big_biggerஇப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறியதாகவே இருக்கிறது. அது மட்டுமா ட்விட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் ? டிவிட்டரின் தனித்தன்மை என்ன என்றும் ஆலோசனை சொல்லும் வகையிலும் இருக்கிறது.  என்ன , சாக்ரெட்டீஸின் டிவிட்டர் பக்கமா ? என ஆச்சர்யப்பட வேண்டாம் ! கிரேக்க மேதை சாக்ரெட்டீஸ் பெயரில் யாரோ ஒருவர் பொறுப்பாக அமைத்திருக்கும் டிவிட்டர் பக்கம் தான் இது.

டிவிட்டரில் இது புதிதும் இல்லை. உங்கள் பெயரில் டிவிட்டர் கணக்கை அமைத்துக்கொள்ளலாம். அதே போலவே மறைந்த மேதைகளின் பெயரிலும் அவர்கள் சார்பாக குறும்பதிவிடலாம்.

இப்படி யாரோ ஒருவர் சாக்ரெட்டீஸ் பெயரில் டிவிட்டர் பக்கத்தை அமைத்திருக்கிறார். மேதைகளின் பெயரில் குறுபதிவிடுவதும் எளிதானது தான். அவர்களின் மேற்கோள்களையோ ,வாழ்க்கை தகவல்களையோ குறுன்பதிவுகளாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த டிவிட்டர் சாக்ரெட்டீசும் இதை தான் செய்கிறார். ஆனால் சாக்ரெட்டீசின் பொன்மொழிகளை அப்படியே பகிர்ந்து கொள்வதில் திருப்தி அடையாமல், அதில் ஒரு சின்ன மாற்றத்தை செய்து டிவிட்டர் மொழியாக மாற்றி பகிர்ந்து கொண்டு வருகிறார். விளைவு சாக்ரெட்டீசின் டிவீட் மொழிகளாக அவை மின்னுகின்றன.

உதாரணத்திற்கு இந்த டிவீட்டை பாருங்கள்: உங்களை நீங்கள் அறிய டிவீட் செய்யுங்கள் !

இன்னொரு டிவீட்டை பார்ப்போமா ? பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத வாழ்க்கை டிவீட் செய்ய ஏற்றதல்ல.

டிவீட் செய்வது பெரிய விஷயமல்ல: ஆனால் சரியாக டிவீட் செய்ய வேண்டும்! . இது இன்னொரு குறும்பதிவு.

எல்லாமே சாக்ரெட்டீஸ் மொழிகள் தான், ஆனால் டிவிட்டர் காலத்துக்காக கொஞ்சம் வளைக்கப்பட்டது. சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

2007 ம் ஆண்டியில் இருந்து இந்த சாக்ரெட்டீஸ் டிவிட்டரில் இருக்கிறார். ஆனால் மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் செய்திருக்கிறார். இருந்தாலும் தொடர்ந்து குறும்பதிவிட்டு வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் சாக்ரெட்டீஸ் மேற்கோள்களை அப்படியே டிவீட் செய்து வந்த டிவிட்டர் பக்கம் 2010 ம் ஆண்டில் துவக்கப்பட்டு அதே ஆண்டே கைவிடப்பட்டு கிடக்கிறது. (https://twitter.com/socratesquotes ) அதை நடத்தி வந்த இணைய மொன்மொழி தளத்தையும் காணவில்லை. அப்படி பார்தால் இந்த சாக்ரெட்டீஸ் பக்கம் பரவாயில்லை.

டிவிட்டர் கணக்கு என்று இருந்தால் அதற்கான அறிமுகமும் இருக்க வேண்டும் அல்லவா? அதாவது டிவிட்டர் செய்பவர் யார் எனும் அறிமுக குறிப்பு! ” ஒன்றும் அறியாதவன், பேச்சாளர், விஷ பானத்தை அருந்தியவன், நான் ஏதென்ஸ்வாசி அல்ல! என்கிறது டிவிட்டர் சாக்ரெட்டீசின் அறிமுகம். சாக்ரெட்டீசை அறிந்தவர்களுக்கு இந்த அறிமுகம் துல்லியமானது என்று தெரியும்.

சாக்ரெட்டீசுக்கு 6,317 பின் தொடர்பாளர்கள் தான் இருக்கின்றனர். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்களேன்.

சாக்ரெட்டீசை பின்
தொடர:
https://twitter.com/Socrates

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *