ட்விட்டரில் இணையும் அமெரிக்க அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. முன்னாள் அதிபரான ஜார்ஜ் எச்.டபில்யு புஷ் சீனியர் ட்விட்டரில் தற்போது இணைந்துள்ளார். நெல்சன் மண்டேலா நினைவாக வெளியிட்ட முதல் குறும்பதிவுடன் அவர் ட்விட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
குறும்பதிவு சேவையான ட்விட்டர் பிரபலங்களாலும் உலக தலைவர்களாலும் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமாவும் ட்விட்டரில் தீவிரமாக இருக்கிறார். முன்னாள் அதிபரான பில் கிளிண்டனும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தான் கிளிண்டன் ட்விட்டரில் நுழைந்தார்.
இப்போது மற்றொரு முன்னாள் அதிபரான ஜார்ஜ் எச்.டபில்யு புஷ் சீனியர் ட்விட்டருக்கு வந்திருக்கிறார். நெல்சன் மண்டேலா நினைவாக அவர் தனது முதல் குறும்பதிவை வெளியிட்டார். ’ மண்டேலாவுக்கு மரியாதை செலுத்த செல்லும் அமெரிக்க குழுவுடன் நாங்களும் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நானும் , பார்பராவும், ( மனைவி) கருதுவதாக அவர் அதில் தெரிவித்திருந்தார். அவரும் , அவரது நாட்டு மக்களும் தங்கள் பிராத்தனையில் நிறைந்திருப்பதாகவும் புஷ் கூறியிருந்தார்.
புஷ் சீனியரின் இந்த குறும்பதிவு வெளியான கொஞ்ச நேரத்தில் எல்லாம் ,இந்த கணக்கு அதிகாரப்பூர்வமானது தான் என்று ட்விட்டர் நிர்வாகம் உறுதி செய்தது.
புஷ் சீனியருக்கு முதல் சில மணி நேரங்களில் 30, ஆயிரத்துக்கும் மேல் பின் தொடர்பாளர்கள் கிடைத்துள்ளனர்.
புஷ்சின் மகனும் முன்னாள் அதிபருமான ஜார்ஜ் புஷ் இன்னும் டிவிட்டருக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் மாளிகை நூலகம் வழியே அவருக்கு ட்விட்டர் கணக்கு இருந்தாலும் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு இல்லை. ஆனால் அவரை கலாய்க்கும் வகையில் பல ட்விட்டர் முகவரிகள் இருக்கின்றன.
ஜார்ஜ் புஷ் சீனியர் ட்விட்டர் கணக்கு: https://twitter.com/GeorgeHWBush
————–
கைத்தட்டுங்கள் பிளிஸ், இது ட்விட்டர் தொடர்பாக எனது 200 வது பதிவு.